கலைச்சேவை


Quote: “Opera is when a guy gets stabbed in the back and, instead of bleeding, he sings. – Ed Gardner”

முதுகில் கத்திகுத்து விழுந்த பின் ரத்தத்திற்கு பதிலாக பாடல் வந்தால், அதற்கு பெயர்தான் ‘ஆபரா’ – எட் கார்ட்னர்

More Info on Alfred J. Gaynor's Art drawing $250 in Web auction

 • Natural Born Killers-ஐ அமர்தீப் நினைவுறுத்துகிறார்.
 • நாயக்கர் ஐயாவும் சர்க்கார் ராஜாவும் திரைப்படமாகியதை புதியமாதவி சிலாகிக்கிறார்.
 • Get Rich or Die Tryin’ என்று 50 செண்ட்ஸும் கவனிப்பைக் கோருகிறார்.

  அபு சலீமும் நிறைய செய்திகளில் அடிபடுகிறார். அப்பாஸ், குணால், ‘ஷாலினி’ ரிச்சர்ட் போல் கதாநாயகத் தோற்றம்.

  ரீடிஃபில் கதை எழுதிவிட்டார்கள். மிரட்டலுக்கு பயந்து மனைவியானவர்களில் மோனிகா பேடி முன்னிலை வகிப்பார்.

  ‘உன் குடுமி என் கையில்’ என்று ஹிந்திப் படங்களில் வருவது போல் மோனிகாவின் குடும்பத்தை ஏகே 47 முனையில் இடைவேளை கொடுக்கலாம். கொலை மிரட்டல்கள் இருக்கும். சிறிய வயதில் பாவப்பட்ட கதை இருக்கும். குற்றவாளியாகத் தூண்டிய சமுதாய சித்தரிப்பு கொடுக்கலாம்.

  அமெரிக்காவில் சிறைக்கைதிகளின் படைப்புகளை காருண்யத்துடன் நோக்குவதற்கு ஆதரவு ஜாஸ்தி. ஏற்கனவே ராம் கோபால் வர்மா எடுத்த கம்பெனி முன்னுதாரணமாக இருக்கிறது. அதில் நடித்த ஓபராய்தான் தேச சேவை செய்கிறார். கலைத்தாய்க்கு என்னை அர்ப்பணிக்கிறேன் என்று அபு சலீம் சுயசரிதையாவது எழுதலாம்.

  ஸ்லோபோதன் மிலோசெவிச்சின் கூட்டாளி கவிதைத் தொகுப்பை கொண்டு வந்திருக்கிறார். அதே போல் குண்டுக் காவியங்கள உருவாக்கலாம்.

  ஜெயிலில் இருந்து கொண்டு சுயராஜ்ஜிய சேவா, அதர்ம பரிபாலன் செய்வதை விட சினிமாவுக்கு வந்துவிடுவது நல்லது. பன்ச் டயலாக் கூட ரெடி:

 • ‘மிரட்டினா மிரள மாட்டான் இந்த சலீம்’
 • ‘அபு மிரட்டவும் மாட்டான்; மிரட்டினவனை விரட்டாம ஓய மாட்டான்!’
 • ‘ஒரு தடவை சொன்னா ஆயிரம் தடவை சொன்னதா துடிக்கறே?! நான் ஒரு தடவ குண்டு போட்டு ஆயிரம் பேர தூக்கிறவா?’

  தொடர்புள்ள பதிவு: தமிழோவியத்தில் மீனா


  | |

 • மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Google photo

  You are commenting using your Google account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  Connecting to %s

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.