அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு பதிவர்களிடம் கேள்வி கேட்டு எனக்குள்ள சந்தேகங்களை நிவர்த்திக்க எண்ணம். முதலில் மாட்டியவர் பதிவர் டைனோ.
நீங்களும் பதிலளிக்க ரெடி என்றால், உங்கள் மின்னஞ்சலை எனக்கு அஞ்சல் செய்ய வேண்டுகிறேன். கூடவே கேள்விகளையும் கேட்டுக் கொண்டுவிட்டால், பதிலளிக்க தோதுப்படும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.
இனி டைனோவுடன் குறுக்கு விசாரணை:
1. ட்விட்டரில் கொடுக்கும் ஸ்டேட்டகளைப் பார்த்தால் நீங்க குடியரசுக் கட்சி ஆதரவாளர் போல் தெரிகிறீர்? ஏன் ரிபப்ளிகன்ஸ்?
நான் குடியரசுக்கட்சி ஆதரவாளன். கட்சிகளைக்களைக் கடந்து, நல்ல நவரச பேச்சாளர் என்பதால் பில் க்ளிண்ட்டன் பால் கொஞ்சம் சாஃப்ட் கார்னர் உண்டு.
ஏன் ரிபப்ளிக்கன் – கொஞ்சம் எனக்கு தெரிந்தளவில் விரிவாக பதிலளிக்க முயல்கிறேன்:
அவர்களின் கொள்கை மேல் கொண்ட ஈர்ப்புத்தான் முதல் காரணம். குடியரசுக்கட்சியின் கருக்கலைப்பு, ஒருபால் சேர்க்கை ஆகிய சில கொள்கைகளில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அவர்களின் மற்ற கொள்கைகளில் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளேன். ஜனாதிபதி ரீகன் அவர்களின் “Lesser Government Intervention” அதாவது அரசாங்கத்தின் குறுக்கீடு இல்லாத ஒரு நாடு/பொருளாதாரம் என்பது என்னை மிகவும் கவர்ந்தது.
காப்பிடலிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் உள்ள பெரிய வேறுபாடு என்று இதை நான் கூறுவேன். கம்யூனிசம் சம்பாதிப்பது அனைத்தையும் அரசாங்கத்திடம் கொடுத்துவிட்டு அரசாங்கத்திடமே கையேந்தச்செய்யும் ஒரு வறட்டு சித்தாந்தம். எல்லாவற்றையும் அரசாங்கத்திடம் இறைந்து பெறவேண்டிய நிலை வந்தால் தனி மனித முன்னேற்றத்தை தடை செய்வது போல உள்ளது. வாசிப்பிற்கு மிகவும் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் எழுதத்ப்பட்ட ஒரு நடைமுறை சாத்தியமில்லாத மனிதகுல வளர்ச்சியை தடைசெய்யும் புதினம்தான் கம்யூனிசம். கம்யூனிசத்தின் வீழ்ச்சி மனித பரிணாமத்தின் அவசியம் என்பதை உலக மக்களைப்போல நானும் உணரத்துவங்கியிருக்கிறேன்.
சுதந்திரக்கட்சி சமத்துவம், சமதர்மம் போன்ற ஏட்டு சுரைக்காய்களை இன்னும் தாங்கிப்பிடிப்பதால் அவர்களை வெறுக்கிறேன். அரசாங்க மருத்துவக் காப்பீடு, அரசாங்கத்தின் தயவிலான கல்வி போன்றவை எனக்கு பிடிக்கவில்லை. நம்மை பாதுகாத்துக்கொள்ள ‘நம்மை’ விட சிறந்தவர் யாருமில்லை என்பது ரிபப்ளிக்கன்கள் கருத்து. நமக்கு ‘அரசாங்கமே’ சிறந்த பாதுகாப்பு அளிக்கும் என்பது ஜனநாயக கட்சியின் வாதம்.
இப்போதைய அமெரிக்காவில் என் குழந்தையை நான் தனியார் பள்ளிக்கு அனுப்ப விரும்பினாலும் அரசாங்கத்திற்கு பள்ளிக்கான வரியை செலுத்தியே ஆகவேண்டும். ஒரு வகையில் என் பிள்ளைகள் எந்த பள்ளிக்கு செல்லவேண்டும் என்பதை அரசாங்கம்தான் முடிவு செய்கிறது. (ஏன் நல்ல பள்ளியிருக்கும் மாவட்டத்திற்கு மாறி விட வேண்டியதுதானே என்று விதண்டாவாதம் செய்யலாம் – அதைப்பற்றி விரிவாக பிரிதொருநாளில்).
