அடுத்த அதிபராக எவர் பொருத்தம்? – சத்யா


4. செனேட்டராக இருந்தபோதே தற்போதைய வீட்டுக்கடன் பிரச்சினையையும் அதன் மேலெழுந்த நிதிநிலை மதிப்பீடு நிலைகுலைவையும் கண்டுணர முடியாத ஒபாமாவா? இராக் மீது போர் தொடுத்தால் ஓரிரண்டு நாளில் அமெரிக்காவின் கடமை முடியும் என்று கணித்த மெகயினா? இருவரில் உங்கள் தேர்வு எவர்?

எனக்கு அமரிக்காவில் ஓட்டுரிமை இல்லை. அதனால் என்னுடைய உள்ளார்ந்த ஈடுபாடு ஒரு வேடிக்கை பார்ப்பவனின் மனநிலையே. அதனால் இந்த பதிலை அந்தக்கண்டோத்தில் பார்க்க கேட்டுக்கொள்கிறேன்.

ஆரம்பத்தில் ஒபாமாவின் பேச்சுக்களும் மாற்றம் மாற்றம் என்னும் தாரக மந்திரமும் சரியாக இருந்தாலும் கடந்த மூன்று மாதங்களில் மீடியாக்களின் ஆராதனைகளையும் தாண்டி மெக்கெயின் மெள்ள மெள்ள எனக்கு ஏற்றவராக தோன்றுகிறார்.

அதுவும் இந்த எழுநூறு பில்லியன் விவகாரத்தில் ஒபாமா எடுத்த முடிவு அவர் மாறுபட்டவரல்ல என்றே தோன்றுகிறது. இதில் ஆழமான பல பிரச்சனைகள் இருக்கின்றன.

ஒருபக்கம் சட்டென பாதிக்கப்பட வாய்ப்புக்கூடிய ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இன்னொரு புறம் டாலரை மீட்டெடுக்க இதையே சரியான வாய்ப்பாக பயன்படுத்தி இருக்கக்கூடிய வாய்ப்பு இரண்டையும் ஒரு சேர சமாளிக்க பெரும் திறனும் தேவை. ஒபாமாவும் தேசமும் விரும்பும் மாற்றத்துக்காக சரியான திட்டங்களின் மூலம் இதை சாத்தியமாக்கி இருக்கலாம்.

ஒரு பெரும் தலைவனிடம் அதையே தேசம் எதிர்ப்பாக்கிறது.இதில் அனுபவமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. மாற்றி மாற்றி பேசுவது நேருக்கு மாறாக உண்மையை சொல்வது என்று அவர் அடிக்கும் குட்டிகரணங்களை ஊடங்கள் மிகவும் இருட்டடிப்பு செய்வதாகவே தோன்றுகிறது.

குறைந்தபட்சம் சொன்ன சொல்லிலேயே நிற்கிறார் மெக்கெயின். தன் கட்சிக்காரர்களையே அவர் பகைத்துகொண்டு எடுத்த முடிவுகளும் பேலினை கொண்டுவந்து மீண்டும் கவனத்தை திரும்பவைத்த சாதுரியமும் அரசியலுக்கு மிகவும் தேவை.

பேலினையும் பேடனையும் சுற்றி நடக்கும் நாடகங்களை ஒரு aberrationஆக தேவையில்லாத இரைச்சலாகவே நான் பார்க்கிறேன். இருவருமே டிக் சேனி போல அதிகாரத்தை பயன்படுத்துவார்கள் என்று தோன்றவில்லை.

ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரும் முன்வைக்கும் யோசனைகளும் திட்டங்களும் ஆழமின்றி வெறும் outline அளவிலேயே இருக்கின்றன. அதில்கூட பிரமிக்கதக்க மாற்றங்களை இருவருமே முன்வைத்ததாக தோன்றவில்லை. இதில் மாற்றத்தை கொண்டுவருவேன் என்று முழங்கிய ஒபாமா இன்னும் அதிகமாக கவனம் செலுத்தி இருக்கவேண்டும்.

இப்படி இருவருமே மிகவும் சாதாரண வேட்டபாளர்களாக இருக்கையில் டாலர், இரண்டு போர்கள், தடுமாறும் பொருளாதாரம், நசுங்கிப்போயிருக்கும் வெளிநாட்டு உறவுகள் என்று கழுத்தை நெரிக்கும் வேளையில் இந்த தேசம் அனுபவம் குறைந்த ஒருவரை தேர்ந்தெடுப்பது எந்த வகையில் சிறந்ததாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இது போன்ற பெரும் பிரச்சனைகளுக்கிடையில் ஒரு தேர்தலை அமரிக்கா சமீபகாலங்களில் சந்தித்து இருக்காது. இக்கட்டான இந்த சூழ்நிலையில் ஆற்றலும் பெரும் சிந்தனை மாற்றத்தை கொண்டு வருவதற்கான ஒரு வசீகரம் மிக்க தலைவன் தேவை. இது ஒரு redifining moment. அந்த அளவிற்கான வேட்பாளர்களாக இருவருமே இல்லை.

