வருவான் வடிவேலன் பாடலைக் கேட்க விரும்புவோர் பி சுசிலா பாடல் பக்கம் செல்லலாம்.
இது கடந்த வாரத்தில் என் கண்ணில் பட்ட மலேசியச் செய்திகள்:
1. Malaysian politician proposes ‘shouting therapy’ room for onery lawmakers: “மலேசிய நாட்டின் போர்னியோ தீவின் சட்டசபை மீன் சந்தை போல் சத்தக் கடையாகி விட்டது. உரத்து குரல் எழுப்பி, கவனம் கோருபவர்களை இனிமேல் தனி அறையில் போடப் போகிறோம்.”
அங்கு அவர், ஆசை தீர, எதைத் திட்ட வேண்டுமோ அதைத் திட்டி, எப்படி கைவரிசை காட்ட வேண்டுமோ அப்படி கோபித்து தன் ஆத்திரத்தைத் தணித்துக் கொள்ளப் பரிந்துரைக்கிறார்கள்.
2. Malaysia mulls Internet laws against bloggers: ‘அமைதியைக் குலைக்கும் வண்ணம் செய்திகளைப் பரப்புவது, குழப்பத்தை விளைவிக்கும் தகவல்களை வெளியிடுவது, பொய்க் குற்றச்சாட்டுகளைத் தருவது போன்றவற்றை கணினிக் குற்றங்களின் கீழ் கொண்டு வரப் போகிறோம்’ என்று மலேசியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் மிரட்டியுள்ளார்.
‘இருவர்’ திரைப்படத்தில் வரும் ‘உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே’ காட்சியைப் போல் புகைப்படம் ஒன்றை வலைப்பதிவர் வெளியிட்டிருக்கிறார்.
படத்தில் வீடு; இங்கு ஹோட்டல் அறை.
அங்கு தபூ; இங்கு மலேசியாவின் சட்டசபை உறுப்பினர்.
இருவரில் பிரகாஷ்ராஜ்; இங்கு மணமாகாத ஆடவன்.
நிக்காவிற்கு முன் இந்த மாதிரி உறவு சரியல்லவே (Proxemics – Khalwat) என்னும் விவாதம் எழுந்திருக்கிறது.
தொடர்புள்ள செய்தி: Malaysian news blogs are Warned
3. 70 Hindu Temples to be destroyed in Malaysia: “மலேசியாவில் 70 இந்து கோவில்களை இடித்து அகற்ற உத்தரவு”
நூற்றுக்கணக்கான கோவில் கள் சாலை ஓரங்களில் உள்ளன. பூங்காக்களில் உள்ள மரங்களை இணைத்தும் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கோவில்கள் அனுமதி பெறா மல் கட்டப்பட்டவை ஆகும். தற்போது சாலை மேம்பாடு பணி நடந்து வருவதால், விதி முறையை மீறி கட்டப்பட்ட இந்து கோவில்களை இடித்து அகற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
திருமண மண்டபத்தை இடிப்பதால் விஜயகாந்த்துக்கு ரூ.8.55 கோடி (Vijayganth’s Marriage Hall demolition to make way for Traffic Congestion – Rs 8.55 Crores compensation to be paid) நஷ்டஈடு வழங்கப்படுவது போல் ஆலய நிர்வாகிகளுக்கு மானியம் வழங்கப்படுமா என்று தெரியவில்லை.
Malaysia | News | Blog | lawmakers | politicians | laws | Khalwat | Demolition
நம்பவே முடியவில்லை. அனைத்துப் பாடல்களுமே பொருத்தமாக இருந்ததாக நினைவு!
சின்ன வயதில் வெள்ளித் திரையில் ‘ஃபாரின்’ என்று விரிகள் அகல பார்த்தது. இதற்காகவே கே டிவியில் எப்போது வருகிறது என்று கவனிக்க வேண்டும்.
அரிதான, அருமையான தகவலுக்கு நன்றிகள்.
பிரபா சொல்வது சரிதான். மலேசிய பத்துமலைத் தைப்பூசத்தைப் படமாக்கி வந்து..கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் ஓடும் அளவிற்குக் கொண்டு வந்து…மெல்லிசை மன்னரிடமும் கவியரசரிடமும் கொடுத்து அங்கு ஒரு பாடலைப் போடச் சொன்னாராம். படக்காட்சியோ ஒரு குறிப்பிட்ட கோர்வைக்குத் திட்டமிட்டு எடுக்கப்படாதது. அப்பொழுது உருவான பாடல்தான் பத்துமலைத் திரு முத்துக்குமரனை என்ற பாடல்.
சீர்காழியின் குரலில் முதலில் பாடல் துவங்கும். பிறகு தென்னை கனிந்தொரு தேங்காய் கொடுத்தது சக்தியின் முருகனுக்கே. அதை இன்னும் ஒரு லட்சம் போட்டுடைத்தார் அந்த இன்பத் தலைவனுக்கே என்று தொடர்வார் டி.எம்.எஸ். அதைத்தொடர்ந்து தேங்காய் உடைக்கும் காட்சி வரும். பாடலின் இசை அதற்குப் பொருத்தமாக இருக்கும். அதற்குப் பிறகு “வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா” என்று எல்.ஆர்.ஈஸ்வரி பாட்டைத் தொடருவார். அதற்குப் பின்னர் “பத்தினி இருவரை விட்டு விட்டு” என்று மெல்லிசை மன்னர் பாடுவார். அடுத்து “கன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும் கார்த்திகை தீபமும் ஒன்று” என்று இசையரசியின் குரல் தொடரும். “கோடிக் கணக்கில் பணம் கொடுத்தான்” என்று அடுத்தது பாடியது பெங்களூர் ரமணி அம்மாள். பிறகு எல்லாரும் சேர்ந்து பாட்டை முடித்து வைப்பார்கள். மிகப் பெரிய பாடல் அது.
இந்தப் படத்தின் மற்ற பாடல்களும் அருமையே. “வருவான் வடிவேலன்” என்று வாணி ஜெயராம் பாடல். “ஜாய் புல் சிங்கப்பூர்” என்று இசையரசியும் பாலுவும். “பாரு பாரு சாமி இவ பழைய குறத்தி” என்று எல்.ஆர்.ஈஸ்வரியும் இசையரசியும். “சத்தியத் திருக்கோலம்” என்று டி.எம்.எஸ் மற்றும் வாணி ஜெயராம்.
இந்தப் படத்திற்காக தமிழக அரசின் விருது மெல்லிசை மன்னருக்குக் கிடைத்தது. 79லோ 80லோ வந்த திரைப்படம் என நினைக்கிறேன்.