உள்ளடக்கமும் உருவமும்: துணை ஜனாதிபதி வேட்பாளர்கள் விவாதம்


அமெரிக்க ஜனாதிபதியாக போட்டியிடும் பராக் ஒபாமாவுக்கு துணையாகப் போட்டியிடும் ஜோ பைடனும், குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கெய்னுடன் களமிறங்கும் சாரா பேலினும் முதலும் கடைசியுமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட விவாதத்தில் கலந்து கொண்டனர்.

இந்த விவாதத்தில் யாரும் வெற்றி பெற்றது போல (எனக்குத்) தெரியவில்லை. ஆனால், ஜோ பைடன் வென்றதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். எனினும், சாரா பேலினும் சரிசமமான மனங்களை கவர்ந்திழுத்து, ஏற்கனவே குடியரசு சார்புடையவர்களையும் தக்கவைத்திருப்பார் என்றே எனக்குப் படுகிறது.

ஏன்?

 • ஒபாமாவின் திட்டங்களை பைடன் வலியுறுத்தினார்.
 • ஜான் மெகயினை மிகக் கடுமையாக தாக்கினார் பைடன்.
 • அவ்வாறே பராக் ஒபாமாவை எள்ளலுடன் விமர்சித்தார் பேலின்.
 • ‘தான் உள்கை அல்ல!’ → தலைநகருக்கு அப்பால் தன்னுடைய பேட்டை என்பதால் அனைத்தையும் புரட்டிப் போடுவேன் என்றார் பேலின்.

ஸ்டைலு:

 • பேலின் குத்திக் கொண்டிருந்த அமெரிக்க கொடி பின் பளபளாவென்று கண்ணைப் பறித்தது – நாட்டுப்பற்று மிக்கவர்.
 • ‘என் வழி தனி வழி’ என்று கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் தனக்குத் தெரிந்த விடைகளை சொன்னார் பேலின்.
 • ‘மில்லியன், பில்லியன்’ என்று விஜய்காந்த் படம் போல் பைடன் பட்டியலிட்டார்.
 • தமிழ்க் கவியரங்குகளில் எல்லாவற்றையும் இரண்டாம் தடவை ரிப்பீட்டேய் என்று முழங்குவார்கள். பைடனும் தமிழகம் வந்திருப்பார் போல… பேசியதை எல்லாம் இரண்டு தடவை மறுமொழிந்தார்.

விஷயம்

 • ‘புஷ் ராஜாங்கம் மாபெரும் தவறுகளை இழைத்திருக்கிறது’ என்பதை வெளிப்படையாக பலமுறை ஒப்புக்கொண்டார் அவரின் கட்சியை சேர்ந்த பேலின்.
 • ‘என்னுடைய ஜனாதிபதியுடன் வேறுபடும் இடங்களைத் தயங்காமல் வெளிப்படையாக சொல்வேன்’ என்று முழங்கினார் பைடன்.

அப்படியானால்… இறுதியாக?

 • ‘அவரவர் நியாயங்களின் உட்புறச் சுவரைக் குடைந்துபார்க்க எல்லாருக்கும் சாத்தியமில்லை’ என்று பாரா சொல்வது போல் பைடனும் சொல்லி ‘ஆனால், அவரவர்களின் முடுவெடுக்கும் திறனை ஆராய்வது சாத்தியமே’ என்றது நெத்தியடி.
 • ‘புச்சா எதுனாச்சும் சொல்லுபா! இன்னும் பழைய பஞ்சாங்கத்தை வைத்து மாரடித்தால், உனக்கு நாங்க புதுசுன்னு புரியவைப்பதற்குள் தாவு தீருது’ என்பது பேலின் பதிலடி.

