தலையைக் குனிதலும் முதுகைத் திருப்பிக் கொள்ளுதலும்


குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மகயினுக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமாவுக்கும் இடையே இரண்டாவது தருக்கம். இதுவும் நடந்து முடிந்த முதல் விவாதம் போலவே இருந்தது.

அதிரடி மச்சான் கார்னர்:

மெக்கயின்: “நீங்கள் வீடு வாங்கும்போது வீட்டின் விலை இரண்டு லட்சம். தற்போதைய பொருளாதாரச் சரிவினால் வீட்டின் மதிப்பு ஒரு லட்சமாகக் குறைந்துள்ளது. நீங்கள் ஒரு லட்சம் மட்டும் கடனாகக் கட்ட ஆரம்பித்தால் போதுமானது”

என் கருத்து: இதற்கு எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும்? இதனால் வீட்டு மனைகளின் விற்பனை நினைத்துப் பார்க்க முடியாத வீழ்ச்சி அடையாதா? அதன் தொடர்ச்சியாக பங்குச்சந்தையும் வீழுமே?

நான் உங்க வீட்டுப்பிள்ளை கார்னர்:

ஒபாமா: 700 பில்லியன் டாலர் மீட்பு மசோதாவினால் நடுத்தரவர்க்கத்தினருக்கு என்ன நன்மை என்பதை சொன்னார். வங்கிகளிடம் வைப்பு நிதி இல்லாத கதையை எளிமையாக சாதாரண பொதுமக்களும் விளங்கிக் கொள்ளுமாறு கதையாக்கினார்.

எ.க.: நடந்ததை நன்றாகத்தான் விளக்குகிறார். பேராசிரியர் ஆயிற்றே!

தர்ம அடி கார்னர்:

மெக்கயின்: “அமெரிக்காவின் இன்றைய நிதிநிலை தட்டுப்பாட்டுக்கான மூல காரணம் ஃபேனி மே மற்றும் ஃப்ரெடி மாக் திவாலனதில் ஆரம்பித்தது. அவர்களின் அதிகாரிகளிடம் மாறாப்பற்றும் விசுவாசமும் உடையவர் ஒபாமா.”

எ.க.: நீங்களும் ஏதோ தேர்தல் பிரச்சாரத்திற்காக பணம் பெற்றுக் கொண்டீர்களே. கூட்டிக் கழித்து பார்த்தால் இரண்டும் ஒன்றுதான் என்று ஒபாமா பதிலடிக்கு மறுப்பு ஏதேனும் உண்டா?

ஏழையின் சிரிப்பில் கார்னர்:

ஒபாமா: “நிறுவன முதலாளிகளின் சம்பளத்தைக் குறைப்பேன். லட்ச லட்சமாக சம்பாதிப்பவர்களின் வரியை உயர்த்தி பாட்டாளிகளின் வரிச்சுமையைக் குறைப்பேன்”

எ.க.: மெகயின்தான் மூச்சுக்கு மூவாயிரத்து நானூற்றியெட்டு தடவை வருமான வரி… வருமான வரி! என்று உச்சாடனம் ஜெபித்தால், நீங்களாவது அவரை வேறு திசையில் அழைத்துச் செல்லுமாறு விவாதிக்கக் கூடாதா?

கேனத்தனமான கேள்வி கார்னர்

விவாதத்திற்கு வழித்துணையாக இருந்த டாம் ப்ரகாவ் கேட்டார்: ‘ருசியா கெட்ட நாடா? நல்ல நாடா? ஆமாம் என்றால் மண்டை ஆட்டவும். இல்லை என்றால் நோ சொல்லவும். வேறு சொல்லக்கூடாது’

எ.க.: இவர்கள் இருவரும் பச்சிளம் பாலகர்களா? இந்த மாதிரி ஒன்றுக்கிருக்க வேண்டுபவர்கள் எல்லாம் ஒன்றாம் எண்ணைக் காட்டுக என்று கேட்பதற்கு 😦

டீச்சர்! இவன் என் பல்ப்பத்தை எடுத்துக்கிட்டான் கார்னர்:

மெக்கயின்: “சிகாகோ கோளரங்கத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்து கொண்டார் ஒபாமா.”

எ.க.: எக்ஸான் – மோபிலுக்கு வரிவிலக்கு அளிப்பதை விட சிரச்சேதம் செய்யுமளவு மோசடியா என்ன அது?

