அமெரிக்காவில் தேர்தல் தில்லுமுல்லு – மெகயினை வெல்லவைக்கும் சூட்சுமம்


அமெரிக்க அதிபர் தேர்தல் 50 மாகாணங்களிலும் நடந்தாலும் சில இடங்கள் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, நியு யார்க் மாநிலத்தில் ஜான் மெகயின் வெல்வதற்கு வாய்ப்பே கிடையாது. அதே போல் அரிசோனாவிலோ டெக்சாஸிலோ பராக் ஒபாமா ஜெயிப்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.

ஆனால், இரு கட்சி வேட்பாளர்களும் சற்றேறக்குறைய சமமாக இருக்கும் மாநிலங்களில் பிரச்சாரம் சூடாக நடக்கிறது. அவற்றில் ஆறு மாநிலத்தில் வாக்காளர் அடையாள அட்டை தருவதற்கு முரண்டு பிடித்திருக்கிறார்கள்.

இளம் ரத்தத்தைக் கவர்வதில் ஒபாமா முன்னணியில் நிற்கிறார்.

தற்போது ஆயிரக்கணக்கானவர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதன் மூலம், இந்த மாநிலங்கள் ஜான் மெகயினுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

சோஷியல் செக்யூரிட்டி அட்டையும் சொந்தப் பெயரும் ஒற்றுமையாக இருப்பது பிரம்மப்பிரயத்தனம். உங்கள் பெயரை பாபி ஜிண்டால் என்று மாற்றிக் கொண்டால், சோஷியல் அட்டையில் சில சமயம் தவறுதலாக ஜிண்டால் பாபி என்று மாற்றி உல்டாவாக்கி விடுவார்கள். அல்லது பாபியை முழுதாக்கி ராபர்ட் ஆக்கி அச்சிட்டிருப்பார்கள்.

ஓட்டுநர் உரிமத்துக்கு பதிலாக சோஷியல் செக்யூரிட்டி எண் கேட்பதால் இந்த மாதிரி தவறு நிகழ்ந்தவர்கள் அனைவருக்கும் ஜனநாயக உரிமை மறுக்கப்படும்.

பிரச்சினை எழுந்துள்ள மாநிலங்கள்:

  1. கொலராடோ – Colorado,
  2. இந்தியானா – Indiana,
  3. ஒஹாயோ – Ohio,
  4. மிச்சிகன் – Michigan,
  5. நெவாடா – Nevada
  6. வட கரோலினா – North Carolina

நன்றி: வாக்காளர் பட்டியலில் நடக்கும் மாற்றங்கள்நியு யார்க் டைம்ஸ்

முழுவதும் வாசிக்க: States’ Actions to Block Voters Appear Illegal – NYTimes.com

மெகயின் பக்கமும் குற்றச்சாட்டுகளை வீசியிருக்கிறது.

ஒருவரையே பன்முறை வாக்களிக்க வைக்கும் திட்டங்களில் ஜனநாயகக் கட்சி இறங்கியுள்ளது என்கிறார்கள்: VOTE-FRAUD-A-GO-GO – New York Post: “ACORN has been implicated in voter-fraud schemes in 15 states – including Ohio, from where The Post’s Jeane MacIntosh reports today that a Board of Elections investigation has unearthed evidence of widespread voter fraud.

Two voters told MacIntosh they had been dragooned by ACORN activists into registering several times – one reporting having signed up ’10 to 15′ times.”