இரண்டணா கருத்து

 • பேலின் தம் கட்டி இவ்வளவு பெரிய அரங்கைக் கண்டு மிரளாமல், பைடனின் அதிரடி வினாக்களுக்கு மறைந்தோடி, புஷ்ஷையும் தன்னுடைய கட்சியையும் காவு கொடுக்காமல் → சிரித்து சிரித்து பல கோடி அமெரிக்கர்களை சிறையிலடைத்தார்.
 • இடுப்புக்குக் கீழே அடிக்கவும் தயங்கமாட்டேன் என்று → ஸ்பெயின் விஷயத்தில் மகயின் நாக்குழறியதையும், பேலினை டிக் சேனியோடு ஒப்பிட்டும், ஒபாமாவிற்கான புள்ளிவிவரங்களை பதினெட்டு வயசு பாலகரும் புரியுமாறு ஆணித்தரமாக ரிப்பீட்டியும் ஜோ பைடன் தன்னுடைய அனுபவத்தை எடுத்துரைத்தார்.

26 responses to “உள்ளடக்கமும் உருவமும்: துணை ஜனாதிபதி வேட்பாளர்கள் விவாதம்

 1. பாபா,

  கிழட்டு நரிக்கே இம்முறை வெற்றி!!!

  இன்னொரு சுவார்சியமான விஷயம்.கன்சர்வேடிவ் அடிப்படைவாதியான பேலின் கூட தனிமனிதர்களின் விருப்பத்தேர்வில் தலையிடப்போவதில்லை என்று கூறி ஓரினசேர்க்கைக்கு தனது எதிர்ப்பின்மையை தெரிவித்துவிட்டார்.கல்யாணம் ஆணுக்கும்-பெண்ணுக்கும் இடையே தான் என்ற கன்சர்வேடிவ் ஜல்லியை அடித்து baseயும் தக்க வைத்துக்கொண்டார்.

  நம் ஊரில் என்னடாவென்றால் சுகாதாரதுறை ஓரினசேர்க்கைக்கு ஆதரவாக மனுதாக்கல் செய்ய உள்துறை அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.மக்கள் மனோபாவம் அதற்கு மேல்.சேரா நம் ஊருக்கு வந்தால் ஒரு லிபரலாக தான் காட்சியளிப்பார் போல:-)

 2. பாபா

  இன்னொரு சுவாரசுயமான விஷயம்..இஸ்ரேல் விஷயத்தில் இரண்டு கட்சிகளுக்கும் எந்த கொள்கை வித்தியாசமும் இல்லை.பைடன் இன்று பேசியதை கேட்டால் அவரே துப்பாக்கி தூக்கிக்கொண்டு இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்குவார் போலிருக்கிறது.சேராவே பாராட்டும் அளவுக்கு இஸ்ரேலுக்கு தீவிர ஆதரவு அளிக்கிறது ஒபாமா கட்சி.ஒபாமா முந்தி ஜெருசலம் இஸ்ரேலின் தலைநகராக இருக்கும் தீர்வையே ஆதரிப்பதாக பேசினார்.(அதனால் தானே யூதர்கள் கச்சை கட்டிக்கொண்டு ஒபாமாவை ஆதரிக்கிறார்கள்?)

  பாகிஸ்தானை பைடன் கடுமையாக தாக்கியதும்,அமெரிக்கா மீது அணுகுண்டு விழுந்தால் அது பாக் எல்லையில் இருந்து திட்டம் தீட்டப்பட்டதாக தான் இருக்கும் என்றதும்,சூடான் மீது போர் தொடுக்க போவதாக கூறியதும் நான் சற்றும் எதிர்பாராதது.ஒபாமா ஜெயித்தால் பாக்குக்கு தான் முதல் ஆப்பு விழும்போல.அடுத்த ஆப்பு சூடானுக்கு.

 3. செல்வன்,

  விரிவான பதிலுக்கு நன்றி.

  ‘ஜனநாயகக் கட்சி’க்குள் நடக்கும் ப்ரைமரியில் ஜெயிக்க ஒரு பேச்சு. பொதுத் தேர்தல் வேட்பாளர்களைக் கவர இன்னொரு பேச்சு.

