அமெரிக்காவில் அதிபர் தேர்தல் ஓட்டுச்சீட்டு அச்சடிப்பதில் குளறுபடி: ஒபாமா பெயர் ஒசாமா என்று மாறியது
நியுயார்க் ஓட்டுச்சீட்டு:
வாக்குச்சீட்டு புகைப்படம்: CNN Political Ticker: All politics, all the time Blog Archive – New York county prints ‘Barack Osama’ on ballots « – Blogs from CNN.com (பரிந்துரை: இலவசக்கொத்தனார்)
//(பரிந்துரை: இலவசக்கொத்தனார்)//
இப்படி படித்தவுடன் ஒரு நுண்ணரசியல் பார்வை கிடைத்தது.
ஒபாமாவை ஒசாமாவாக ஆக்கியவர்கள், பிடனை பின் லேடனாக ஆக்காமல் விட்ட நுண்ணரசியல் என்ன?
இலவசகொத்தனார் வாங்க. வந்து கொஞ்சம் விளக்குங்க :-))
இந்த விஷயம் எதேச்சையாக நடந்தது மாதிரி தெரியல .
வேணும்னே பண்ண மாதிரி இருக்குது
மெகயினும் சாரா பேலினும்தானே நட்சத்திரக்குறி இட்டு தங்கள் இலச்சினையை வைத்துக் கொண்டுள்ளார்கள்!
அவர்கள் சின்னத்தை டெமோக்ரட்சுக்கு கொடுக்கும் குழப்ப அரசியலைக் கண்டுக்காமல் விட்ட ஸ்ரீதர் நாராயணின் நுண்ணரசியலை விளக்கவும் அழைக்கிறேன் 🙂
ஜுர்கேன் க்ருகேர்,
—-இந்த விஷயம் எதேச்சையாக நடந்தது மாதிரி தெரியல .
வேணும்னே பண்ண மாதிரி இருக்குது—
ஆல் கோரும் புஷ்ஷும் போட்டியிட்ட 2000 தேர்தலில் ஃப்ளோரிடாவில் அச்சிட்ட வாக்குச்சீட்டுகள் போல் அச்சிடா விட்டால் சரி.
ஆல் கோருக்கு வாக்களிப்பவர்கள், தவறுதலாக ஜார்ஜ் புஷ்ஷுக்கு குத்துமாறு வைத்திருந்தார்கள்.
என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது! டிபிக்கல் ரிபப்ளிக்கன் பாணி
கீழ independents என வரவேண்டியது independence அப்படின்னு வந்திருப்பதை யாரும் பார்க்கலையா? இதுக்குப் பேசாம ஸ்பானிஷ்லயே அடிச்சு இருக்கலாம்! :))
கொத்ஸ்,
Ballot Access News » Blog Archive » McCain Receives 88% of Weighted Vote at Independence Party State Convention
இன்டிபென்டன்ஸ் கட்சி இருக்கிறதோ?
முரளி,
—என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது! டிபிக்கல் ரிபப்ளிக்கன் பாணி—
அதிபருக்கும் அல்பருக்கும் ஓரெழுத்துதான் வித்தியாசம்.
அல்பர் அதிபராகலாம்; (வருங்காலம்)
அதிபரும் அல்பராக இருக்கலாம்! (நிகழ்காலம்)
அதிபரானபின் இந்த மாதிரி அல்ப விஷயங்களை ஊடகங்கள் கண்டுக்காமல், தேனிலவு கொண்டாடுவதும் வழக்கமே 😉
united we stand:)
ஆஹா! அப்படி ஒரு கட்சி வேற இருக்கா?! தெரியத் தந்தமைக்கு நன்னி!! 🙂
பாலா –
எதுகை மோனை எல்லாம் வெச்சுக் கலக்கறீங்க…
பத்மா,
யாரும் யாரும் இணைஞ்சிருக்காங்க 😉
ஒசாமாவும் புஷ்ஷுமா (அ) ஒபாமாவும் ஏயர்ஸுமா (அ) மெகயினும் லாபியிஸ்ட்களுமா 🙂