அவரவர்


சுகுமாரன் எழுதிய ‘இந்தியா டுடே’ விமர்சனத்தில் இருந்து:

தேவதச்சனின் ‘அவரவர் கைமணல்’ (கவிதை தொகுப்பின் தலைப்பு) பிரயோகம் மிக வசீகரமானது. பலரையும் தூண்டிய சொற்சேர்க்கை அது.

‘அவரவர் வானம்’ (மெய்ப்பொருள் – வண்ணநிலவன்)
‘அவரவர் வீடு’ (பயணியின் சங்கீதங்கள் – சுகுமாரன்)
‘அவரவர் உலகம்’ (கணையாழி ஏப்ரல் 1994 – பொன்னாண்டான்)
‘அவரவர் ஏமாற்றம்’ (கவனம் இதழ் 4 1981 – ஷங்கரராமன்)

எனப் பலரும் தேவதச்சனை அடியொற்றி அவரவர் வரிகளை உருவாக்கிக் கொண்டிருப்பதை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

கடைசி டினோசார்
தேவதச்சன்
உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள்: 166
விலை: ரூ. 85/-


6 responses to “அவரவர்

 1. தேவதச்சனின் சில கவிதைகளை நான் குறிப்பிட்டிருந்தது இங்கே. சில வரிகள், தன்னளவிலான முக்கியத்துவத்தைத் தாண்டி எப்போதும் நினைவில் உறைந்துவிடும். தேவதச்சனின் “ஆற்றைக் கடக்கும் காகம்” என்பது ஒருகாலத்தில் என்னை வெகுவாய் வசீகரித்த கவிதை.

  ஆற்றைக் கடந்து செல்லும் காகம்
  களைத்திருப்பது போல் தெரிகிறது
  ஞாபகத்தின் அமிர்தத்தை
  தட்டிவிட்ட
  சப்தத்தில்
  உடல் முழுக்க வெளிறியிருக்கிறது
  ஓவியத்துக்கும் தாளுக்கும்
  இடைவெளியில்
  அசைந்தபடி செல்கின்றன
  சோர்வுற்ற அதன் இறக்கைகள்

  ஓவியத்துக்கும் ஓவியத்திலுள்ள சிருஷ்டிக்கும் இடையிலுள்ள இடைவெளியின் புதிர் பற்றி எழுதுவது எவ்வளவு நுட்பமான ஒரு விஷயம். மேற்கொண்டு சொல்லவேண்டுமெனில் சொல்லிக்கொண்டே போகலாம் 🙂

  பழைய புத்தகக் கடை பற்றி எழுதுகையில்
  “உதிர்ந்த இலைகளை
  புலி ஒன்று
  பார்த்துக்கொண்டிருப்பது போல்
  என் புத்தகத்தை
  இப்போது
  யார்
  வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்”
  என்று அவர் எழுதுகையில் உதிர்ந்த இலையைப் புலி பார்ப்பதையும் புத்தகத்தை நான் வாசிப்பதையும் ஒரே தருணத்தில் பொருத்திப் பார்த்தேன் 😉

 2. (கடைசி டினோசர்) – தேவதச்சனின் 137 கவிதைகளை உள்ளடக்கிய முழுத் தொகுப்பு நூல்
  இந்நூலில் தேவதச்சன் எழுதிய “அவரவர் கைமணல்” மற்றும் “அத்துவானவேளை” ஆகிய கவிதை
  நூல்களில் வெளியான கவிதைகளும் மேலும் சில புதிய கவிதைகளும் இடம் பெற்றிருக்கின்றன.

  இந்த நூலில் எனக்கு நிறைய கவிதைகள் பிடித்திருந்தன. மிகவும் பிடித்த கவிதை என்றால்
  இதைச் சொல்வேன்.

  0
  காற்றில் வாழ்வைப் போல்
  வினோத நடனங்கள் புரியும்
  இலைகளைப் பார்த்திருக்கிறேன்
  ஒவ்வொரு முறையும்
  இலையைப் பிடிக்கும்போது
  நடனம் மட்டும் எங்கேயோ
  ஒளிந்து கொள்கிறது
  0

  தேவதச்சனின் கவிதைகளைப் பற்றிப் பேசும் பொழுது
  பெரும்பாலான விமர்சகர்கள் இந்த வரிகளைச் சுட்டிக் காட்டுவார்கள்.

  காற்றில் அலைக்கழியும் வண்ணத்துப் பூச்சிகள்
  காலில் காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன ..
  0
  ரத்தத்தில் மிதந்து வரும்
  பித்தப்பூவை
  கண்களால் பறிக்கிறேன்..

  அன்புள்ள பாலசுப்ரா

  சும்மா பிட் நோட்டிஸ் மாதிரி போட்டுப் போகக்கூடாது. நீஈஈஈஈஈளமா எழுதணும் 🙂

  அன்புள்ள சன்னாசி

  இலக்கியம் சார்ந்த பதிவுகளில் பெரும்பாலும் உங்க பின்னூட்டம் இருக்குது 🙂
  இதைத் தொடர்ந்து செய்யுங்கள்.நன்றி

  என்றும் அன்பகலா
  மரவண்டு

 3. தொகுப்பை படித்த பிறகு நானும் விரிவாக எழுத முயல்கிறேன். முக்கியமான கவிதைகளையும் தேவதச்ச்சன் குறிப்புகளுக்கும் சன்னாசி & மரவண்டு கணேஷுக்கு பல நன்றிகள்.

 4. Chameleon - பச்சோந்தி

  நன்றி. டிசம்பர் புத்தகக் கண்காட்சியில் (சென்னை)வாங்க வேண்டிய புத்தகங்கள் லிஸ்டில் இதையும் நான் சேர்ந்த்து விட்டேன்.

  :))

 5. Avaravar Kai Manal was the title of the book that had poems by Ananth and Devadachan

 6. // அவர் எழுதுகையில் உதிர்ந்த இலையைப் புலி பார்ப்பதையும் புத்தகத்தை நான் வாசிப்பதையும் ஒரே தருணத்தில் பொருத்திப் பார்த்தேன் ;-)//
  ஆனால் புலி இப்படி வெளியே சொல்லாது அதுவரையில்
  சந்தோஷம் 😉

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.