  மெகயினும் இந்தக் கோட்பாடுகளை உடைக்காமல், நிருபர்களுடனான நெருக்கத்தை குறைத்தல்; புஷ்/குடியரசுக் கட்சியின் பாரம்பரிய வேட்பாளர்களை நாடல் என்று பின் தொடர்கிறார்.

  வரும் தேர்தலில் ஜனநாயகக் கட்சி செனேட்டிலும் பெரும்பான்மை பெறுமா? அப்படியானால் பிரதிநிதிகள் சபை, செனேட், ஜனாதிபதி என்று எல்லா தளங்களிலும் நீக்கமற அதிகாரம் கொண்டிருக்கும்.

  அப்பொழுது பாகிஸ்தானை பஸ்மமாக்குவதற்கு அனுமதி பெறுவதும் எளிதாகும்!

  நேற்று பேலினிடம் ‘குழந்தை பெறுவதற்கான தன்னுடைய உரிமையை பெண்களிடமே கொடுப்பது’ குறித்து கேள்வி கேட்டிருந்தாலும் ‘எனக்கு ஒப்புதல் இல்லாவிட்டாலும் நானே உங்களின் கருவைக் கலைத்துத் தருவேன்’ என்று சரணாகதி அகாத குறைதான்.

  இலவச கலர் டிவி போல் பைடனும் ‘வரி விலக்கு’, ‘வீட்டின் விலை குறைந்ததற்கேற்ப கடன் தள்ளுபடி’ என்று பற்பல சலுகைகளை வாக்கு வங்கிக்காக அள்ளி வீசினார்.

  யூத வாக்குகளைக் கவர்வதற்காக அவர்களையும் நன்றாகவே கவர் செய்தார்.

  இதனால் எல்லாம் ஒஹாயோ, கொலராடோ, நியூ ஹாம்ஷைர் வோட்டு மாறுமா?

 4. The debate format suited Palin best as she herself admitted. All she had to do was just keep repeating whatever she has memorized on each topic.

  From ‘I can see Russia therefore I am .. ‘ to all those talks on Afganistan and Israel is a transformation as a result of mugging the answers up like a student studying for the exams.

  I was bothered by the way she kept on smirking for every point she made whether serious or not just to prove hat she was in the election for the smile and ‘winking’ what was that? Does she realize the kind of sh*t hole the economy is draining down into?

  There was hardly a point that Palin made that was her own.

  She sited being able to manage her family issues as a qualification at two occasions.

  The debate format suited her well.. whe could easily beat around the bush and did not answer most questions to the point. She spoke confidently but just bullcrap.

 5. from Right wing media:

  Palin’s Triumph by The Editors on National Review Online: “Dodge she did, and good for her: Instead of taking Gwen Ifill’s loopy invitation for the candidates to dilate on when we should use nuclear weapons, she talked about rogue regimes and nuclear proliferation.”

 6. One more…

  Sarah Palin, the Winner by a Wink :: six winks to perform: “I have never seen anybody undergo the ridicule,

  * the slanders and the lies, and the blogosphere and what they’re doing, and
  * breaking into her private e-mail,
  * rumors and things about her, and now, most recently,
  * belittling her,
  * taking little snippets of interviews and laughing at her and * satirizing her.

  Those people ought to be ashamed of themselves, if they’re capable of shame, because they’ve proven that what they were doing does not represent who she was and who she is.

  Thank goodness, just as she said, that this was an unfiltered event for an hour and a half. She could stand toe-to-toe with Joe Biden, who’s been around for all these many, many years, and basically take him to the woodshed.”

