தசாவதாரத்துக்கு அன்புமணி முட்டுக்கட்டை இடுகிறாரா?


எட்டுக்குடி முருகன் தலம். இது பத்து எட்டாக்குடியர்களைப் பற்றிப் பேசும் பதிவு. முதலில் செய்தி:

Ramadoss whines against wine this time – Politics/Nation – News – The Economic Times: “After rapping Shah Rukh Khan and Saif Ali Khan for smoking on screen and endorsing junk food, respectively, Union health minister Anbumani Ramadoss has spoken out against the Indian Premier League (IPL) for allegedly promoting liquor through surrogate advertising. Asked about surrogate advertising in IPL (liquor baron Vijay Mallya’s team is called ‘Royal Challengers’ named after a whiskey brand owned by his UB Group) the minister said he would take the issue up with the Information and Broadcasting (I&B) ministry.”

இதைத் தொடர்ந்து ரீடிஃப் ஹிந்தி சினிமாவில் நினைவில் நின்ற பத்து குடிக்காட்சிகளைக் கொடுத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் நினைவுக்கு வந்தவை:

1. ‘உயர்ந்த உள்ளம்‘ – குடிகார கமலை, வீட்டு சிப்பந்தி அம்பிகா சீர்திருத்துவார். (அல்லது ‘நானும் ஒரு தொழிலாளி‘யா?)

2. ‘பாட்சா‘ – ‘எட்டு எட்டா மனுசன் வாழ்வப் பிரிச்சுக்கோ பாடலின் முன் காக்டெயில் அடிக்கும் ரஜினி

3. ‘மறுபடியும்‘ – ரேவதி செல்லும் விருந்தில் முன்னாள் கணவனைப் பார்த்து கோபமுற்று மதுவருந்துவது

4. ‘சிந்து பைரவி‘ – சிந்து மீண்டும் ஜேகேபி வீட்டிற்கு வந்து அவருக்கு ஊற்றிக் கொடுக்கும் காட்சி.

5. ‘நவராத்திரி‘ – சிவாஜி: ‘இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்’

6. ‘ஒளிவிளக்கு‘ – ம.கோ.ரா.: ‘தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா; இல்லை நீதான் ஒரு மிருகம்’

7. ‘மாமன் மகள்‘ – கவுண்டமணி & சத்யராஜ் மணிவண்ணனுடன் இளநீரில் கலந்தடிக்கும் க்ளாசிக்

8. ‘ஜெய்ஹிந்த்‘ – ‘போதையேறிப் போச்சு; புத்தி மாறிப் போச்சு’

9. ‘திருடா திருடா‘ – பணம் கடத்தப்பட்டு அறிந்தவுடன் சந்தோஷத்தின் உச்சத்தில் மேஜையில் உள்ள உயர்ரக பானங்களை உடைத்தெறியும் விக்ரம் (சலீம் கௌஸ்)

 • கார்த்திக் நண்பர்களுடன் தண்ணியடிப்பது,
 • ஏற்றிக்கொண்ட விஜயகாந்த் நாயகி வீட்டுக்கு சென்று வீராப்பு பேசுவது,
 • நவீன சுந்தர் சி,
 • நிரந்தர கோப்பையுடன் மேஜர் சுந்தர்ராஜன்,
 • சென்னை சல்பேட்டாவுடன் சுருளிராஜன்,
 • டிக்.. டிக்… டிக் என்று காலையில் பார் அருளும் தேங்காய் ஸ்ரீனிவாசன்,
 • குடிகார வில்லன்களாக மிளிர்ந்த ரகுவரன்,
 • ஹீரோவான பிறகும் புட்டிக்கு அந்தஸ்து வழங்கிய சத்யராஜ்,
 • தெரியாமல் குடித்துவிட்டு சேஷ்டை செய்யும் க்யூட் கதாநாயகியின் இலக்கணமான குஷ்பு
 • விக்கிக் கொண்டே ‘உன்னைக் கண் தேடுதே’ வரும் கணாளனே கண்கண்ட தெய்வம்
 • குடிகாரர் என்றாலே லுங்கி, மீசையுடன் மனைவியை இம்சிப்பவர் என்று பதிய வைத்த வண்ணக்கிளியின் ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’
 • அயல்நாட்டுக்கு சென்றவர்கள் குடித்து சீரழிந்தவர்கள் என்று சித்தரித்த சிரஞ்சீவியின் ’47 நாட்கள்’

வசூல்ராஜா தாதா ஆக குடியை விட்டிருக்கிறார்; சிங்காரி சரக்கு நல்ல சரக்கு என்று குத்து போட்டிருக்கிறார்; சாகர சங்கமம் கிணற்று மேல் ஆட்டம் கண்டிருக்கிறார்; ‘இந்துருடு சந்துருடு‘ என்று ஹை கிளாஸ் ஏந்தியிருக்கிறார்; ‘விருமாண்டி’ என்று சி கிளாசும் அடித்திருக்கிறார்; சோகம் என்றால் குடிக்க வேண்டும் என்று ‘வாழ்வே மாயம்‘ ஆக்கியிருக்கிறார்; ‘உன்னால் முடியும் தம்பி‘ என்று சீர்திருத்தி இருக்கிறார்!

அந்த மாதிரி தசாவதாரக் கலைஞனைத் தடுக்கும் முயற்சியா (இது) இந்த வார கமல் கோட்டா பதிவு.

உதவிய பதிவு: இட்லி-வடை :: குடி குடியை கெடுக்கும்

3 responses to “தசாவதாரத்துக்கு அன்புமணி முட்டுக்கட்டை இடுகிறாரா?

 1. உங்கள் இடுகையை அன்புமணியின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்;
  செவ்வாய்கிழமை உங்களை கண்டித்து
  அறிக்கை வெளியாகும் 🙂

 2. நீங்க குழலிய சொல்லலியே 😀

 3. குழலி எப்போது அன்புமணியானார் இல்லை இருவரும் ஒருயிர் ஈருடலாக
  இருக்கிறார்களா 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.