அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர், ஒபாமா தேர்வு செய்யப்பட்டால், அமெரிக்காவின் பொருளாதாரம் சீரடையும் என நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளாதார வல்லுநர் அமர்தியா சென் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. இதற்கான அனல் பறக்கும் விவாதங்களிளும் குடியரசு கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளர் மெக்கெய்னும், ஜனநாயக கட்சி அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒபாமாவும் ஈடுபட்டு ஓய்ந்துள்ளனர். இந்நிலையில், ஒபாமாவுக்கு அதிபராக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாக வருகின்றன.
அமெரிக்க பொருளாதாரம் குறித்து நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென் கூறியதாவது :
ஏற்கனவே அமெரிக்க பொருளாதாரம் மந்தமான நிலையில் உள்ளது. கடுமையான நிதிச்சுழலில் அமெரிக்கா சிக்கியிருப்பது உலக அரங்கில் அனைவரும் அறிந்ததே, ஆனால், எவ்வளவு ஆழமான பொருளாதார பின்னடைவை அமெரிக்கா சந்தித்துள்ளது என்பது தான் கேள்வி.
ஒரு நாட்டின் பொருளாதாரம், அந்நாட்டு மக்கள் எப்போது அந்த அரசின் மீதான நம்பிக்கையை இழக்கின்றனரோ அப்போது தான் வீழ்கிறது. இது தான் அமெரிக்காவில் நடந்துள்ளது. நம்பிக்கை இழக்கும் போது செயலாக்கமும் குறைகிறது. செயலாக்கம் குறைந்தால் தொடர்ச்சியாக பொருளாதாரமும் சரிகிறது.
ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஒபாமா மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய திறமை பெற்றவர். எப்போதும் இயல்பாக காட்சியளிக்கும் ஒபாமா எளிதில் பிரச்னைகளை சமாளிப்பார். நம்பிக்கை இன்மையால் அதல பாதளத்துக்கு சென்ற பொருளாதாரம், நம்பிக்கை துளிர்க்கும் போது அதீத வளர்ச்சி அடையும். அமெரிக்க பொருளாதார சிக்கல், வெளியே இருந்து ஏற்படுத்தப்பட்டதல்ல, நம்பிக்கை தளர்ச்சியால், உள்ளூர உருவாக்கப்பட்டது.
இவ்வாறு அமர்தியா சென் கூறியுள்ளார்.
நன்றி: தினமலர்
மேலும் விவரங்களுக்கு:
1. Amartya backs Obama, hope he can infuse confidence in economy: PTI
2. ‘Cool’ Obama win will warm up things in recession-hit US: – Hindustan Times
3. The Hindu : Front Page : Amartya Sen puts his faith in Obama: ““He can start playing a major role and recreate confidence””
38 டாலர் வரை குறைந்து டப்பா டேன்ஸ் ஆடிய டாலரின் மதிப்பு இன்று ஏகத்துக்கும் ஏறிவிட்டது. உண்மையில் மென்பொருள் உள்ளிட்ட சில துறைகளில் அமெரிக்கர்கள் சுதாரித்துக்கொண்டதால் இந்தியப்பொருளாதாரம்தான் கிழிந்து கொண்டிருக்கிறது. பெரிய மென்பொருள் நிறுவனங்கள்கூட ஆட்குறைப்பு செய்துவருவதே இதற்கு கண்கண்ட சாட்சி
செல்வேந்திரன் (: 😦