Related

16 responses to “அமெரிக்காவில் தேர்தல் தில்லுமுல்லு – மெகயினை வெல்லவைக்கும் சூட்சுமம்

  1. //ஒருவரையே பன்முறை வாக்களிக்க வைக்கும் திட்டங்களில் ஜனநாயகக் கட்சி இறங்கியுள்ளது //

    சின்னப் பசங்க. இப்பத்தான் ஆரம்பிக்கிறாய்ங்களா? :-))))

  2. என்னப்பா , என்ன என்னமோ உலகத்துல கண்டுபிடிச்ச அமெரிக்காக்காரன் இப்பதான் இதையெல்லாம் கண்டுபிடிக்கிறானா?? ஷேம் , ஷேம் பப்பி ஷேம்…

    நம்ம ஆளுங்ககிட்ட ஒரு வாரம் டியூஷன் கத்துகிட்டா சும்மா புகுந்து வெளையாடுவாய்ங்க……

    அனேகமாக இந்த மாதிரி தில்லாலங்கடித்தனம் எல்லாத்தையும் ஒரு புத்தகமாக போட்டு அதுக்கு பதிலாதான் அணு ஒப்பந்தத்தை அமெரிக்காக்காரன் நம்மகிட்ட போட்டுகிட்டானோ????

    இருந்தாலும் இருக்கும்….

  3. //சின்னப் பசங்க. இப்பத்தான் ஆரம்பிக்கிறாய்ங்களா? :-))))//

    ரசித்தேன்…

    நமது மிண்ணனு வாக்கு பதிவை அவர்கள் ஆரம்பிக்கவே இல்லையே

  4. நல்ல பதிவு வாழ்த்துக்கள்;

    ‘நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
    புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -தொல்லுலகில்
    நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
    எல்லோருக்கும் பெய்யும் மழை!”

  5. மதிபாலா, 🙂

    —இந்த மாதிரி தில்லாலங்கடித்தனம் எல்லாத்தையும் ஒரு புத்தகமாக போட்டு—

    அமெரிக்காவில் கடந்த தேர்தல்களில் நடந்த முறைகேடுகளை திரைப்படமாகவும் புத்தகங்களாகவும் எழுதித் தள்ளி இருக்கிறார்கள்.

  6. புருனோ,

    —மிண்ணனு வாக்கு பதிவை அவர்கள் ஆரம்பிக்கவே இல்லையே—

    ஒவ்வொரு மாநிலமும் அவர்களுக்கு எந்த முறை பொருந்துகிறதோ அதை வைத்துக்கொள்ளும் சுதந்திரம் இருக்கிறது.

    மேலும், காகிதத்தில் கோப்பாக்கி வைத்துக் கொள்ளவேண்டும் என்னும் அச்சம் கலந்த பாதுகாப்பு உணர்ச்சி இருப்பதும் — முழுக்க முழுக்க மின்மயமாக்கம் ஆகாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம்

  7. உடனே புஷ் கிளம்பி தமிழகம் வந்து கழகத்தினரிடம் டியூசன் கற்றுக்கொள்ளவேண்டும் :)))

  8. உடனே புஷ் கிளம்பி தமிழகம் வந்து கழகத்தினரிடம் டியூசன் கற்றுக்கொள்ளவேண்டும் :)))////////////

    ஏன் கழகத்துக்காரங்கள தவிர தமிழ்நாட்டுல மத்தவங்க எல்லாம் வானத்துல இருந்து குதிச்சிட்டாங்களா ரவி சார்??

  9. NYTimes பகிறங்கமா ஒபாமாவை ஆதரிக்கும் பத்திரிக்கை. வாக்காளர் அட்டை முறைகேடு என்றெல்லாம் செய்தி வெளிவரவில்லை என்றால் தான் ஆச்சரியம். அமேரிக்காவிலுமா என்று கேட்பவர்கள் இருப்பார்கள் எனில் அதுவே ஆச்சரியம்.

  10. ரவி,
    தமிழகத்தில் நடப்பதை எதிரெதிர் கட்சியின் ஊடகம் காட்சிப்படுத்தி விடுகிறது.