 7. Interesting Times: George Packer: Online Only: The New Yorker :: Zagat Guide to the Debate: “The “surprisingly wonky” Palin “exceeded expectations,” though she “relied heavily on talking points” and “repeatedly failed to answer questions.” Viewers found her “feisty,” “cloying,” “bemused,” and “manic.” She was faulted for her “aversion to verbs,” but her black jacket and skirt won “ecstatic style kudos.” The “mistake-prone” Biden, faced with a “tricky balancing act,” “exceeded expectations.” He sounded “authoritative,” “fluid,” and “surprisingly poignant on his son,” though one viewer faulted him for talking about “Joe Biden” and another complained about his “blinding teeth.” Moderator Ifill was criticized for “letting the rules run the debate” and “never following up” when one candidate “stuck her tongue out” at a question. This “much-anticipated” debate, though it “made Palin less of an issue in the campaign” and might “stop the Republican bleeding,” was “not a game-changer,” which means the “hockey mom from Wasilla” “didn’t do what McCain needed.” Reactions showed that “the voters aren’t s”

  The Vice-Presidential Debate Report Cards – TIME: “Republican vice presidential candidate Alaska Governor Sarah Palin and Democratic vice presidential candidate U.S. Senator Joe Biden during the U.S. vice presidential debate at Washington University in St. Louis, Missouri, on Oct. 2”

  Debate Report Card: Joe Biden – TIME

 8. நாளக்கி தீசிஸோட டிஃபென்ஸ் இருக்கின்னா, நாம எழுதின தீசிஸ்யை நாமே மக்கப் அடிக்காம போன எப்படி… 😉 அது மாதிரி ரெண்டு வாரம் போட்டு வறுத்து எடுத்துப்புட்டாய்ங்க போல, சிரிப்பழகிய :))).

  ஏதாவது கேட்ட கேள்விக்கு நேரடியா பதில் இருந்துச்சா, நம்மூர்ல பள்ளியில படிக்கும் பொழுது ஆங்கில எஸ்சே இருக்கும், நோட்ஸ்ல இருந்து ஏதாவது ஒன்ன படிச்சிட்டு கேள்வியில ஏதாவது ஒரிரண்டு வார்த்தை நாம படிச்ச எஸ்சேல இருந்தா வாத்தியாரே((இங்கே மெக்கைன் தாத்தா எனக் கொள்க)) அப்படியே படிச்சதை எழுதச் சொல்லிடுவார்… பேப்பர் திறுத்துர வாத்தியாரோ, ச்சே! எவ்வளவு கஷ்டப்பட்டு பயபுள்ள படிச்சிருக்கேன்னுட்டும், அழகான கையெழுத்தா (இங்கே, பேலினீன் நல்ல ஸ்மைல்(எனக்கு எரிச்சல் சம்பந்தமில்லாமல் சிரிச்சு வைக்கும் பொழுது;)…) இருக்கேன்னுட்டும் 10க்கு 2 மார்க்காவது போட்டுடுவாராம்… —— அது மாதிரியில்ல ஆகிப் போச்சு சாரா பேலின்(ஸ்டூடண்ட்) மற்றும் மெக்கைன்(வாத்தியாரு) கதையும்.

  எல்லாத்துக்கும் மேல இந்தம்மா உலக அரசியல் பத்தி பேசும் பொழுது, இந்தம்மாவிற்கு (எல்லா தரப்பு புத்தகங்களையும், வரலாற்றையும்))படிக்க எப்படி நேரம் கிடைச்சிருக்கும் அப்படின்னு ஞாபகம் வந்து தொலைக்கிறதை தவிர்க்க முடியலை…

  என்ன பண்றது நம்மூர் அரசியல் பாணி கலை கட்ட ஆரம்பிச்சிருக்கு…

 9. மிக மோசமான வாதம் என்றாலும் (பேடனும் சோபிக்கவில்லை), சாராவின் நம்மை யாரும் இனி exploit செய்ய அனுமதிக்கமாட்டோம் என்று சொன்னதும் வரவுக்குள் செலவு செய்ய பழக வேண்டும் என்றதும் மக்களை கொஞ்சமாவது யோசிக்க வைக்கும். மொத்த விவாதத்தில் அது ஒன்ருதான் அவருடைய சொந்த கருத்து அல்லது பாணி என்று நினைக்கிறேன்.
  29 வயதில் இருந்து அரசியல்வாதியாக இருக்கும் பேடனும் முதிர்ச்சியாக கருத்து சொல்லவில்லை. இவரா VAWA போன்றவற்றை ஆதரித்து சட்டமாக்கியவர் என்று ஆச்சரியமாக இருந்தது.

