6. வேட்டி-சட்டை, குர்தா-பைஜாமா: ஒபாமா/மகயின் – எவருக்கு எது பொருத்தமாக இருக்கும்?
பெருந்தலைகள் தீவிரமான விவாதிக்கும் பதிவில் எதுக்கு என்னைக்கேள்வி கேட்டு இடுகை போடறீங்கன்னு புரியுது. இருந்தாலும் நானும் தீவிரமாத்தான் பதில் சொல்லப்போறேன். அவங்க ரெண்டு பேரையும் தேர்ந்தெடுக்க சொன்னா அடாவடியான மெக்கெயின் வேட்டிய மடிச்சுக்கிட்டு இறங்கவும், ஹார்வார்ட் ஒபாமா சேட்டு மாதிரி குர்தா பைஜாமாவும் தான் தேர்ந்தெடுப்பார்கள்.
Presidential makeoverஆ ரெண்டு பேரையும் இந்தியனா மாத்தணும்னு என்னை தேர்ந்தெடுக்க சொன்னதால அவங்க உடல்வாகு பின்னணி பாத்து முடிவு பண்ணுவோம். ஒபாமாவை மெக்கயினோட பாத்தா கருணாநிதியையும் ஸ்டாலினையும் பாக்கறா மாதிரி இருக்கு. அவ்வளவு Generation Gap ரெண்டு பேருக்கும்.
ஒபாமா தென்னக மக்களை போல கறுநிறத்தை கொண்டவர் அவருக்கு வெள்ளை வேட்டி சட்டைய போட்டா நல்லா இருக்கும். அவரும் (அரசியலுக்கு) சின்ன பையன் மாதிரி இருக்காறா அதனால ஒரு பெரிய ஆள் கெத்து குடுக்க அதுதான் சரிவரும். ஏற்கனவே ஒல்லியா இருக்கறவருக்கு குர்தா பைஜாமா போட்டா சைடுல ஒரு ஜோல்னா பைய தொங்கவிட்டு ‘ஆங் நீங்க சரியாத்தான் சொல்றீங்கன்னு மண்டை மண்டைய ஆட்டறமாதிரி’ கிண்டலா ஒரு விளம்பரம் பண்ணுவாங்க மெக்கெயின் ஆளுங்க. அதுனால ஒபாமாவுக்கு வேட்டி சட்டை.
மெக்கெயினு கொழுத்த பணக்காரர். நல்ல எங்கூரு மிலான்சந்த் சேட்டு மாதிரியே இருக்கார் பாக்கறதுக்கும். அவருக்கு வேட்டி சட்டை போட்டா போண்டா மணி மாதிரி இருக்கும். அதனால மக்கெயின்னுக்கு பைஜாமா குர்தா.
7. தற்போது நடக்கும் பொருளாதாரப் பிரச்சினையினாலும் திடீரென்று கிடைத்த அறிவியல் முன்னேற்றத்தாலும் அமெரிக்க தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுகிறது. மறைந்த புகழ்பெற்ற தலைவரை ஜனாதிபதியாக்க முடிவெடுக்கிறார்கள். எவர் பொருத்தமானவர்? ஏன்?
– சத்யா
பேசறதைப் பார்த்தா ஒபாமா வந்து கருணாநிதி மாதிரி மெக்கெயின் வந்து துரைமுருகன். என்ன சொல்லறீங்க? 🙂
😀
கனிமொழி – ஒபாமா
இராமதாஸ் – மெகயின்
காடுவெட்டி குரு – சாரா பேலின்
ப சிதம்பரம் – ஜோ பைடன்
ஜெயலலிதா – ஹில்லரி க்ளின்டன்
வாஜ்பாய் – பில் க்ளின்டன்
தயாநிதி மாறன் – புஷ்
கலாநிதி மாறன் – அப்பா புஷ்
முரசொலி மாறன் – டிக் சேனி
எம்ஜியார் – ஆர்னால்ட் ஷ்வார்ஜெனகர் 🙂
படங்கள் சூப்பர்.
மெக்கெயினை குர்த்தாவில் பார்த்தா லாலு பிரசாத் யாதவ் போல இருக்கார்.
ஆனா அவரால பெட்டியெல்லாம் இவ்வளவு உயரமா தூக்க முடியாதுங்க.
OBama = VAiko