நாளை அதே முறையைத்தான் ஜனநாயகக்கட்சி மருத்துவத்திற்கும் அறிமுகம் செய்யவிருக்கிறது. வருடத்திற்கு 10,000 டாலர் மருத்துவ சேவை வரி கட்டும் நானும், வேலை செய்யாமல் அரசாங்க உதவி பெரும் ஒருவரும் ஒரே வரிசையில் தரமில்லாத ஒரு மருத்துவமனை வரிசையில் காத்திருக்ககும் நிலை வரும். இதில் ஹில்லாரி/ஓபாமா கொண்டுவருவதாக சொல்லப்படும் மருத்துவக் காப்பீட்டில் எனக்கு விருப்பமில்லாவிட்டாலும் நான் வரி செலுத்த கட்டாயப்படுத்தப்படுவேன், இப்போது பள்ளிகளுக்கு வரி கட்டுவதைப்போல! Rob the rich and distribute to poor என்பது ராபின்ஹுட்டிற்கும் எம்ஜியார் திரைப்படங்களுக்கு மட்டுமே உரிதானவை. அவரே தன் கடைசி காலத்தில் அமேரிக்கா வந்துதான் மருத்துவச்சிகிச்சை பெற்றார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஏன் எல்லோரும் சமமாக இருக்கலாமே என்று இந்திய கம்யூனிஸ்டுகளைப்போல கேட்கலாம். அதற்கு லிங்கன் அவர்களின் கூற்றே பதில் – “The government that can do everything for us will take everything from us”. அரசாங்கம் சீரமைப்பு சட்டங்களை ஏற்படுத்திவிட்டு அதை வழிநடத்துவதை தனியாரிடம் ஒப்படைத்துவிடுவதே காப்பிடலிஸத்தின் அடித்தளம்.
The government should regulate by creating and amending laws not own institutes and run them. அரசாங்க சேவை என்றுமே தரத்துடன் இருக்காது என்பது கண்கூடு! அரசாங்கம் எப்போதுமே ஊழல் நிறைந்தது. அதன் தாக்கத்தை குறைப்பதே ஒரு நாடு பொருளாதார முன்னேற்றம் அடைய தற்போதைக்கு நமக்கிருக்கும் ஒரே தீர்வு! இந்தியாவில் அரசாங்கம் நடத்தும் பள்ளிகள்,மருத்துவமனைகள் எந்த தரத்துடன் இருக்கிறதோ அதே தரத்துக்கு அமெரிக்கவிலும் வந்து விட ஜனநாயகக்கட்சி துணை போவதாலும் அவர்களைப்பிடிக்காது.
நான் மேலே குறிப்பிட்டதைப்போல அரசாங்கமே பல துறைகளை நடத்த வேண்டும் என்று டெமக்ரட்ஸ் விரும்புவதால் அவர்கள் வரிகளை உயர்த்திக்கொண்டே வந்திருக்கிறார்கள். வரி அதிகம் கட்டுவது எனக்கு உவப்பில்லாததால் வரி குறைப்பை ஆதரிக்கும் குடியரசுக்கட்சியை எனக்குப் பிடிக்கும். பதில் மிகவும் நீண்டு விட்டது. விளக்கம் தேவைப்பட்டால் மீண்டும் தொடர்கிறேன்!
2. ஜான் மெகயின் – சாரா பேலின் அல்லது பராக் ஒபாமா – ஜோ பைடன்: எவருக்கு உங்க ஆதரவு? அடுத்த ஆட்சிக்கு எப்படி பொருத்தமானவர்கள் ஆகிறார்கள்.
இதற்கான பதிலை என் சென்ற பதிலில் இருந்தே ஊகித்திருக்கலாம். மெக்கெய்ன்னுக்குத்தான் என் ஆதரவு!
பராக் சிறந்த பேச்சாளர். அமெரிக்கத் தேர்தலில் இந்த நிலையை எட்டியிருக்கும் முதல் கருப்பினத்தவர் என்ற வகையில் அவரை மிகவும் மதிக்கிறேன். ஆனால் அதே சமயம் அவருக்கு பின்னால் இருக்கும் கட்சி இறந்த சித்தாந்தங்களை தூக்கிப்பிடிக்கும் வயதானவர்களும் புதிய சிந்தனைகளை ஏற்காத ஒரு கட்சி. சென்ற இரு தேர்தலின் போது பத்திரிக்கைகளில் வந்த பல கட்டுரைகள் டெமக்ரட் கட்சியின் அடிவேரை அம்பலப்படுத்தி அந்த கட்சிக்கு ஒரு நல்ல தலைமை இல்லாத குறையை சுட்டியிருக்கிறார்கள். அந்த ஒரு பெரிய இடைவெளியை ராஜ தந்திரத்துடன், இனபற்றையும் மாற்றம் என்ற வரையறுக்காத கொள்கையையும் முன்னிறுத்தி சொகுசாக அமர்ந்து கொண்டவர்தான் பராக். குடியரசுக் கட்சி அவ்வாறல்ல. இப்போதே Fiorina, Bobby Jindal, Palin போன்ற இள ரத்தங்களை பாய்ச்சி தன் கொள்கைகளை உயிர்பித்துக்கொண்டே இருக்கும் ஒரு கட்சி. என்னைப்பொருத்தமட்டில் பராக் இந்த ஆண்டு பொறுத்து அடுத்த தேர்தலாண்டில் போட்டியிட்டிருக்கலாம். அவர் செய்த சாதனைகள் எதுவும் பட்டியலிடும்படி இல்லை. அனுபவமின்மை, தலைமை ஏற்று நடத்தகுடிய முதிர்ச்சியின்மை ஆகியவை பெரிய கெடுதல்களை உருவாக்கலாம்.