    ப்ராக்ஸி மூலமாக, தேர்தல் தினத்தன்று மட்டுமில்லாமல், அதற்கு பல மாதம்/வருடம் முன்பாகவே தொலைநோக்குடன் கையாள்வதை இங்கேயிருந்து கற்றுக் கொள்ளவும் 🙂

  11. முரளி,

    —-NYTimes பகிறங்கமா ஒபாமாவை ஆதரிக்கும் பத்திரிக்கை. வாக்காளர் அட்டை முறைகேடு என்றெல்லாம் செய்தி வெளிவரவில்லை என்றால் தான் ஆச்சரியம். —-

    நியுயார்க் டைம்ஸ் யாருக்கு ஆதரவு என்பது ஒருபுறமிருக்கட்டும். அது விவாதத்துக்கும் மறுப்புக்கும் உரிய ப்ராண்டிங்.

    வாக்காளர் ஆவதற்கு குடிமகனாக இருக்கவேண்டும்.

    சட்டப்பட்டி ஓட்டுநர் உரிமமோ, பிற அடையாள அட்டையோ இல்லாவிட்டால், கட்டாங்கடைசியாக சோஷியல் செக்யூரிட்டியையும் நாடலாம் என்பது விதி.

    (Under federal law, election officials are supposed to use the Social Security database to check a registration application only as a last resort, if no record of the applicant is found on state databases, like those for driver’s licenses or identification cards.

    The requirement exists because using the federal database is less reliable than the state lists.)

    உதாரணமாக, எனக்கு மந்தவெளியில் இருந்து பாரிமுனை செல்ல வேண்டும். முதலில் ட்ரெயின் உண்டா அல்லது பேருந்து வருகிறதா என்று பார்ப்பேன். அப்படி அது எதுவும் சரிப்படாவிட்டால், ஷேர் ஆட்டோ. அதுவும் கிடைக்காவிட்டால் இறுதியாக ஆட்டோ உபயோகிப்பேன்.

    இந்த நடைமுறையை குடும்பத்தில் இருக்கும் அனைவரும் வழிகாட்டியாக பயன்படுத்தவேண்டும் என்று விதிவகுத்துவிட்டு, ‘ஆட்டோவில் போகவும்’ என்று சொல்லியிருப்பதால் அனுதினமும் ஆட்டோவையே நாடினால் செலவு எகிறும்.

    இங்கே சோஷியல் செக்யூரிட்டி அட்டையை மட்டும் கேட்பதால், நாட்டுக்குத்தான் நஷ்டம்.

  12. தேர்தல் திகிடுதத்தங்களை அமெரிக்கர்கள் நம்மிடம் பயில வேண்டுமா? அவங்க அதுலெ Ph.D வாங்கியிருப்பானுங்கப்பா. எல்லாம் அறிவியல் பூர்வமா சட்ட பூர்வமா திகிடுதத்தம் பண்ணி எப்படியாவது ஜெயிச்சுடணும்னு நினைக்கிறவனுங்க.

    ஒரு tight சிஸ்டத்த ஏமாத்தணும்ணா சும்மாவா?

    டெமெக்ராட்ஸ் வேஸ்ட் இதுல.. கள்ள ஓட்டு எவ்வளவுதான் போட முடியும்? ரிப்பப்ளிகன்கள் அழகா சிஸ்டத்துலேயே கைய வச்சிருவானுங்க.

    இந்தத் தேர்தலில் இது அதிகம் சாத்தியம்.

  13. Voter-registration can't be totally fraud-free, group says – Cleveland.com: “Voter-registration group cites lack of resources

    The Association of Community Organizations for Reform Now, or ACORN, has turned in at least 65,000 cards to the Cuyahoga County Board of Elections in the last year. The board has investigated potentially fraudulent cards since August. “

  14. எதை எதையோ அவுட்ஸோர்ஸ் செய்பவர்கள் இந்த விஷயத்தை நமது கழகக்கண்மணிகளிடம் அவுட்ஸோர்ஸ் செய்துவிட்டால் போகிறது. இந்த ஊர்ல எலீக்ஸன்ல பாதிபேர் ஓட்டே போடமாட்றாங்க. நம்ப ஆளுங்களை கூட்னு வந்தா செண்ட் பர்செண்ட் ஓட்டுப்பதிவு கியாரண்டி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.