கல்யாண லிமிடெட் சாதம்


9 responses to “கல்யாண லிமிடெட் சாதம்

 1. அடப் பாவிகளா,

  இப்படி ஒரு சிஸ்டம் இருக்றது தெரியாம எங்க குடும்பத்தில பலமுறை அன்லிமிடெடா செலவு பன்னிட்டோமே. மிச்சம் இருக்றது என் கல்யாணம் தான். அதிலயாவது இந்த மெத்தேட பயன்படுத்திப் பாத்திற வேண்டியது தான்.

 2. பத்மா அர்விந்த்

  இவ்வளவு உணவா? இப்படி வைத்தால் எனக்கு ஒவ்வாமைதான் வரும்.

 3. ஞாயிறு கொன்டாட்டம் :: தினமணியில் இருந்து

  பாம்பே மீல்ஸ்!
  — வே. சுந்தரேஸ்வரன்
  படங்கள் : பி. குமார பாண்டியன்

  கடைகள், மின்சாதனப் பொருள் அங்காடிகள், தனியார் நிறுவன அலுவலகங்கள் என பரபரப்பான தெரு. மதிய வேளையில் எறும்புகள் போல் சாரை, சாரையாக மக்கள் கூட்டம் தெருவோர மாடிப் படியில் விறுவிறுவென ஏறுகிறது. திமுதிமுவென சென்றதால் இலவச கலர் டிவி ஏதும் வாங்கச் செல்கிறார்களா என்று ஊகித்தபடி பின்தொடர்ந்தால், எல்லாம் ஒரு சாண் வயிற்றை ஆற்றுப்படுத்தத்தான் என்பது புரிந்தது.

  ஆம், மதுரை தானப்ப முதலி தெருவில் உள்ள ‘பாம்பே மீல்ஸ்’ உணவகத்திற்குள்தான் இத்தனை கூட்டம்.
  சாப்பிட வருவோரை ‘நமஸ்தே ஜி’ என்று வாஞ்சையுடன் அழைக்கும் உணவகத்தாரின் பக்குவம், சமையல் கலையை விட வாடிக்கையாளரை ஈர்க்கும் கலையை நன்கு கற்றிருப்பது தெரிந்தது. வீட்டில் ஆற அமர்ந்து மூக்கு முட்ட சாப்பிடுவது போல் வட நாட்டினரும், தென்னாட்டினரும் இந்த உணவகத்தில் ஆங்காங்கே ஹாயாக அமர்ந்து ஒரு கட்டுக் கட்டிக் கொண்டிருந்த னர்.

  கம… கம நெய் வாசனை நாசியைத் துளைத்து மூளைக்குள் ஏறிக் குடைந்தபடி நம்மை உசுப்பேற்ற, அதற்குள் அந்த அன்புக் குரல் நம்மையும் உள்ளே அழைத்தது. மேஜையில் பெரிய சில்வர் வட்டத் தட்டில் மணமணக்கும் அவியலும், நெய்விடப்பட்ட சுடச்சுட கோதுமை ரொட்டியும் அங்குள்ள உணவருந்திகளை மகிழ்வித்துக் கொண்டிருந்தது.

  ‘ஸ்ரீ மோகன் போஜனாலயா’ எனும் பெயர் கொண்ட அந்த உணவகம் கடந்த 40 ஆண்டுகளாக அள்ள, அள்ளக் குறையாமல் வாடிக்கையாளர்களுக்கு பாம்பே மீல்ûஸ வழங்கி வருகி றது. மதுரை வரும் வடநாட்டினர் பலருக்கு, மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள இந்த போஜனாலயா மிகுந்த பரிச்சயம்.

  பொதுவாக ஹோட்டல்னா புரோட்டா, சப்பாத்தி அயிட்டங் கள்தான் பரிமாறப்படும். ஆனால், இது அந்த எல்லைக்குள் வராது. பூரியை ஒத்துக் காணப்படும் இந்த கோதுமை ஐட்டத் தின் சுவையே தனிதான். நம் முன் வைக்கப்படும் கோதுமை ரொட்டியை கை விரல்க ளால் மெதுவாகத் தொட்டு இழுத்தாலே பஞ்சு திரிபோல கைக ளில் வந்து அமர்கின்றது. பொக்கை வாய் மூதாட்டிகூட சுவைத் துச் சாப்பிடலாம்.

  “எல்லாம் கைப்பக்குவம்தான்” என்கிறார் இந்த போஜனால யாவை நடத்தி வரும் ராஜஸ்தானைச் சேர்ந்த மோகன்லால் ராவல். இவர், 40 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை வந்தபோது ஒரு துணிப் பையும், சில ஆடைகளும் மட்டுமே இவரது சொத்து. தொழில் பக்தி, கடின உழைப்பு, பணிவான வார்த்தைகள் ஆகியவற்றால் இன்றைக்கு ஏராளமான வாடிக்கையாளர்க ளைப் பெற்றுள்ளார். தற்போது, அவரது மகன்கள் தினேஷ்கு மார் ராவல், கௌதம்குமார் ராவல் இருவரும் உணவகத்தைக் கவனித்து வருகின்றனர்.