மெக்கெய்னின் அனுபவம், நாடாளும் திறமை, நாட்டுக்கு ஆற்றிய சேவை, பல்லாண்டு கால செனட்டில் இருகட்சிகளை பல திட்டங்களில் ஒருங்கிணைத்த பாங்கு, பொறுமை, எதிர்த்து போட்டியிட்ட தன் கட்சி மற்றும் மற்ற கட்சி வேட்பாளர்களை கையாண்ட முதிர்ச்சி ஆகிய பல பண்புகளுக்கு டெமக்ராட்ஸிடம் எந்த சரியான பதிலுமில்லை!
3. ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் அமெரிக்காவில் மாற்றம் வராது’ என்று மேலோட்டமான அனுமானம் எனக்கு உண்டு. அடுத்து மெகயின் வந்தால் எது வேறுபடும்? ஒபாமாவாக இருந்தால் எப்படி ஆகும்??
நல்ல சிறப்பான பதிலகள். பல புதிய பார்வைகள் கிடைத்தன எனக்கு.
//சுதந்திரக்கட்சி சமத்துவம், சமதர்மம் போன்ற ஏட்டு சுரைக்காய்களை இன்னும் தாங்கிப்பிடிப்பதால் அவர்களை வெறுக்கிறேன். //
இந்த கருத்து மிகவும் மேலோட்டமானதாகவும், அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.
பொதுவாக அமெரிக்கர்கள் தாங்கள் கட்டும் வரிப்பணம் எப்படி செலவாகிறது என்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள். டெமாக்கிரட்ஸ் மட்டும் விதிவிலக்காக டைனோ சொல்வது ஏற்றுக் கொள்ளச் சிரமமானதாக இருக்கிறது.
அதிகம் சம்பாதிக்கும் திறன் உள்ளவர், அதிகமாக வரி கட்ட வேண்டியவர், விலையுயர்ந்த சொகுசு காரில் பயனிக்கலாம். ஆனால் அடிப்படை வசதியான ரோடு எல்லாருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். அங்கே சமத்துவத்தை நீங்கள் விலக்க முடியாது. விலக்கவும் கூடாது.
அரசாங்கம் நிறுவனங்களை ஏற்று நடத்துவதால் மட்டுமே ஊழல்கள் பெருகுவதில்லை. சட்டதிட்டங்கள் அமலாக்கப்படும் விதத்திலும், சுயநலத்திற்காகவோ, குழு நலத்திற்காகவோ தவறுகளை சகித்துக் கொள்ளும் மனப்பண்மையினாலும் ஊழல் பெருகும் வாய்ப்புகள் அதிகம் என்றே நினைக்கிறேன்.
//அரசாங்கத்திடம் இறைந்து // ‘இரந்து’ என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் :-)).
ஜூப்பரு!! டைனோ நல்லாவே பதில் சொல்லி இருக்காரு. அதுவும் நம்ம ஊர் மாதிரி நாவன்மையையும் என்னான்னே புரியாத சேஞ்ச் என்னும் கருத்தையும் முன் வைக்கும் பராக் இது வரை என்னைக் கவரவில்லை.
அடுத்தது யாரு? doninon தானே! :))
ஸ்ரீதர் –
சமத்துவம் சமதர்மம் என்பது அறவே இருக்கக்கூடாது என்பதல்ல ரிப்பளிக்கன்களின் வாதம், ஆனால் எந்தேந்த துறையில் அது இருக்க வேண்டும் என்பதில்தான் சிக்கலே.
ஒரு நாட்டின் கட்டுமானபணி திட்டங்களை வகுக்கவும் அதை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும் என்று ஒரு அரசாங்கம் வழிநடத்தலாம். ஆனால் அரசாங்கமே ஊழியர்களை நியமித்து தார் சாலை அமைத்துக்கொண்டிருக்கக் கூடாது. அமெரிக்கர்கள் தங்கள் வரிப்பணம் எப்படி செலவாகிறது என்பதை தெரிந்திருகிறார்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். படித்த மேல்தட்டு மக்கள் வாழும் பெரு நகரங்களில் வாழும் அமெரிக்கர்களை மனதில் வைத்து அவ்வாறான முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால் அந்த நகரத்திலிருந்து 50 மைல் தொலைவில் உள்ள ஒரு சிறுநகரத்தில் அங்காடி நடத்தும் சாதாரண குடிமகனுக்கு அவ்வளவு தெரியாது! கிராம்க்களைப்பற்றி சொல்லவேண்டாம்!
