அமெரிக்க அதிபரின் தலையாய கடமை


அமெரிக்காவில்:

  • எவருக்கு வாக்களிக்க உரிமை இருக்கிறது (ஆண்கள், பெண்கள், கறுப்பர், குடிபுகுந்தோர், குற்றம் புரிந்தோர் போன்ற பிரிவுகளில்) என்று யார் அறிவுறுத்துகிறார்கள்?
  • எது சுதந்திரம் (துப்பாக்கி வைத்துக் கொள்ளுதல், கருவைத் தக்க வைத்துக் கொள்ளுதல் அல்லது சுயமாக நிர்ணயம் செய்வது போன்ற பிரச்சினைகளில்) என்று எவர் முடிவெடுக்கிறார்கள்?
  • சமூக நீதியை (சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு, ஆண்/பெண் ஏற்றத்தாழ்வு, வந்தேறிகளுக்கும் குடிமகன்களுக்கும் இடையே வித்தியாசங்களை) பரிபாலிப்பவர் யார்?
  • இன்ன பிற (சுற்றுச்சூழல் மாசு, புகை பிடித்தல், நோய்க்கான மருந்து போன்றவற்றில் நிறுவனங்களுக்கும் அரசாங்கத்துக்கும் தனிமனிதனுக்கும் இடையே உள்ள பொறுப்பை) தீர்மானிப்பது எங்கே?

எல்லாக் கேள்விக்கும் விடை: அமெரிக்க உச்சநீதிமன்றம்

இதில் ஒன்பது நீதிபதிகள் அமர்ந்து முடிவெடுக்கிறார்கள். 88 வயதான ஜான் பால் ஸ்டீவன்ஸ் கூடிய சீக்கிரமே ஓய்வெடுப்பார் என்று நம்பப்படுகிறது. அவரின் இடத்தை நிரப்புவது அடுத்த அதிபரின் மிக முக்கிய கடமை.

புஷ் அதிபராக இருந்தபோது இரண்டு பாரம்பரிய (பழமைவாத) நீதிபதிகளை மெகயினின் அருந்துணையோடு அமர்த்தினார்.

மெகயின் அதிபரானால் கலாச்சார காவலர்களில் கை வலுப்படும். ஒபாமா வந்தால் தாராள சிந்தனை உள்ளவர் வருவார்.

இது இன்றைய நிலை:

மெகயின் அதிபரானால் என்னவாகும்? அலசல்: வால் ஸ்ட்ரீட் ஜர்னல் – Shifting Median: A McCain Supreme Court

ஒபாமா அதிபரானால்… ஆய்வு: Dissenting Opinions on the Supreme Court’s Future: See what an Obama Supreme Court might look like.

4 responses to “அமெரிக்க அதிபரின் தலையாய கடமை

  1. வோர்ட்ப்ரெஸ்.காம்- இல் ஸ்க்ரிப்ட்கள் இயங்காதே? எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். செய்து விடலாம்.

    இன்னொருபுறம் யோசித்தால், தேர்தல் முடிந்துவிடும். ஆனால், முடிவு எளிதில் வெளியாகிவிடுமா 😉

  2. எல்லாம் நவம்பர் 4 க்கு அப்புறம் பேசிக்கலாம் விடுங்க. 🙂

  3. Bush, Though Not Campaigning, Delivers a Message to Voters – ‘Judges Matter’ – NYTimes.com: When he ran for office in 2000, President Bush vowed to appoint “more judges like Clarence Thomas and Antonin Scalia.

    “The lesson is clear: Judges matter to every American,” Mr. Bush told members of the Federalist Society, a conservative legal group, after ticking off a list of narrowly decided Supreme Court decisions, including two he regards favorably — one upholding a ban on the medical procedure critics call partial-birth abortion, and another overturning a ban on gun ownership in the District of Columbia.”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.