கருத்து சுதந்திரமும் கருத்தாக்கமும்


மாலனின் தினமணிக் கட்டுரை – எதிர்வினை மற்றும் திருமாவளவனுக்கு ஆதரவாக தொடர்பாக:

1.

கருத்துரிமை மீட்பு மாநாட்டில் பேசப்பட்ட விஷயத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அந்த மாநாட்டின் அடிப்படையில் ஒருவரைக் கைது செய்யவேண்டுமா, கூடாதா என்று பார்க்கவேண்டும்

விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் என்ற காரணத்தாலேயே ஈழத்தமிழர்கள் மீதான படுகொலையைக் கண்டிப்பது, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களின் சாவுக்கு இரங்கல் தெரிவிப்பது போன்றவற்றை யாரும் செய்யக்கூடாது என்று சொல்வது கருத்துரிமைக்கு எதிரானது என்றார்.

First Amendment என்று அமெரிக்காவில் பெருமையாக சொல்லிக் கொள்வது பாராட்டத்தக்கது. இஸ்லாமியர்களை புண்படுத்தும் டென்மார்க் கேலிச்சித்திரங்களை வெளியிடுவதாகட்டும்; வெள்ளை இனத்தவர்களே உயர்ந்தவர்கள் என்று பறை சாற்றி, கருப்பர்களை ஆப்பிரிக்காவிற்கே திரும்பப் போகச் சொல்லும் கூ க்ளூ க்ளானுக்கு (Ku Klux Klan) உரிமை தருவதில் ஆகட்டும்; இராக் போர் எதிர்ப்பை சுட்டிக்காட்ட, ஜனாதிபதி வீட்டின் முன் தர்ணா போடுவதாகட்டும்…

கருத்துகள் வெளியில் வர வேண்டும்; முட்டி மோதிக் கொள்ள வேண்டும்; அவர்களின் கேணத்தனத்தையோ புத்திசாலித்தனத்தையோ பொதுமக்களே தெரிந்து கொள்வார்கள். அதற்கேற்ப ஆதரவு பெருகலாம்; அல்லது வாதத்தின் செறிவற்ற தன்மை விளங்கிக் கொள்ளப்படும்.

தொடர்புள்ள பதிவு: Case of the Month October 1999

சுடச்சுட அலசப்படும் புத்தகம்: Amazon.com: Freedom for the Thought That We Hate: A Biography of the First Amendment: Anthony Lewis: Books

குறிப்பிடப்பட்ட தினமணி கட்டுரையின் பிரதி இங்கே கிடைக்கிறது: தடுமாறுகிறார் முதல்வர், ஏன்? – மாலன்

2.

தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது அவர் போர் உடையில் இல்லை. போர் புரியவும் இல்லை

தமிழ்ச்செல்வன் கொலைக்கு ஏன் பரந்துபட்ட அனுதாபம் எழுந்தது?

‘ருஷியாவுக்கு புதிய அதிபர் வந்திருக்கிறார். இனி புடின் செல்வாக்கு செல்லாக்காசு’ என்று சொல்வது போல் இருக்கிறது இந்த போர் விவகாரம். இராணுவ உடை போட்டுக் கொள்ளவில்லை; அதனால் அவர் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் பங்குபெற மாட்டார் என்பது 100% தவறு. அப்பொழுது வாசிக்க கிடைத்த நேரடி பதிவுகளில் தமிழ்செல்வன் கடைசி வரை போராளியாகவே, திரைமறைவு தாக்குதல் திட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டு வந்ததாகவும், அதையே விரும்பியதாகவும் பகிர்ந்தது கிடைக்கிறது.

பூட்டோ இறந்தால் தீக்குளிப்பது முதல் சுகார்தோ மறைவு வரை தொண்டர்கள், தங்களுக்கு பணிக்கப்பட்டதை குழு மனப்பான்மையோடு துக்கம் அனுஷ்டிப்பதை வைத்து, ‘அய்யோ பாவம்… நாலு பேருக்கு நல்லது செய்ததால்தானே கண்ணீர் விடுகிறார்கள்’ என்பது போன்ற வாதமும் ஏற்றத்தக்கதன்று.

அதிகாரபூர்வமாக கன்சலேட், ஹை கமிஷன் போன்ற பெயர்களில் உளவு செய்தியை சேகரிப்பார்கள். ஈழம் தனி நாடு ஆகாத காரணத்தினால், அதிகாரபூர்மில்லாத 007 ஏஜென்டாக தமிழ்செல்வன் செயல்பட்டார். அங்கு தூதரக அதிகாரி என்னும் போர்வை; இங்கே சமாதான தூதுவர் என்னும் வெளிப்படுதல். அவர் ‘இறந்ததை வைத்து மேலும் காசு சம்பாதிக்கலாம்’ என்னும் பிரபாகரனின் திட்டமும் ஒத்துழைக்க தமிழ்செல்வன் பலிகடா ஆகிறார்.

என்னுடைய முந்தைய பதிவு: ஈ – தமிழ்: தமிழ்ச் செல்வனின் மரணம்

தொடர்புள்ள செய்தித் தொகுப்பு, பதிவுகள், வரலாறு, வலையகம்: Snap Judgement: LTTE

One response to “கருத்து சுதந்திரமும் கருத்தாக்கமும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.