 10. சிறில்,

  —The debate format suited Palin best as she herself admitted. All she had to do was just keep repeating whatever she has memorized on each topic.—

  சிலர் பேலின் (பைடனும்?!) கீழே குனிந்து தங்களின் செல்பேசித்திரையில் ஒளிர்ந்த வாசகங்களை வைத்து விவாதித்ததாக சொல்கிறார்கள்.

  அடுத்தவர் சொல்வதில் இருந்து குறிப்புகள் எடுக்க காகிதங்கள் எடுத்து வருவது முந்தையப் பழக்கம். கேள்விக்கு ஏற்றவாறு பிட் அடிப்பது இக்காலம்.

  —Does she realize the kind of sh*t hole the economy is draining down into? —

  இந்த நிலைக்கு, பொருளாதாரம்/வீட்டு மதிப்பு/நிதிநிலை இறங்கும் என்று முன்பே கணிக்கவியலாத — மூன்றாண்டுகளாக பணியாற்றும் பராக் ஒபாமாவைக் குறித்தும் இதே கேள்வியை கேட்கவேண்டும்.

  அலாஸ்கா கவர்னரை விட தன்னுடைய ‘தொலைநோக்கு’ பார்வையை முன்வைத்து அதிபராக நினைக்கும் ஒபாமாவிற்கு இது மேலும் பொருத்தமாக இருக்கும்.

  —She spoke confidently but just bullcrap.

  The political prisoner and revolutionary Mumia Abu-Jamal wrote this summary about the meaning of the Obama candidacy: YouTube – Mumia Abu Jamal -Is Sen. Obama's Victory Ours..Real Change?!: “Politics is the art of making people believe that they are in power when in fact, they have none.”

 11. தெகா,

  —நம்மூர் அரசியல் பாணி கலை கட்ட ஆரம்பிச்சிருக்கு—

  🙂 😀

 12. இந்த நிலைக்கு, பொருளாதாரம்/வீட்டு மதிப்பு/நிதிநிலை இறங்கும் என்று முன்பே கணிக்கவியலாத — மூன்றாண்டுகளாக பணியாற்றும் பராக் ஒபாமாவைக் குறித்தும் இதே கேள்வியை கேட்கவேண்டும்.

  He had warned of this two years ago. I am not blaming Palin for the crisis. But why she had to frown like a political Barbie doll for each and every answer she gave. It is a shame on any self respecting feminist out there to say that she represents the women of today.

  About Obama’s candidacy.. I have written about the same thing. Obama is American. Neither black nor white.

 13. சிறில்,
  என்னாச்சுய்யா… இங்கிலிசில் பொளந்து கட்டறீங்க 😛

 14. அது தானா வருது தல.. 🙂

  என்னோட கணக்கு இதுதான்.. ஒருத்தர் ஒரு பரிட்சையில 0 மார்க் வாங்கியிருக்காங்கண்ணு வச்சுக்குவோம் 2 வாரம் கழிச்சு அதே பாடத்துல சூப்பர் மார்க் வாங்கிட்டாங்கன்னா அவரோட அதிரடி மேதாவித் தனத்த எப்படி சந்தேகமில்லாம ஏத்துக்கிறது? பேலின் CBS நேர்காணல்ல உளறுனதுக்கும் நேத்து பேசினதுக்குமிடயில நடந்த கோச்சிங்க் பிரமிக்க வைக்குதுதான் ஆனா அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஒருத்தருக்கு கோச்சிங்காலத்தான் விஷயங்கள பேசவே முடியும்ணா கேவலம். அப்படி ஒருத்தர் 8 வருடமா ஆட்சி புரிஞ்ச லட்சணம் தெரியுமே.