டெமக்ராட்ஸ் அரசாங்கம் கல்வி, மருத்துவம் ஏன் நாளை வீட்டு கடன் திட்டம் என்று எல்லாவற்றையும் ஏற்று நடத்த வேண்டும் என்று எண்ணுகிறது. இதைத்தான் இடதுசாரித்தாக்கம் என்று ரிப்பப்ளிக்கன்ஸ் நினைக்கிறார்கள், அது உண்மையும்கூட. அரசாங்கம் எல்லாவற்றிலும் தலையிட்டால் ’Free Market’ என்று சொல்லப்படுகிற சந்தைமுறையே அழிந்து போகும். இந்த சந்தையே காப்பிடலிஸ்த்தின் fundamental premises. ’ Free Markets’ பற்றி விரிவாக பிரிதொரு நாளில் :).
மிகச்சமிபத்திய உதாரணம் கச்சா எண்ணெய் விலையுயர்வு. இதற்கான காரணம் அனைவரும் அறிந்ததுதான் – கச்சா எண்ணெய் வியாபாரத்தில் முதலீட்டாளர்ககளின் உத்தேச சூதாட்ட பேரம். ஆனால் இந்த சூதாட்டமும், Bubble and burst எல்லாம் free marketன் ஒரு அங்கம். அதற்கு மாண்புமிகு பி.சிதம்பரம் தெரிவித்த யோசனை – சூதாட்டத்தை ஒரு வரம்புக்குள் (allowing price to fluctuate within a pre-defined boundary) நடக்க அரசாங்கங்கள் தலையிடவேண்டும் என்பதுதான். இதுதான் இடதுசாரி சிந்தனை என்கிறேன் நான். Free Market ன் அடிப்படையே ‘The market will correct itself’ தான். ஆனால் அதன் பயனையெல்லாம் அனுபவித்துக் கொண்டு அதையே கடிவாளம் போட்டுக்கட்டி ஆளவேண்டும் என்ற பேராசைத்தவிர வேறென்ன. சரி எண்ணெய் விலை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது – Just NOTHING!. The Market corrected itself. மக்கள் தங்கள் நுகர்வை குறைத்தோ, வேறு மாற்றுப்பாதை வகுத்தோ அதை எதிர்கொள்வார்கள் / கொண்டார்கள். $5க்கு விற்ற பெட்ரோல் இன்று $3.30க்கு குறைந்துவிட்டது. இதைப்போன்ற அன்றாட நிகழ்வுகளில் ‘Free Market’ சித்தாந்தம் வெற்றி பெரும் போது அதன் மேல் நம்பிக்கை அதிகரிக்கிறது. Anyways I had digressed enought I guess – சொல்ல வந்தது டெமக்ராட்ஸ் அரசாங்கள் பல துறைகளை ஏற்று நடத்தவேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள் – ரிப்பளிக்கன்ஸ் தனியார் அதை நடத்துவதே சிறந்தது என்று கருதுகிறார்கள். டெமக்ராட்ஸின் இந்த கொள்கைகளை நிறைவேற்ற அதிக வரி தேவைப்படுகிறது, ரிப்பப்ளிக்கன்ஸின் கொள்கையில் அரசாங்கம் சட்டம் இயற்ற தேவையான அதிகாரம் மற்றும் பலமே உள்ள Lean Government தேவை என்று வாதிக்கிறார்கள்.
—அடுத்தது யாரு? doninon தானே!—
பஸ்மாசுரனாக உங்களை நோக்கி கேட்க எண்ணம்? தயாரா 🙂
Free Market என்பதே ஒரு மாயை, கேப்டலிஸசம் என்பது ஒரு வகை விளையாட்டு என்றே சொல்ல வேண்டும். அந்த விளையாட்டில் சிலருக்கு மட்டும் சாதகமான அம்சங்கள் பல வருடங்களாக அமைந்து வருவதைத் தான் ஒபாமா மாற்ற வேண்டும் என்கிறார்.
குடியரசு கட்சியின் ஜனாதிபதி பதவிக்கு ஒபாமவை அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுத்த பொழுது, பலரும் கேட்டுக்கொண்டிருந்த கேள்வியான “What is the change your propose?” என்பதற்கு அஃகு வேறு ஆணி வேறாக என்ன செய்யப் போகிறோம் என்று மிக ஸ்திரமாகவே பேசியுள்ளார். என்னை மிகவும் கவர்ந்த் பேச்சும் அது.
மெக்கெய்னின் 1% மேற்குடி மக்களுக்கு வரி சலுகைகள் அதிகரித்தல் என்பதைத் தான் ஒபாமா எதிர்கிறார். உலக மயமாக்கம் என்ற பெயரில் நீலக் காலர் வேலைகளை மீண்டும் மீண்டும் சீனாவிற்கு கொண்டு செல்ல்வது எப்படி நாட்டு வளர்ச்சியாக முடியும். அமேரிக்காவில் வாழ்ந்தால் ஒன்று வால் ஸ்ட்ரீட்டில் வாழ வேண்டும் அல்ல கம்ப்யூட்டருடன் தான் வாழ் நாளைக் கழிக்க முடியம் என்ற நிலை கண்டிப்பாக மாற வேண்டும். வேறு எந்த நாட்டில் இவ்வளவு குளறுபிடியான சித்தாந்தம் உள்ளது?
வீட்டுக் கடன் பிரச்சனை, பண வீக்கம் என்ற பல முக்கியமான பிரச்சனைகளுக்கு மெக்கைய்ன் பதில் சொல்லவே இல்லை.