ஒன்று, இரண்டு மூன்று என்று வரிசைப்படுத்தும் கார்னர்:

ஒபாமா: “உங்க காருக்கு பெட்ரோல் போட எவ்வளவு பணம் செலவழிகிறது? முதலில் அதை கவனிப்பேன். அடுத்து உங்கள் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றால் மொத்த சொத்தையும் பிடுங்கும் மருத்துவத்தை சீர் செய்வேன். மூன்றாவதாக, தற்போதைக்கு ஓரளவு பரவாயில்லையாக இருக்கும் சேமநலநிதி.”

எ.க.: சாவதார கமல் பத்து வேடம் போட்ட மாதிரி மெகயின் எல்லாவற்றையும் நான் பார்த்துக்குவேன் என்று வசனம் பேச முடியுமா?

ஆடை பாதி கார்னர்:

ஜான் மகயினின் மனைவி நீல நிற ஆடையும் பராக் ஒபாமாவின் மனைவி சிவப்பு நிற ஆடையும் அணிந்திருந்தனர்.

எ.க.: தமிழ்நாட்டு அரசியலில் திமுக மகளிரணி பச்சை சேலையும் ஜெ. பேரவை மஞ்சள் சால்வையும் அணிந்து வர முடியுமா?

டாக்சி! டாக்சி! (அ) முஸ்தபா முஸ்தபா கார்னர்:

மெக்கயின்: பத்தொன்பது தடவை ஜான் மகயின் ‘மை ஃப்ரெண்ட்’ துணைக்கழைத்தார்.

எ.க.: வருடத்திற்கு 250,000 டாலருக்கு மேல் சம்பாதிக்கும் அனைவருக்கும் மகயின் ‘மை ஃபிரண்ட்’

கம்ப்யூட்டர் கார்னர்:

ஒபாமா: “கணினிப் புரட்சி போல் அடுத்த யுகப் புரட்சிக்கு வித்திடுவேன். பசுமைப் புரட்சி மூலம் ஐந்து மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு உண்டாக்குவேன். மாற்று எரிபொருளில் முதலீடு செய்வதால் எண்ணெய் மீது இருக்கும் மோகமும் மத்திய கிழக்கு நாடுகளிடம் மயங்கிக் கிடக்கும் அடிமைத்தனமும் விட்டு தூர ஓடும்.”

எ.க.: சண்டைக்குப் போனால்தான் அமெரிக்கா என்பது மாறி, சுற்றுச்சூழல் பாதுகாவலன் அமெரிக்கா என்று மாத்திடுவீங்க போலிருக்கே 🙂

என் கேள்விக்கு என்ன பதில் கார்னர்:

மகயினிடம் கேட்க மறந்த கேள்வி: ஒபாமாவிடம் அவர் கேட்ட மாதிரி அவருக்கு மட்டும் இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து குதிக்கும்?

ஒபாமா கேட்க மறந்த கேள்வி: மகயின் சோஷியல் செக்யூரிட்டியை பங்குச்சந்தையில் இட்டு தனியார்மயமாக்கப் போவதாக விளம்பரம் செய்வதைப் போல் நேரிலும் விவாதித்து தெளிவாக்கி இருக்கலாமே?

ஒருவரியில் எ.க. கார்னர்:

‘டாம்! டாம்! ஒரேயொரு நிமிஷம் பேசிக்கறேன் டாம்!’: வகுப்பில் கையைத் தூக்கும் சுட்டி மாணவர் ஒபாமா

‘நீ கேட்ட கேள்விக்கு நான் மட்டுமாவது உரிய பதில் தருகிறேன் டாம்!’: அலுவலில் முந்திரிக்கொட்டையாக குதிக்கும் மெகயின்

ஒபாமாவை மெகயின் எவ்வாறு சித்தரிப்பதாக கருதினார்: பச்சப்புள்ள (Green Behind the Ears)

ஒபாமாவை மெகயின் எவ்வாறு சித்தரித்தார்: அது (That One)

மெகயினை மெகயின் எவ்வாறு சித்தரித்துக் கொள்கிறார்: வழுக்கையை ஒப்பேத்த சவுரி வேண்டும் சராசரி (hair transplants)

குற்றஞ்சாட்டப்பட்டபோது தலையைக் குனிந்தவர் – ஒபாமா

தர்மசங்கடமான தகவல் சுட்டப்பட்டபோது முதுகைத் திருப்பிக் கொண்டார் – மெகயின்

இருவருமே கிளிப்பிள்ளை போல் சென்ற தடவை ஒப்பித்ததை மீண்டும் பரிமாற, மீண்டும் மெகயினே மிடுக்குடன் ராஜநடையில் மனதையும்; கம்பீரமான உரையில் ஜனாதிபதித் தோரணையையும் நிரூபித்திருக்கிறார்.