  அரசியல் பள்ளிக் கூட மாணவி பேலீன். அவர் கல்லூரி பாடங்களை மக் அப் செஞ்சு டிகிரி வாங்கிட்டார் என்பதுக்காகவே அவருக்கு வேலை போட்டு குடுக்க முடியாதுண்றேன்.

 15. //அரசியல் பள்ளிக் கூட மாணவி பேலீன். அவர் கல்லூரி பாடங்களை மக் அப் செஞ்சு டிகிரி வாங்கிட்டார் என்பதுக்காகவே அவருக்கு வேலை போட்டு குடுக்க முடியாதுண்றேன்.//

  பேலினாவது மனப்பாடம் பண்ணி ஒப்பித்தார்.Messiah (ஒபாமா) கொலராடோவில் பேசும்போது டெலிபிராம்ப்டர் வேலை செய்யாததால் பேச்சையே நிறுத்திவிட்டார்.மனப்பாடம் பண்ணி ஒப்பிப்பது பரவாயில்லையா இல்லை பிட் அடிச்சு பாஸ் பண்ணுவது பரவாயில்லையா?:-)

  கிழக்குள்ளநரிகள் மெக்கெயினும்,பைடனும் தான் எக்ஸ்டெம்போராக பேசகூடியவர்கள்.அதிலும் பைடன் plagarism செய்து மாட்டிக்கொண்டவர்

  நாலுபேரிலும் பேச்சுதிறமை என்று பார்த்தால் தேறுவது மெக்கெயின் தான்.ஒபாமா அடிக்கடி வாய் விட்டு மாட்டிக்கொள்கிறார். பென்சில்வேனியாவில் “கன்ஸ் அன்ட் ரெலிஜியன்” என்றது..”பாகிஸ்தானை குண்டுபோடுவேன்” என்றது இதெல்லாம் childish and un-presedential

 16. Selvan never fails to amuse me whether he talks about Indian poltics or American politics.

  //நாலுபேரிலும் பேச்சுதிறமை என்று பார்த்தால் தேறுவது மெக்கெயின் தான்.//

  Like what? Blabbering ‘fundamentals of our economy are strong’, and coming up with a dumb explanation equating it to the strength of American workers? Or plagiarizing “change” slogan of his opponent?

  Talking of political plagiarism, see this interesting piece involving Canadian Prime Minister:

  http://news.bbc.co.uk/2/hi/americas/7645738.stm

 17. Thala..

  I want tamil translation of english comments..

 18. பத்மா…

  பைடனை அடக்கி வாசிக்க சொல்லியிருப்பார்கள். பேலினை மட்டந்தட்டி பேசினார் என்று பெண்களுக்கு எதிராக பூமராங் இருக்கும் அபாயம் இருந்ததால், அவரும் தர்மசங்கட சிரிப்புடனேயே முடித்துக் கொண்டார்?!

 19. சிறில்…

  —அரசியல் பள்ளிக் கூட மாணவி பேலீன். அவர் கல்லூரி பாடங்களை மக் அப் செஞ்சு டிகிரி வாங்கிட்டார் என்பதுக்காகவே அவருக்கு வேலை போட்டு குடுக்க முடியாதுண்றேன்.—

  கரீட்டு… மாணவி. பாடங்களை உருப்போட்டு ஒப்பிப்பவர்.

  தலைமைப் பதவி எங்கே கொடுக்கப் போறாங்க…
  சும்மா கொ.ப.செ மாதிரி ஒப்புக்கு சப்பாணி ரோல்தானே!