70 வயது கிழவனுக்கு 40 வயது மங்கயைத் திருமணம் செய்தார் போல் தான் ரிப்பப்லிக்கன் கெம்பேய்ன் இப்பொழுது நடந்து வருகிறது. அனுபவம் இன்மையை இனி ஒரு யுக்தியாகப் பயன்படுத்த முடியாமல் நானும் ஒரு கத்துக்குட்டியைக் கொண்டு வருகிறேன் விளையாட்டுக்கு என்பது போல் உள்ளது பெய்லின் நியமனம்.
ஓரினப் பால் சேர்க்கை, கரு கலைபெல்லாம் இன்று ஒரு விஷயமே அல்ல. தலைப் போகிற இராக் போர் மற்றும் அமேரிக்க வணிக, வர்த்தக நலனே இத்தேர்தலின் முடிவை நிர்ணையம் செய்யும்.
ஒஹாயோ மாகாணம் போன்ற ஸுவிங் ஸ்டேட்களில் நீலக் காலர் வேலைகள் கொண்டு வருவோம் என்று ஒபாமா மீண்டும் மீண்டும் வாக்குறுதி அளித்து வருவது அவருக்கு பலமாக அமையும்.
ஒபாமா பைடன் கூட்டணி ஒரு தந்தை மகன் உறவை காட்டுகிறது. சிவனும் முருகனும் போல் என்று சொல்லுவேன். யார் சிவன் யார் முருகன், உங்களுக்கே தெரியும் என்று நம்புகிறேன்.
http://mrcritic.wordpress.com
//The market will correct itself’ தான். ஆனால் அதன் பயனையெல்லாம் அனுபவித்துக் கொண்டு அதையே கடிவாளம் போட்டுக்கட்டி ஆளவேண்டும் என்ற பேராசைத்தவிர வேறென்ன. சரி எண்ணெய் விலை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது – Just NOTHING!. The Market corrected itself. மக்கள் தங்கள் நுகர்வை குறைத்தோ, வேறு மாற்றுப்பாதை வகுத்தோ அதை எதிர்கொள்வார்கள் / கொண்டார்கள். $5க்கு விற்ற பெட்ரோல் இன்று $3.30க்கு குறைந்துவிட்டது. //
கொஞ்சம் சிக்கலான விஷயம். எனது பொருளாதார அறிவு அவ்வளவாக கிடையாது. ஆனால் இந்த Free Market பத்தி சில அடிப்படை புரிதல்கள் தேவை. சுதந்திர வர்த்தகமும் சமத்துவமும் சேர்ந்தே இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அதற்கு அரசாங்கத்தின் பங்கேற்பு அவசியம். உதாரணமாக இந்தியாவில் தொலைத் தொடர்பு கட்டுமான வசதிகள். சாம் பிட்யூரோ, அருண் ஷோரி போன்றவர்கள் அரசாங்கத்தின் பல பிராசஸ்களை எளிமைப்படுத்தியதால் மட்டுமே இன்று இந்தியாவில் இவ்வளவு பெரும் கட்டுகோப்பாக தொலைத் தொடர்பு வசதிகள் முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்று தோன்றுகிறது. 🙂
bmurali80,
இப்போதுதான் உங்கள் வலைப்பதிவைப்பார்த்தேன். கம்யூனிசத்தையும் கிண்டி, காப்பிட்டலிசத்தையும் கிளறி இருக்கிறீர்கள். அப்ப எந்த பொருளாதாரக் கொள்கையை ஆராதிக்கிறீர்கள்.
பல பராக் ஆதரளவாளர்களிடம் விவாதிக்கவே எனக்கு பயம் – காரணம் மிகத்தெளிவாக குழம்பியிருப்பார்கள் விளக்கி முடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும் :(.
1% மேட்டுக்குடியின் வரியைக் குறைக்கிறார்கள் என்று குற்றச்சாட்டுக்கு பதில் – அமெரிக்காவின் மேட்டுக்குடியினராக கருதப்படும் 1 சதவீதத்தினர் அமேரிக்காவின் 31 சதவீத வரியை கட்டுகிறார்கள் என்று மெக்கைய்னோ, பேலினோ சொல்லவில்லை, Congressional Budget Office சொல்கிறது. http://www.cbo.gov/ftpdocs/77xx/doc7718/EffectiveTaxRates.pdf The top 10% pay more than 80% of the total taxes. அந்த 20 சதவீதத்தினரும் ஏதோ மில்லியன் மில்லியனாக சம்பாதித்துக் குவிப்பவர்கள் அல்ல. அவர்கள் சம்பாதிப்பதில் 35-39% சதத்தை வரியாக கட்டுகிறார்கள். அரசாங்கத்திடம் “ஐயா 38% அதிகம் 33% ஆக குறைத்துக்கொள்ளுங்கள்” என்று கெஞ்சினால் அவர்களை சமுகநீதி தவறியர்கள் என்று குற்றம்சாட்டுபவர்கள்தான் டெமாக்ரட்ஸ்! அதனால் தான் புஷ் “No one in America should pay more than 1/3 of their eranings as taxes” என்று கூறியபோது அவரை ஏழைகளின் எதிரி என்று வெகு சுலபமாக சித்தரிக்க டெமாக்ரட்ஸால் முடிகிறது!