பெட்டர் லக் லாஸ்ட் டைம் ஒபாமா!

13 responses to “தலையைக் குனிதலும் முதுகைத் திருப்பிக் கொள்ளுதலும்

 1. மீண்டும் மெகயினே மிடுக்குடன் ராஜநடையில் மனதையும்; கம்பீரமான உரையில் ஜனாதிபதித் தோரணையையும் நிரூபித்திருக்கிறார்.

  பெட்டர் லக் லாஸ்ட் டைம் ஒபாமா!

  Either you should be a republican or McCain’s friend ( >250,000) 🙂

  For me and for many others who watched this debate as well, Obama is a clear winner.

  McCain has the same Zombie look like Bush. 😀

 2. புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு. :-))

  ஒண்ணு மட்டும் தெளிவா தெரியற மாதிரி இருக்கு. இதுவரை லீடிங் மெக்கெய்ன்தான் போல.

 3. நேற்று ஒரு அரசியல் கூட்டத்தில், ஜனநாகக கட்சியின் பெருவாரியான ஆதரவு உள்ல மாநிலத்தில், மக்கள் மெகெயினுக்கு ஆதரவாக பேசியது ஆச்சரியம். நிறவெறி இல்லை, ஆப்பிரிக்க அமெரிக்கர்களை ஒப்புக்கொள்வதில் தயக்கம் இல்லை, ஆனால் தலைவராக்கலாமா என்றளவிலும், அப்படியே தலைவரானால், நகராட்சியிலும் தன் இனத்தை கொண்டுவந்தால் என்ன செய்வது என்பதும் பெரிய கவலையாக பட்டது. இதனையும் மீறி ஒபாமா வென்றால், அது பாராட்டுக்குரியது.

 4. நேற்று நடந்த விவாதத்தை உற்று நோக்கிப் பார்த்தால், தாத்தாவிற்கும் ஒபாமா ஸ்டைல் க்லாஸ் ரூம் அணுகு முறைக்கும் -தமிழகத்தில் உள்ள ஒரு அரசுக் கல்லூரியில் எடுக்கும் ஒரு வகுப்பிற்கும், டெல்லியிலுள்ள நேரு பல்கலை கழகத்தில் எடுக்கப்படும் ஒரு வகுப்பிற்கும் உள்ள வித்தியாசங்கள் காணப்பட்டது.

  ஒபாமா, பாயிண்ட் பை பாயிண்டாக எடுத்து எது சாத்தியம், அட குறைந்தபட்சம் உடனே தான் எடுத்துருக்கும் செய்முறை பயன்படுத்திப் பார்ப்பதில் உள்ள தீர்க்கம் இந்த சூழ்நிலையில் அருமை. தாத்தா(மெக்கைன்), எல்லாமே இப்படி பொத்தாம் பொதுவா அமெரிக்கா ஒரு சிறந்த நாடு, இங்க இருக்கிறவங்க எல்லாம் கடுமையான உழைப்பாளிகள் நாம திரும்ப இந்த நாட்டை கொண்டு வந்து இருந்த இடத்திலே போட்டுடுவோம்னு, மொட்டையன் குட்டையில விழுந்த மாதிரி பேசிட்டு இருக்க முடியுமா, போட்டுருக்க பேண்டே நெருப்பு பிடிச்சி எரிஞ்சிட்டு இருக்கும் போது, சொல்லுங்க…

  ஏன், இவரு சிம்ப்லி க்கெட் ரீடையர்ட், அதான் எனக்குப் புரியல. 30 வருஷம் செனட்ல இருந்திருக்கார் அப்பத் தெரியாத இந்த எண்ணெய் பணம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு போனதெல்லாம் இப்பத்தான் இவருக்குத் தெரியுதமா?

  அது போலவே, ஓபாமா பாகிஸ்தான் விசயத்தில அல்கொய்டா பத்தி சொல்றதில என்ன தவறு இருக்கிறது. இங்கிருந்து பணத்தை பில்லியன் கணக்கா வாங்கிட்டு, இரட்டை முகம் காமிச்சிட்டு எத்தனை நாட்கள் வாழ்க்கையை பாகி நகர்த்த முடியும்? நேற்று ஒபாமா சில கேள்விகளை தாத்தாவைப் பார்த்து கேட்டு என்னய அசத்திட்டார், அதாவது அமெரிக்கன் அப்படிங்கிற கூட்டிற்குள் இருந்து வெளியில வந்து – யாரு அமைதியைப் பத்தி பேசுறது பாருங்கய்யான்னு – தாத்தாவை கிண்டலடிக்கிறதின் மூலம்.