  பாம்பே மீல்ஸ் பக்குவம் பற்றி தினேஷ்குமார் ராவல் நம்மி டம் கூறியது: “”பஞ்சாப் கோதுமையை நைஸ் பதத்தில் மாவாக்கி அதை போதிய நீர்விட்டு சிறிதளவு உப்புச் சேர்த்து குழைத்து உருண் டையான பதத்துக்குத் தயார் செய்ய வேண்டும். அதை சிறு, சிறு உருண்டையாக மாற்றி, சப்பாத்திக் கல்லில் அப்பளம் போன்று பரத்த வேண்டும். பின்னர், அதன் மீது லேசாக மாவு தடவ வேண்டும். இதனால், கோதுமை மாவு கையில் ஒட்டாது. தொடர்ந்து, அடுப்பில் வைக்கப்பட்டுள்ள இரும்பு தோசைக் கல்லில் ஒவ்வொன்றாகப் போட்டு, சில நிமி டங்கள் காயவிட வேண்டும். அதன் பின்னர், அனலில் வாட்டி னால், காற்றடைத்த பந்துபோல் பெரிதாகி கோதுமை ரொட்டி தயாராகிவிடும்” என்றார்.

  இத்தோடு சரி, அத்தோடு சரி என்றில்லாமல், கோதுமை ரொட்டியுடன் தொட்டுக் கொள்ள தரப்படும் சைடு அயிட்டங் கள் இன்னும் பல. அதாவது, தால் (பருப்புக் குழம்பு), காய், பட்டாணி, பயறு, உருளைக் கிழங்கு சுக்கா, மசாலா வெங்கா யம், பச்சை வெங்காயம், தயிர் வெங்காயம், புதினா சட்டினி, பச்சை மிளகாய் ஊறுகாய் மற்றும் கேரட், பீட்ரூட், முட்டைக் கோஸ், வெள்ளரிக்காய் கலந்த சாலட், ஒரு கப் தயிர், சுக்கா அப்பளம் உள்பட இன்னும் பல.
  பொதுவாக பாம்பே மீல்ஸ் விஷயத்தில், போதும்யா எந்திரி என்ற பேச்சுக்கே இடமில்லை.

  நீயா? நானா? என்று சவால் விடும் வகையில்தான் கோதுமை ரொட்டியைச் சலிக்காமல் பரி மாறுகின்றனர் சப்ளையர்கள். இதில், “மகனே உன் சமத்து’ என் பது போல் முடிந்தவரை உள்ளே தள்ளலாம். அதன் பிறகும், பச்சரிசி சாதத்துடன் ரசம், மோர்க்குழம்பு, தயிர் என வரிசையாக அயிட்டங்கள் வலம் வரும். மதுரையில் தேர்தலின்போது வந்திருந்த தேர்தல் பார்வை யாளர்களுக்கு விருந்தினர் மாளிகையில் சென்று பாம்பே மீல்ஸ் உணவைத் தயாரித்து வழங்கியதைப் பெருமையாகக் கூறுகிறார் தினேஷ்குமார். “”தரம், சிறந்த சேவை இருந்தாலே வாடிக்கையாளர்கள் நம்மைத் தேடி வருவர். விளம்பரப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ரூ.2-க்கு ஆரம்பித்த பாம்பே மீல்ஸ் இன்றைக்கு ரூ.45-க்கு தருகிறோம். அளவு மீல்ஸ் என் றால் ரூ.16-க்கும் உண்டு” என்றார் அவர்.

  மேலும், இவரிடம் உள்ள ஒரு பட்டியலில் (ஏதோ விலைப் பட்டியல் என நினைத்துவிட வேண்டாம்) கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் நற்சான்றுகள் கையெழுத்துடன் இடம் பெற்றுள்ளன. தினமும் காலை 10 முதல் இரவு 10 மணி வரை இயங்கும் இந்த உணவகத்தில் கம்பு, கேப்பை, சோளம், வெந்தயக் கீரை உள்ளிட்ட ரொட்டி வகைகளும் சுடச்சுட கிடைக்கின்றன.

  -சலாம் பாம்பே!

 4. பத்மா…

  சனி, ஞாயிறுகளில் இந்த மாதிரி உணவுதான் பெரும்பாலும். உள்ளூர் இந்திய உணவகம் / நண்பர் வீட்டு விருந்து என்று மதியம் சாப்பிட்டால், 24 மணி நேரத்துக்கு பசிக்காது; குடிநீர் மட்டுமே போதுமானது 😀

 5. இந்தியாவுக்கு செல்ல மற்றோர் காரணம் 😉 படத்துக்கு நன்றி 😀

  பி.கு: அந்நாள் எந்நாளோ 😦

 6. ஸ்ரீராம் முரளி… பார்த்தால் பசி தீரும் 😛

 7. நூற்றில் ஒரு வார்த்தை சொன்னீர்கள் 😀

 8. ஒரு தபா சொன்னா நூறு தடவ சொன்னா மாதிரி 😀

 9. -சலாம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.