அமெரிக்க அதிபர் பதவிக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்ன், தனது கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக பெண்ணொருவரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
அலாஸ்கா மாகாணத்தின் ஆளுநர்களிலேயே மிகவும் இளையவரான சேரா பேலின் அம்மையாரை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்கும் குறைவாகவே ஆளுநராக இருந்துவருபவர் அவர்.
நாற்பத்து நான்கு வயதுடைய பேலின் அம்மையார் ஒரு அரசியல் சீர்திருத்தவாதி. கருக்கலைப்பை கடுமையாக எதிர்த்துவந்தவர் அவர்.
ஜான் மெக்கெய்னின் இந்தத் தேர்வு, மிகவும் தைரியமான ஒன்று என்று கருதப்படுவதாக ஓஹியோ டேடன் நகரில் நடந்துவரும் குடியரசுக் கட்சி மாநாட்டில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
நன்றி: பிபிசி
ஜான் மெக்கெய்னின் இந்தத் தேர்வு, மிகவும் தைரியமான ஒன்று என்று கருதப்படுவதாக ஓஹியோ டேடன் நகரில் நடந்துவரும் குடியரசுக் கட்சி மாநாட்டில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்
****
ஜான் மெக்கெயினின் தேர்வு மிகவும் முட்டாள் தனமான தேர்வாகவும் சிலர் (பலர் ?) சொல்கிறார்களே ? அது பற்றி உங்கள் கருத்து என்ன ?
http://www.cnn.com/2008/POLITICS/08/29/begala.palin/index.html
செய்தியைப் பார்த்தவுடன் நினைத்தது… ட்விட்டரில் இருந்து: Given the opponent he had in Obama & Huckabee voters need to be satisfied, Palin is a good choice. Equals the field with a strong conservative
ஒபாமா ஆட்சிக்கு வந்தா outsourcing எல்லாம் குறச்சுடுவேன்னு சொல்லுறாரு… அப்ப இங்க வேலைவாய்ப்பு அதிகமாகுமா? இந்தியாவில் வேலைவாய்ப்பு குறையுமா? விசா எண்ணிக்கையும் குறைப்பாரா? Republican வந்தால் நம்மவர்களுக்கு நல்லதா?
IT வேலைவாய்ப்பை மையமாக வைத்து யார் வந்தால் நமக்கு நல்லது என்று வெகு நாட்களாக USல் உள்ள யாராவது ஒரு கட்டுரை எழுதினால் உபயோகமாக இருக்கும்.
கொஞ்சம் விரிவாக…
1. துணை ஜனாதிபதி என்பவர் சண்டக்கோழி. எதிர்க்கட்சி வேட்பாளரை ரகவாரியாக விமர்சிக்க வேண்டும். இவர் செய்வாரா என்பது அடுத்த வாரம் தெரியும்.
2. துணை ஜனாதிபதி வேட்பாளர், மெகெயினின் குறைகளை நிவர்த்திக்க வேண்டும் — வயது, இனம், கொள்கை, மாநிலம் என்று பார்த்தால் முதல் மூன்றிலும் தேறுகிறார்.
3. 2000/2004 நடந்த தேர்தல்களில் வென்ற மாகாணங்களை மீண்டும் மெக்கயின் தக்கவைத்துக் கொள்ள இவரும் உதவுவாரா? சர்வ நிச்சயமாய்
4. கறுப்பர் என்பதால் தாக்கப்படுகிறார் என்று அந்தப் பக்கம் தற்காத்துக் கொள்வது போல் ‘பெண் என்பதால் கடுமையாக கணிக்கப்படுகிறார்’ என்று இந்தப்பக்கம் தற்காத்துக் கொள்ளமுடியும்.
5. இவருக்கு மாற்றாக யார் யார் போட்டியில் இருந்தார்கள்:
அ) பெரு நிறுவனங்களின் முதலாளிகள் (ஈபே மெக் ரையான் & எச்பி கார்லி)
ஆ) மிட் ராம்னி (மாஸசூஸட்சை கொணர முடியாது; யூடா எப்படி இருந்தாலும் குடியரசு பக்கம்தான்; மேலும் பைடன் போல் 2012 ஐக் குறி வைத்து இயங்குவாரே தவிர, பட்டும் படாமலும் பேசிச் செல்பவர்)
இ) டாம் ரிட்ஜ்: பென்சில்வேனியா குடியரசு பக்கம் சாயாது; பெருசு என்பதால் நிறைய நொள்ளைகளைக் கண்டுபிடித்து தாக்க இயலும்
ஈ) இந்திய வம்சாவளி பாபி ஜிண்டால்
உ) துவக்கத்தில் இருந்து ஆதரவளித்த ஃப்ளோரிடா குடியரசுக்காரர் போல் ஒரு சில முக்கிய மாகணங்களை நிலைநிறுத்தக் கூடியவர்கள் — இந்த மாதிரி சொல்லித்தான் சென்ற த்டவை ஜான் எட்வர்ட்ஸ் நிறுத்தப்பட்டார். அவரால் எதௌயும் ஜனநாயகக் கட்சிப் பக்கம் கொணர முடியவில்லை.
அதற்கு பதில் இளமை, தாக்கவியலாதவாறு சிறு பின்னணி கொண்டவர் வித்தியாசமான, ஆனால் பொருத்தமான அதிரடித் தேர்வு.
6. அட… அந்தப்பக்கம் ஜனாதிபதிக்கே ‘வயது/அனுபவம்’ தேவையில்லை என்று பிரஸ்தாபிக்கும் போது, கொசுறு ரோலுக்கு நிற்கும் இவருக்கு மட்டும் அனுபவம் தேவையா என்று மடக்கலாம்
7. பார்ப்பதற்கு வசீகரமாக, துப்பாக்கியுடன் போஸ் கொடுக்கிறார். (மிஸ் அலாஸ்கா)
8. மகவுக்கு மூளை வளர்ச்சி குன்றியிருந்தாலும், கருவிலேயேக் கலைக்காமல், ‘உயிர்’ என்று பெற்று வளர்ப்பவர். ‘பெண்ணுரிமை’ பேசுபவர்களை பெண்ணை வைத்தே வாயடைத்துப் போக வைக்கும் நிலைமை 😦
McCain Picks Sarah Palin for Vice President: Alaska’s Sarah Palin is a smart, edgy pol who is exceptionally popular in her home state. But she is still a risky choice for McCain.
Sarah Palin : Big News Page