”ஓரினப் பால் சேர்க்கை, கரு கலைபெல்லாம் இன்று ஒரு விஷயமே அல்ல”
அமெரிக்கா ஒரு கன்சர்வேட்டிவ் நாடு. ஐரோப்பிய நாடுகளைப்போல தன்னுடைய மதம், சமயங்களை துறக்காத தேசம். அமெரிக்கர்கள் பலர் தீவிர கத்தோலிக்க சமய பண்புகளை கடைபிடிப்பவர்கள். அமெரிக்காவின் இந்த பண்புகளை அறியாத தொலைக்காட்சியில் காட்டப்படும் அமேரிக்கா என்ற பிம்பத்தை மட்டுமே (சாரு, பாமரன் போல) பார்பவர்களால்தான் மேற்கூறிய வரிகளை கூறமுடியும்!
”ஓபாமாவின் வாக்குறுதிகள்”
ஒபாமா வாக்குறுதிகளை அள்ளி வீசியதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவார் என்று விளக்கம் எங்குமே இல்லை. ஒவ்வொரு மாற்றத்திற்கும் எத்தனை செலவாகும் அதை எவ்வாறு பெறப்போகிறார், அதை எந்த விகிதத்தில் செயல்படுத்தப்போகிறார் என்ற ஒரு தகவலும் இல்லை. http://www.barackobama.com/pdf/ObamaBlueprintForChange.pdf இது ஓபாமாவின் கொள்கைகளை அறிவுறுத்தும் கையேடு. இதில் அவருடைய மாற்றங்களுக்கான செலவு, அதை செயல்படுத்துவதற்கான காலம், செயல்படுத்தும் முறை என்ற எதாவது படித்தவர்கள் ஏற்றூக்கொள்ளக்கூடிய தகவல் இருந்தால் அறியத்தாருங்கள்!
“அமேரிக்காவில் வாழ்ந்தால் ஒன்று வால் ஸ்ட்ரீட்டில் வாழ வேண்டும் அல்ல கம்ப்யூட்டருடன் தான் வாழ் நாளைக் கழிக்க முடியம் என்ற நிலை கண்டிப்பாக மாற வேண்டும்.”
நிச்சயமாக. அப்படியானால் Wall Street மற்றும் Computer exposure இல்லாத மாநிலங்களில் எல்லாம் குடியரசுக்கட்சியே கோலோச்சுவதற்கான காரணங்களை பகிர முடியுமா?
மற்றபடி தந்தை மகன் போன்ற கருத்துக்கள் எல்லாம் விவாதத்திற்கு உதவாத நம் நாட்டு அரசியல் மேடைப்பேச்சையே நினைவுபடுத்துகிறது!
ஸ்ரீதர்,
>>>>அரசாங்கத்தின் பல பிராசஸ்களை எளிமைப்படுத்தியதால்
நீங்கள் மிகவும் அருகில் வந்துவிட்டதாகவே கருதுகிறேன்! இப்படி சட்டங்களை ஏற்படுத்திவிட்டு அரசாங்கம் தனியாரிடம் ஒப்படைப்பதற்கும் அரசாங்கமே தொலைத்தொடர்புத்துறையை கையில் வைத்து நிர்வகிக்கவும் உள்ள வேறுபாட்டை நீங்கள் அறிந்து கொண்டாலே Free Marketsன் கான்செப்ட் உங்களுக்கு புரிபடதுவங்கிவிடும்!
If you understand the fundamentals of supply and demand then you will start appreciating Free markets. Any external forces that interferes (esp Govt) between this supply and demand will distort the equation.
நீங்கள் அரசாங்க பங்கேற்பு என்று கூறுகிறீர்கள் but literally it is regulation not partnership / participation. Hope now you got where I was driving this!
//இப்போதுதான் உங்கள் வலைப்பதிவைப்பார்த்தேன். கம்யூனிசத்தையும் கிண்டி, காப்பிட்டலிசத்தையும் கிளறி இருக்கிறீர்கள். அப்ப எந்த பொருளாதாரக் கொள்கையை ஆராதிக்கிறீர்கள்//
சோத்துக் கட்சி, புரிஞ்சுக்க கொஞ்ச டைம் ஆகும். ஒபாமாவின் DNC பேச்சு கேட்ட பின்புமா குழப்புகிறார் என்கிறீர். அதிசயமே.
ஆதரிக்காம அரசியல் பேச முடியாது என்பதை உணர்கிறேன் எனினும் இது ஒபாமா ஆதரவு பேச்சல்ல. இன்று திக்குத் தெரியாமல் சென்றுக் கொண்டிருக்கும் நாட்டை அடுத்த படிக்குக் கொண்டு செல்லக் தகுதி யாருக்கு என்பதே பேச்சு!