  இப்ப எனக்கு நம்பிக்கை கொஞ்சமே வந்திருக்கு, ஒபாமா ஜெயிக்கக் கூடுமின்னு, மக்கள் இந்த நிறத்தை தாண்டி யோசிச்சிட்டா :((. செம மண்டையப்பா, ஒபாமாவிற்கு, இந்தாளு எப்படி அரசியலுக்கு வந்தார் :).

  டெமக்ரேட் ஜெயிக்கலன்னா – விதி வலியது~~~~

  கீழே ஒரு காமெண்ட்ல ஏதோ ஒரு நாட்டில இருந்து சொல்லியிருக்காங்க பாருங்க(நான் அதனை பின்னூட்டமா அடுத்ததில போடுறேன்), அதான் கடவப் போவது ஒட்டு மொத்த உலக உருண்டைக்கும்…

 5. (The following comment is not composed by TheKa, it has been brought over here in the interest of others to know the gravity of the problem this globe is facing now… enjoy reading)…

  It makes me sick to my stomach to hear McCain/Palin vision of the current world economic situation. It may be foolish of me to say, but it feels as if they could not understand it (well, in Palin’s case it could well be that she really does not have a clue about it). They are still playing the same dangerous game that Bush/Cheney have been playing for 8 years, as if America still had that surplus and the reputation left by the Clinton administration. But we are on the verge of a TRAGEDY!

  If America fails to return to what it has stood for in more than a century, which is to bring justice, freedom and prosperity to the world, we will see life in this planet, as we know it, collapse into a chaotic mess we haven’t seen since the Holocaust/WWII years. Eight years ago America had the resources and means to start a war anywhere they want to. To please his supporters (oil companies, war industry) and profit from it, Bush/Cheney invaded Iraq and are still there! We are talking close to one trillion dollars burned for no reason.

  There is no country in the world that can resist to such an irresponsible action. And watching it all as an outsider it shocks me that, in the American media, very little is said about the relation between this absurd foreign policy and the disaster on Wall Street. Bush/Cheney, they set the moral standard of the past eight years: we will get what we want no matter how! And if the government can do it, why can’t we do the same? If they can profit from bombing innocent civilians on a remote country, why couldn’t we lend money that we don’t have? If doing wrong doesn’t get them in trouble, why are we going to get in trouble?
  It is time to reverse this dangerous patch of extermination, destruction and hate and have once again America lead the world as a peacemaker.

  Ok, there is a terrorist organization somewhere between Pakistan and Afghanistan that is trying to hurt America. Let’s find them and bring them down. Period. A fraction of what was spent in Iraq will do the job.
  But if instead America, lead by McCain/Palin, find a way to invade Iran to find “WMDs”, we will have a conflict of a much greater magnitude. It will be America/Israel versus Iran/Russia/Venezuela, just to get started. It reminds us, or better, it reminds some of us that knows something of History, of the rise of the Nazism.

  That is what the Bush doctrine is all about, and someone got to tell that to Sarah Palin. We know she didn’t spend her life studying History or Economy or Philosophy or Religion or Foreign Affairs…But there are a lot of people that dedicated their lives to the understanding of the complexity of the human nature. And that helps so we don’t make mistakes that we have already made!

  That God (however you see Him) bless Americans on November 4th and let it be the turning point in History where America once again turn to the right direction and lead the world to be a place of prosperity and justice.

 6. ‘என்னவோ போங்க’

  —For me and for many others who watched this debate as well, Obama is a clear winner.

  McCain has the same Zombie look like Bush.—

  இந்த அமெரிக்கர்களைப் புரிஞ்சுக்கவே முடியலியே!

  ரஷியா குறித்த கடைசி கேள்வியில் ‘கெட்ட நடவடிக்கை’ என்று கறுப்பு-வெள்ளையாக ஓரங்கட்டுவது அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டியது.

