யாரைப் பார்த்தால் அரசர் போல் இருக்கிறது?


ரேகன் போன்ற சினிமா நடிகர்களின் கவர்ச்சியும் உயரமும் கென்னடியின் ஹீரோ அடையாளமும் க்ளின்டனின் காந்த உருவமும் அவர்களின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கும்.

பெரும்பாலான அமெரிக்கர்கள் ஆஜானுபாகுவானவர்கள். அவர்களுடன் இரயிலில் பயணம் செய்யும்போது என்னைப் போன்ற போஷாக்கான இந்தியர்களே ஸ்னோ வைட்டின் சித்திரக்குள்ளர் போல் காட்சியளிப்போம்.

இப்படிப்பட்டவர்கள் பராக் ஒபாமாவின் ஒடிசலான தோற்றத்தோடு அடையாளம் காணமுடியுமா?

அந்தப் பக்கம் சங்கர்தயாள் சர்மா போல் படிகளில் ஏறி இறங்க சிரம்ப்படும் போர்க்காயங்களோடு வாழும் ஜான் மெகயின். அவரை இளைய தலைமுறை எவ்வாறு பார்க்கும்?

சதா சர்வகாலமும் தொலைக்காட்சியும் யூ-ட்யுபும் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் நடை, உடை, பாவனை, ஆகிருதியின் பங்கு என்ன?

எப்படி உயரம் தலைமையை அடைய உதவுகிறதோ அதே அளவு பருமனும் உதவுகிறது என்று தோன்றுகிறது. பாருங்களேன் கடந்த காலத்தை.

நன்றி: Op-Chart – Op-Chart – The Measure of a President – Interactive Graphic – NYTimes.com

Jimmy Carter’s height. He is 5 feet 9 ½ inches tall, not 6-foot-1. In addition, the measurements for Thomas E. Dewey and John Davis were reversed: Dewey was 5-foot-8 and 160 pounds, while Davis was 6 feet and 190 pounds.

8 responses to “யாரைப் பார்த்தால் அரசர் போல் இருக்கிறது?

  1. எல்லா சைஸிலும் ஜனாதிபதிகள் இருந்திருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறெதையும் இந்தப்படம் எனக்கு உணர்த்தவில்லை.

    இவ்ளோ வேலையத்த வேலைய யாரு செஞ்சாங்க? ஏன் செஞ்சாங்க?

  2. இதைத்தான் பிஸிக்ஸ் கெமிஸ்ட்ரி அப்படின்னு எல்லாம் சொல்லறதா? 🙂

  3. சுரேஷ்,

    —எல்லா சைஸிலும் ஜனாதிபதிகள் இருந்திருக்கிறார்கள்—-

    தோற்றம் ஒரு தடையல்ல! சாமுத்ரிகா லட்சணம் பார்த்து யாரும் வாக்களிப்பது இல்லை போல?

    —-இவ்ளோ வேலையத்த வேலைய யாரு செஞ்சாங்க?—-

    நியு யார்க் டைம்ஸில் வெளியாகி இருந்தது. open தயாரித்து இருக்கிறார்கள்.

    —-ஏன் செஞ்சாங்க?—-

    உருவம் ஒரு தடையா என்ன!?

  4. கொத்ஸ்,
    இயற்பியலாக இயல்பாகப் பார்க்கும் விளைவுகளையும் பௌதிகத்தையும் பூடகமாகப் பார்க்கிறார்கள் 😀

  5. 1968-ல் நிக்ஸன் 37-வது ஜனாதிபதி. 72-ல் மீண்டும் அவர் ஜனாதிபதி. ஆனால் அதே 37-வது ஜனாதிபதி. அவர்தான் வாட்டர்கேட்ல சிக்கினார்னா அவரோட வரிசையும் வாட்டர்கேட்ல சிக்கிகிட்டது போல 🙂

  6. அடக்கடவுளே….. உருவத்தைவச்சு ஒன்னும் சொல்ல முடியலையே…….

    பேசாம ஒரு கிரீடம் தலையில் வச்சு, யாருக்குப் பார்க்க அம்சமா, பொருத்தமா இருக்கோ அவரை ‘அரசர்’ன்னு சொல்லிக்கலாமா?

    கிரீடம் தங்கமா இருக்கணுமுன்னு அவசியம் இல்லை.மலர்க்கிரீடம் போதும்.

    ஹாங்….. மறந்துட்டேன்.. கையிலொரு வீரவாளும் கொடுக்கணும்,ஆமா.

    முடியரசைத் தொலைத்துக்கட்டுன நாடுகளிலும் இந்த ‘அரசன்’ என்ற சொல்லைத் தொலைக்க முடியலை பாருங்க.

    நீதிக்கும் அரசர் இருக்காராமே!!!!!

  7. ஸ்ரீதர்,
    இது போன்ற பிழைகளைக் கூட டைம்ஸ் கண்டுக்காமல் வெளியிடுவது என்ன தாத்பர்யமோ 😦

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.