சாமிங்களா Free market பேச்சு பேசி என்ன எதாவது எழுத வெக்காதீங்க. ப்ளீஸ்! தொலைத்தொடர்பு துறையை அடி மாட்டு விலைக்கு டாடா, அம்பானிகளிடம் விற்றது தான் Free market-a அவ்வ்வ்…
>>>>ஒபாமாவின் DNC பேச்சு கேட்ட பின்புமா குழப்புகிறார் என்கிறீர்.
ஒபாமாவின் பேச்சுத்திறமையை என்றுமே குறைத்து எடைப்போட்டுவிட முடியாது. ஆனால் அது ஒன்றே ஆட்சி செய்யப்போதுமா? கடந்த 8 ஆண்டு பொது வாழ்வில் அவர் சாதித்த பத்து விஷயஙகளை பட்டியல் இடுங்களேன்!
என் கேள்வி நேரிடையானது – அவர் கொடுத்துள்ள மாற்றங்களுக்கு எப்படி நிதி திரட்டப் போகிறார் என்பதை எங்காவது தெளிவுபடுத்தியிருக்கிறாரா? அந்த மாற்றங்களை எப்படி அமல்படுத்தப்போகிறார் என்றாவது விளக்கியிருக்கிறாரா?
திக்குத்தெரியாமல் சென்று கொண்டிருப்பதாக எந்த Economic Indicator காட்டுகிறது என்று விளக்குங்களேன்?
>>>>தொலைத்தொடர்பு துறையை அடி மாட்டு விலைக்கு டாடா, அம்பானிகளிடம் விற்றது தான் Free market-a அவ்
வாங்கைய்யா… சரி அப்படி விற்காமல் அரசாங்கம் என்ன செய்திருக்க வேண்டும். Indian Post, வங்கிகள் போல அரசாங்கமே நடத்தியிருக்க வேண்டுமா? சரி அப்படி அரசாங்கம் விற்றதால் இந்திய அரசாங்கமோ, மக்களோ இழந்தது என்ன?
அரசாங்கமே நடத்தும் இந்திய வங்கிக்கும் FDIC insured deposit வழங்கும் அமெரிக்க வங்கிகளுக்கும் உள்ள வித்தியாசங்களை உங்கள் Free market பற்றிய கட்டுரையில் விளக்குங்களேன்!
அமேரிக்காவின் எக்கனாமிக் இன்டிக்கேட்டர்க்கு 2004லியே உலை வெச்சாச்சு. 800 பில்லியன் டாலர் அளவுக்கு சோசியல் செக்யூரிட்டியிடமிருந்து நிர்வாகம் கடன் வாங்கியுள்ளது. எதற்கு சீனா விடம் பெற்ற கடனுக்கு குறைந்தத் தவனைமட்டும் கட்ட!
போன வாரம் ஃபிரெடி மெக் & ஃபென்னி மே மார்ட்கேஜ் ஊத்தி மூடி அரசாங்கம் தத்தெடுக்க வேண்டியுள்ளது. பெயர் பெற்ற பியர் அண்ட் ஸ்டெர்ன்ஸ் ஒரு நாள் மௌனமா வந்து நாங்க ஓட்டாண்டி ஆக போறோம் யாரவது காப்பத்துங்கனு சொன்னதெல்லாம் சாவு மணிகள் தானே – இண்டிகேட்டர்ஸ் இது போதுமா இன்னும் வேணுமா?
வெளிநாட்டு கால்களுக்க்கு ரிலையன்ஸ் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை ஏமாற்றிய விவாகரம் உண்மையில் இந்திய சட்ட குற்றப் பிரிவின் படி தேசத் துரோகத்துக்குச் சமம் –> தூக்கில் இடப் பட வேண்டும் ஆனால் கிடைத்தது சில கோடி நஷட்டயீடு. அதுவும் கட்டினாங்களானுத் தெரியலை ஆனா இரண்டு பில்லயன் டாலர் வீடு கட்டுறாங்கனு மட்டும் தெரியுது!
நிறைய படிக்கனுங்க…
முற்றும்.
>>>>800 பில்லியன் டாலர் அளவுக்கு சோசியல் செக்யூரிட்டியிடமிருந்து நிர்வாகம் கடன் வாங்கியுள்ளது.
அதனால்தான் குடியரசுக்கட்சி அரம்பம்முதல் Social Security சிஸ்டத்தையே ஆதரிக்கவில்லை. அரசாங்கம் நடத்தும் துறையின் லட்சணத்திற்கு நீங்களே நல்ல எடுத்துக்காட்டு கொடுத்திருக்கிறீர்கள்.
>>>>ஃபிரெடி மெக் & ஃபென்னி மே மார்ட்கேஜ் ஊத்தி மூடி அரசாங்கம் தத்தெடுக்க வேண்டியுள்ளது.
அரசாங்கம் அதிகமாக தலையிட்டதால் ஏற்பட்ட விழைவு. வினை விதைத்தவன் வினை அறுக்கிறான்!