  நாம் அனைவரும் ‘யாருடைய ஆதரவாளர்’ என்று முடிவெடுத்த பிறகுதான் டிபேட்டை பார்க்கிறோம். நேற்று டிவிட்டரில் உதிர்த்தது:

  The very notion of the uncommitted voter is a fiction of opinion polls. Are they capable of formulating a telling question: http://is.gd/3FxU

 7. //‘என்னவோ போங்க’

  இந்த அமெரிக்கர்களைப் புரிஞ்சுக்கவே முடியலியே!//

  இவிங்கள புரிஞ்சிக்கிறதில என்ன இருக்கு, தேர்தல் நேரத்தில இப்படி விவாதம் அது இதுன்னு சூடு பறக்க இதனையும் HD-ட்டிவிய பாப்கார்ன் சாப்பிட்டு இன்னொரு ஷோவா பார்க்கிறாய்ங்க, நான் இங்கே தென் மாநிலத்தில இருக்கிறதுனாலே எப்படி இந்த சர்ச்சுகளில் இப்பொழுது அரசியல் பேசப்பட்டு கறுப்பினத்தவர் ஒருவர் அமெரிக்காவை ஆளும் நிலை வந்தால் “அதுவே, உலகம் அழிவதற்கான அறிகுறியென அவர்கள் புத்தகத்தில் எழுதப் பட்டிருப்பதாக” பேசிக் கொள்வதனை வாய் பிளந்து அடிக்கடி கேட்க முடிகிறது. அதுவும் நன்கு படித்தவர்களிடமிருந்தே…

  இரண்டாவது ஒரு பத்து நிமிடங்களுக்கு முன்பு ஒரு சதர்ன் பாய்(southern white boy) என்றழைத்துக் கொள்ளும் ஒரு வெள்ளப் பையன் சொல்கிறான், நோட் பண்ணி வைச்சிக்கோ ஒபாமா தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வந்தால், ஜான் கென்னடிக்கு நடந்ததுதான் நடக்கும்…நிறைய பேர் இருக்கோம், நாட்டின் நலத்திற்காக சிறைச்சாலையும் செல்லன்னு சொல்லி என் எலும்பில் ச்சில் ஏற்றிவிட்டு சென்றான்…

  இவிங்கள கொண்டு போயி எந்தக் கோயில்ல அடைச்சிட்டு நான் வெளியில நிக்க :)), என்னமோ நடக்கப் போகுதுங்கோவ்…

 8. அமெரிக்காவில் செக்‌ஷன் 49ஓ இல்லையா?

 9. ஸ்ரீதர்,

  —-புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு—-

  எது புரிஞ்சது 😉 எங்கே புரியல? 😀

  —-இதுவரை லீடிங் மெக்கெய்ன்தான் போல.—-

  இது என்னோட கவுண்ட்டிங் 🙂

 10. பத்மா,

  —-நிறவெறி இல்லை, ஆப்பிரிக்க அமெரிக்கர்களை ஒப்புக்கொள்வதில் தயக்கம் இல்லை, ஆனால் தலைவராக்கலாமா என்றளவிலும், அப்படியே தலைவரானால், நகராட்சியிலும் தன் இனத்தை கொண்டுவந்தால் என்ன செய்வது என்பதும் பெரிய கவலையாக பட்டது.—-

  தொடர்புள்ள இடுகைகள்:

  மணிக் கூண்டு: அமெரிக்காவின் நிற…

  மணிக் கூண்டு: ஓபாமாவிற்காக ஓர்…

 11. தெகா,

  —-மெக்கைன்), எல்லாமே இப்படி பொத்தாம் பொதுவா அமெரிக்கா ஒரு சிறந்த நாடு, இங்க இருக்கிறவங்க எல்லாம் கடுமையான உழைப்பாளிகள்—-

  என்னோட மேனேஜர் என்னை ‘நல்லவன், வல்லவன்’ என்று பாராட்டுவது எனக்குப் பிடிக்கும். அவனுக்கு வீட்டை சரியா வாங்கத் தெரியாது; மோசமான பண நிர்வாகி என்று திட்டுவதா பிடிக்கும்?

  —-இப்ப எனக்கு நம்பிக்கை கொஞ்சமே வந்திருக்கு, ஒபாமா ஜெயிக்கக் கூடுமின்னு,—-

  டிபேட் பார்க்கிறவங்க எல்லாம் வாக்களிப்பாங்களா என்ன?

  விவாதத்தை கவனிப்பவர்கள் எல்லாம் ஏற்கனவே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவெடுத்தவர்கள். 120,000த்திற்கு மேல் சம்பாதிப்பவர்கள். தன்னுடைய ஆதரவாளர் எவ்வாறு சமாளிக்கிறார் என்று சியர் லீடிங் விளையாட்டு 😉

 12. கொத்ஸ்,

  —-செக்‌ஷன் 49ஓ இல்லையா?—-

  அதற்காகவே பாப் பார், ரால்ஃப் நாடெர், பச்சை கட்சி வேட்பாளர் இருக்கிறார்களே. அவர்கள் 49ஓ என்னும் மையக்கட்சிகளின் மீதுள்ள நிராகரிப்பை உணர்த்துகிறார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.