இன்னும் ஒரு மாதத்தில், ஒபாமா, என்ன இருந்தாலும் பழமைவாதத்தில் ஊறிய மிகப்பெரிய demographyயான white anglo saxon நடுத்தர மக்கள் கூட்டம் ஒபாமா ஏற்றுக்கொள்வதில் இருக்கும் மனத்தடைகள் சரிசெய்யவும், பிரச்சனைகளை பற்றிய தெளிவான பார்வைகளையும் திட்டங்களையும் முன்வைத்து ஒரு பெரும் அலையை ஏற்படுத்தக்கூடய ஆற்றலை வெளிக்காட்டாவிட்டால் என் ஓட்டு மெகயினுக்கே.

5. ஒபாமா 98% ஜனநாயகக் கட்சியின் கொறடா/வழிகாட்டலின் படி செனேட்டில் வாக்களித்திருக்கிறார். ஜான் மகயின் 90% புஷ்ஷோடு ஒத்துப் போய் இருக்கிறார். இவர்களுக்கு ‘மாற்றம்’ தாரக மந்திரத்தையும் ‘மேவ்ரிக்’ பட்டத்தையும் வைத்துக் கொள்ள என்ன தகுதி உள்ளது? Bipartisan என்று முழங்கினாலும் செய்கையில் அதை நிரூபிக்காதவர்களின் அடுத்த நான்கு வருடங்கள் புஷ்ஷோடு ஒப்பிட்டால் எவ்வாறு வேறுபடும்?

சத்யா

3 responses to “அடுத்த அதிபராக எவர் பொருத்தம்? – சத்யா

 1. ஒரு பெரும் தலைவனிடம் அதையே தேசம் எதிர்ப்பாக்கிறது.இதில் அனுபவமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. மாற்றி மாற்றி பேசுவது நேருக்கு மாறாக உண்மையை சொல்வது என்று அவர் அடிக்கும் குட்டிகரணங்களை ஊடங்கள் மிகவும் இருட்டடிப்பு செய்வதாகவே தோன்றுகிறது.
  //

  Is that Obama or Mccain? I haven’t seen anything the news about Obama?. Let us know if he hasn’t stood by his (Obama) comments.

  Who is the one who strongly stated that “Our fundamental of economy is strong” till a day before Lehman collapsed? Then he took a U turn and even blamed the the current Bush government for this crisis.

  //குறைந்தபட்சம் சொன்ன சொல்லிலேயே நிற்கிறார் மெக்கெயின். தன் கட்சிக்காரர்களையே அவர் பகைத்துகொண்டு எடுத்த முடிவுகளும் பேலினை கொண்டுவந்து மீண்டும் கவனத்தை திரும்பவைத்த சாதுரியமும் அரசியலுக்கு மிகவும் தேவை.
  //

  Again , this political stunt didn’t help him to retain the surge.

  //இப்படி இருவருமே மிகவும் சாதாரண வேட்டபாளர்களாக இருக்கையில் டாலர், இரண்டு போர்கள், தடுமாறும் பொருளாதாரம், நசுங்கிப்போயிருக்கும் வெளிநாட்டு உறவுகள் என்று கழுத்தை நெரிக்கும் வேளையில் இந்த தேசம் அனுபவம் குறைந்த ஒருவரை தேர்ந்தெடுப்பது எந்த வகையில் சிறந்ததாக இருக்கும் என்று தோன்றுகிறது.
  //

  Who has brought these? It is the one who called himself as “Experienced”. Palin’s experience is very pathetic. It is better to be nothing than nonsense.
  To become president, he doesn’t need to be a experienced but has to be a visionary, decision maker, temperament.

  // இன்னும் ஒரு மாதத்தில், ஒபாமா, என்ன இருந்தாலும் பழமைவாதத்தில் ஊறிய மிகப்பெரிய demographyயான white anglo saxon நடுத்தர மக்கள் கூட்டம் ஒபாமா ஏற்றுக்கொள்வதில் இருக்கும் மனத்தடைகள் சரிசெய்யவும், பிரச்சனைகளை பற்றிய தெளிவான பார்வைகளையும் திட்டங்களையும் முன்வைத்து ஒரு பெரும் அலையை ஏற்படுத்தக்கூடய ஆற்றலை வெளிக்காட்டாவிட்டால் என் ஓட்டு மெகயினுக்கே.
  //

  First of all McCain has to retain the RED state and Anglo Saxon supporter. Wherever Bush won the election with a margin of 10% ,right now McCain is in the state of conceding to Obama.