>>>> பியர் அண்ட் ஸ்டெர்ன்ஸ்
Bear and Sterns ஐக் காப்பாத்தியது பெடரல் ரிசர்வ். அதில் அரசாங்கத்தின் பங்கு என்ன என்பது தெரியுமா? அதில் அமெரிக்க மக்களின் வரிபணம் எங்கே பயன்பட்டது. பெடரல் ரிசர்வ் அரசாங்க நிறுவனம் என்று சொல்லாதீர்கள் – அது அரசாங்க நிறுவனமல்ல. தேடி படித்துக்கொள்ளுங்கள்!
>>>> வெளிநாட்டு கால்களுக்க்கு ரிலையன்ஸ் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை ஏமாற்றிய விவாகரம் உண்மையில் இந்திய சட்ட குற்றப் பிரிவின் படி தேசத் துரோகத்துக்குச் சமம்
இப்போது ஒரு ரூபாய் தொலைப்பேசி கட்டணம் வசூலிக்கும் BSNL, இந்த நிறுவனங்கள் போட்டிக்கு வராததற்கு முன்பு மக்களிடம் அடித்த கொள்ளையைப்பற்றியும் கொஞ்சம் விவரமாக எழுதுங்களேன்! அது எந்த துரோகத்திற்கு சமம்?
>>>>நிறைய படிக்கனுங்க
கண்டிப்பாக! படித்தால் மட்டும் போதாது. அதில் உள்ள பல நிலைகளையும் அராயப்பழகவேண்டும். அதைத்தான் ஏட்டுச்சுரைக்காய்ன்னு பெரியவங்க சொல்லியிருக்கிறார்கள். ஒரு நிலையை தேர்வு செய்து நல்லது கெட்டதை, சாதக பாதகங்களை வடிகட்டத்தெரியவேண்டும். எதாவது ஒரு சித்தாந்தத்தையாவது முழுமையாக கற்று அதை நமக்கு ஏற்றவாறு செம்மைப்படுத்த முயலவேண்டும். எல்லாவற்றையும் கலந்தடித்தால் அஜீரணமே மிஞ்சும்!
நான் Economic Indicators என்று கேட்டதை தவறாக புரிந்துகொண்டு தவறான பதில்களை தந்திருக்கிறீர்கள். http://en.wikipedia.org/wiki/Economic_indicator சுட்டிக்குப்போய் அதில் உள்ள மற்ற சுட்டிகளையும் படித்துவிட்டு unemployment, housing starts, Consumer Price Index, Gross Domestic Product, money supply changes போன்ற சிலவற்றிலாவது கிளிண்ட்டன் அரசாங்கத்திலும் புஷ்சின் அரசாங்கத்திலும் எப்படி மாறுபட்டிருக்கிறது என்பதை பார்த்து கூறுங்கள். திக்குத்தெரியாமல் சென்று கொண்டிருப்பதாக இதில் எந்த Economic Indicator காட்டுகிறது என்று விளக்குங்களேன் என்றுதான் கேட்டிருந்தேன். உதாரணத்திற்கு GDPயை http://www.census.gov/prod/2007pubs/08abstract/income.pdf இல் உள்ள Table 646ல் பார்க்கலாம். கடந்த 8 ஆண்டுகளில் எந்த Boomமும் இல்லாமலே GDP was maintained at an average of above 3. Inspite of the media portraying and predicting a recession the GDP was consistently maintained என்பது எத்தனை பேருக்குத்தெரியும்?
அரிசி கிலோ என்ன விலைன்னு கேட்டா 25 மைல்ன்னு பதில் வந்தா எப்படியிருக்குமோ அப்படியிருந்தது உங்கள் பதில். சில கம்பெனிகள் மூடுவதால் / நஷ்டமடைவதால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டதாக எண்ண முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்!
மேலும் நான் ஒபாமாவைப்பற்றிக் கேட்ட நேரிடையான கேள்விக்கு பதில் தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்றே நம்புகிறேன்! :))
—–
நான் முன்பே கூறியதுபோல தாவுதீருதைய்யா! முடியல!! :))
பஸ்மாசுரன் அவன் தலையில் கை வெச்சுக்கிட்டான். நீங்க நம்ம தலையில் இல்ல வைக்கறீங்க! இதில் நடுவில் ஒரு ஏஜெண்ட் வேற!! நல்லா இருங்க சாமி!!
இது மாதிரி தகவலோட எல்லாம் தர முடியாது. பிடன், பாலின் – யாருடைய இடுப்பு அழகு, ஜான் மெக்கெயின் கவுஜ எழுதினா யாரைப் போட்டுத் தாக்குவாரு மாதிரி கேள்வி இருந்தா நம்ம பக்கம் தள்ளி விடுங்க.
பிங்குபாக்: இந்தியர்களுக்கும் இந்தியாவுக்கும் யார் நல்லது? - அமெரிக்க அதிபர் தேர்தல் « US President 08
பிங்குபாக்: ரஜினிக்குப் பின் கமல்: டைனோக்குப் பின் யாரு? - கேள்வி - பதில் « US President 08
பிங்குபாக்: இந்த வார விருந்தினர்: மூஸ் ஹன்ட்டர் « US President 08