- ஜனநாயகக் கட்சி மாநாட்டிற்கு ஆதரவு அளிக்கும் தனியார் நிறுவனங்கள்: 75
- குடியரசுக் கட்சி மாநாட்டிற்கு ஆதரவு அளிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை: 50
- அமெரிக்காவின் தலை 0.1% அதிக சம்பாத்தியக்காரர்களுக்கு ஒபாமாவின் வரித்திட்டத்தினால் கிட்டும் இழப்பு: –5 %
- அதே பெரும்பணக்காரர்களுக்கும் ஜான் மகயின் அதிபரானால் மாறும் வருமான வரி சதவீதம்: +12%
- தற்போதைய புஷ் அரசினால் தலை ஒரு சதவிகித செல்வந்தர்களுக்கு கிடைத்திருக்கும் வருமான உயர்வு: 75%
- அமெரிக்காவின் ஆர்க்டிக் நிலப்பரப்பில் எண்ணெய் எடுப்பதால் கச்சா எண்ணெய் விலை எவ்வளவு தூரம் குறையும்: நான்கு சென்ட்கள் (ஒரு காலனுக்கு)
//அமெரிக்காவின் ஆர்க்டிக் நிலப்பரப்பில் எண்ணெய் எடுப்பதால் கச்சா எண்ணெய் விலை எவ்வளவு தூரம் குறையும்: நான்கு சென்ட்கள் (ஒரு காலனுக்கு) //
அதுக்கு ஒரு கண்டத்தையே காவு கொடுக்கப் போறாய்ங்களே :))… ஏன் இவிங்களுக்கு மாற்று எரிபொருள் கண்டிபிடிப்பில அவ்வளவு ஆர்வமில்லாம இருக்கிறாய்ங்க, லம்ப்பா ஏதும் அடிக்க முடியாதுன்னா ஆயில் மாதிரி உற்பத்திய ஏத்தி, இறக்கி (இப்ப அழிச்சாட்டியம் அடிக்கிற மாதிரி) ?.
எனக்கு இந்த கடல்ல தோண்டுறதும் நல்லதா தெரியலை, துருவத்தில தோண்டுறதும் சரியாப் படலை, ஆனா, முட்டாப் பசங்க அதிலதான் நிக்கிறாய்ங்க :((.
இப்போதைய நிலைமையில் மாற்று எரிபொருள் தயாரித்து அனுப்புவதற்கு எக்கச்சக்கமாக செல்வாகிறது. அதற்கான வரிவிலக்கு சலுகைகளைக் கருத்தில் கொண்டாலும், (payback period) போட்ட முதலை எடுக்க முடிவதில்லை.
மேலும், எங்க ஊர்க்காரர் டெட் கென்னடி போன்றோர்களின் கொல்லைப்புறத்தில் காற்றாடி வைப்பது கண்ணுக்கு நன்றாக இருக்காது என்று முட்டுக்கட்டையும் இடுகிறார்கள்.
அப்புறம் உங்கள் வாசிப்புக்கு: The Age of Oil: The Mythology, History, and Future of the World’s Most Controversial Resource – Google Book Search