  என்னோட ரெண்டனா,
  So far in the recent campaign which I have seen, McCain is riling up the crowd which will never help him get the support of the indecisive voter. He has to cheer up the crowd and inject the enthusiasm to win the election like OBAMA.

 2. —குறைந்தபட்சம் சொன்ன சொல்லிலேயே நிற்கிறார் மெக்கெயின்

  தப்பென்று தெரிந்த பிறகும் தொடர்ந்து செய்யாமல், நிறுத்தி — திருத்திக் கொள்வது பாராட்டத்தக்கது.

  * தடாலடியாக பிரச்சாரத்தை நிறுத்துவேன் என்பது;
  * டேவிட் லெட்டர்மேனுக்கு வரமாட்டேன் (ஆனால் அதே சமயம் இன்னொரு பேட்டி கொடுப்பேன்) என்பது;
  * எதிர்மறை பிரச்சாரம் செய்யமாட்டேன் வாக்குறுதி கொடுத்துவிட்டு, இன்னொரு பக்கம் ஆதரவாளர்களை உசுப்பி விடுவது….

  முரண்களின் தாயகம் மெகயின்.

  —பேலினை கொண்டுவந்து மீண்டும் கவனத்தை திரும்பவைத்த சாதுரியமும் அரசியலுக்கு

  தகுதியானவரைக் கொண்டு வந்தால் சாமர்த்தியம். பேந்த பேந்த விழிப்பவரை அதிபர் தேர்தலில் நிறுத்துவது சாணக்கியத்தனமான சூட்சமம். ஆனால், அதிபருக்கு பொருத்தம் ஆகாது.

  —டிக் சேனி போல அதிகாரத்தை பயன்படுத்துவார்கள் என்று தோன்றவில்லை.

  பேலின் சர்வ நிச்சயமாய் இன்னொரு புஷ். ‘என்ன செய்கிறோம்? எதற்காக செய்கிறோம்?’ என்னும் பிரக்ஞயே இல்லாதவர்.

  அலாஸ்காவிலேயே சிலரின் கைப்பிடிக்குள் சிக்கி அவர்கள் பேச்சுக்கேற்ப நடந்து கொண்டிருக்கிறார் என்னும் ஆதாரங்கள் மிரள வைக்கிறது.

  பேலின் என்பவர் டிக் செனி ஆக மாட்டார். ஆனால், புஷ் போல் தலையாட்டி பொம்மையாக என்ன முடிவெடுக்கிறோம் என்பதன் அர்த்தம் புரியாமலே செய்துவிடுபவர்.

  —ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரும் முன்வைக்கும் யோசனைகளும் திட்டங்களும் ஆழமின்றி வெறும் outline அளவிலேயே இருக்கின்றன.

  அதிபருக்கு அவ்வளவுதான் பவர். நீதிபதிகளை நியமிப்பது முக்கிய தொழில். மற்ற வேலை எல்லாம் ஆளுமை/இமேஜ் சார்ந்தவை.

  யாரைப் பார்த்தால் உலகத்துக்கு ‘நம்பகமானவர்; வல்லவர்; நீடித்து இருப்பவர்’ என்னும் உற்சாகம் கலந்த தலைமைப் பண்பு கிடைக்கிறது?

  —இந்த தேசம் அனுபவம் குறைந்த ஒருவரை தேர்ந்தெடுப்பது எந்த வகையில் சிறந்ததாக இருக்கும்

  அனுபவசாலி சரியான முடிவை எடுக்கவில்லை; மெகயினின் முந்தைய கணிப்புகள் சொதப்பலாக இருந்திருக்கின்றன!

  ஒபாமா குறைந்தபட்சம் அனுபவசாலிகளைக் கலந்தாலோசித்து அதன் பின் ‘குணம் நாடி, குற்றம் நாடி’ சிறந்ததை ஒழுங்காக அனைவரும் விரும்பும்வண்ணம் ஆதாரபூர்வமாக முன்வைக்கிறார்.

 3. From maverick to misguided renegade – The Boston Globe: John McCain is no principled maverick; he’s a desperate renegade sanctioning numerous attempts to remove legitimate voters from the rolls, disenfranchise minorities and students, and spread false claims about Barack Obama via automated phone calls.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.