 20. செல்வன்…

  —-பென்சில்வேனியாவில் “கன்ஸ் அன்ட் ரெலிஜியன்” —

  துப்பாக்கி வைத்துக் கொண்டால் துஷ்டர்கள் எல்லாம் தூர ஓடிப்போவார்கள் என்னும் முட்டாள்தனமான நம்பிக்கை குறித்தும், ‘Alliance Defense Fund’ போன்றோரின் ஆதரவில் தேவாலயங்களில் பிரச்சாரம் நடத்தும் குடியரசுக் கட்சி கடவுள் நம்பிக்கை exploitationஐயும் எதிர்ப்பது தவறல்ல.

  கொஞ்சம் விரிவாக (தனிப்பதிவாகவே கூட இடலாம்)

  1. வீட்டில் இருக்கும் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடத்தில் கூடப்படிக்கும் மாணவர்களை சுட்டுத் தள்ளுவது; மனநிலை பிழற்ந்தவர்களும் எளிதில் துப்பாக்கியை வாங்குமாறு அமைந்திருக்கும் சட்டங்கள்… Wild wild west காலத்தில் செல்லுபடியானதை இன்றும் நம்புபவர்களை சாடினார் ஒபாமா.

  இது கடுமையாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றே

  2. ‘Alliance Defense Fund’ – தொண்டு நிறுவனங்களாக கருதப்படும் கிறித்துவக் கோவில்களில் தேர்தல் பிரச்சாரம் கூடாது. நிதியை தானமாகப் பெற்றுக்கொள்ளும் தேவாலயங்களில் மதம் மட்டுமே நடக்க வேண்டும்.

  யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதோ, எவர் அமெரிக்க அதிபராக வேண்டும் என்று பைபிளில் எழுதியிருப்பதாகவோ போதிக்கக் கூடாது.

  ஆனால், புஷ் தேர்தலிலும் இந்தத் தேர்தலிலும் இது அரங்கேறுகிறது.

  கடவுள் நம்பிக்கையை வைத்து வாக்கு கேட்கலாமா என்பதும் விவாதத்துக்குள்ளாக்க வேண்டிய விஷயம்.

  இதைத்தானே ஒபாமா சொன்னார்!

  3. பாகிஸ்தான் குறித்து பா.ஜ.க கட்சித் தலைவர்கள் போல் பேசியிருக்கலாம்… ஆனால், ஒசாமாவையும் மும்பை குண்டுவெடிப்பை நிகழ்த்திய தாவூத்களையும் பேணிப் பாதுகாத்து, அமெரிக்க வரிப்பணத்தில் அல்-க்வெய்தாவுக்கு சோறு ஊட்டுபவர்களைப் வேறு எப்படி பார்ப்பது? (என்பது ஒபாமாவின் கருத்து)

 21. உண்மைத்தமிழர்…

  —I want tamil translation of english comments..—

  நான் பாகிஸ்தான் ஜனாதிபதி ஜர்தாரி போன்றோர் ஆங்கிலத்தில் ஜொள்ளு விட்டால் மட்டுமே தமிழில் மொழிமாற்றுவேன் என்னும் சபதத்தில் உள்ளேன் 😉

 22. மூஸ் ஹன்டர்… நன்றி

 23. Selvan,
  It is one thing to support the GOP and its policies and entirely another to compare Palin and Obama. Obama writes his own speeches at times. The Ohio incident you are mentioning, I have never heard of it. But I have seen several of his speeches and his debate performance and interviews where he did not have to get back to the interviewer or did not remember the name of the news paper he was reading.

  If you think winking and being ‘folksy’ is presidential then Obama is not.

 24. //பேலின் CBS நேர்காணல்ல உளறுனதுக்கும் நேத்து பேசினதுக்குமிடயில நடந்த கோச்சிங்க் பிரமிக்க வைக்குதுதான் ஆனா அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஒருத்தருக்கு கோச்சிங்காலத்தான் விஷயங்கள பேசவே முடியும்ணா கேவலம். அப்படி ஒருத்தர் 8 வருடமா ஆட்சி புரிஞ்ச லட்சணம் தெரியுமே.//

  In comparision GW Bush towers like a Phd 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.