விஜயகாந்த் அரசியல்


kumudam:: ஸ்டார் டி.வி.க்கு அவங்க (ஜெயலலிதா) பேட்டி கொடுத்தாங்க. பழைய வாழ்க்கை பற்றிய பேட்டி அது. என் மனைவி பிரேமலதா மொழிபெயர்த்துச் சொல்லச் சொல்ல அவ்வளவு அற்புதமாக இருந்தது. கேட்ட கேள்விகளும், அம்மாவின் அற்புதமான பதில்களும் அவ்வளவு உண்மையாக இருக்கும். பார்த்தவர்கள் எல்லோரும் உருகிப்போன பேட்டி அது. அம்மாவின் மிகச் சிறந்த பேட்டி.

எம்.ஜி.ஆர். இறந்தபோது, அவர் அமைதியாக தலைவரின் தலைமாட்டில் நின்றுகொண்டு இருந்தார். அப்போது அவரைப் படுத்திய பாடு, அவர் பட்ட அவமானங்கள் எல்லாத்தையும் ஜீரணித்துக்கொண்டு அவர் தாங்கி நின்ற விதம், இன்னிக்கு அவர் காலூன்றி நிற்பதற்கான அச்சாரமாகத் தோன்றுகிறது.

ஆரம்பத்தில் ஆட்சியில் செய்த சிறுசிறு குற்றங்களை விடுங்கள், இன்றைக்கும் அவரது வழிமுறைகள் பெண்களால் பின்பற்றப்பட வேண்டியவை. சிறு கஷ்டத்திற்கும் அழுது துடிக்கிற பெண்களுக்கு மத்தியில் அவரின் தனித்த கலங்காத தன்மை தன்னிகரில்லாத உதாரணம்.

இதுதான் முடிவு என்றால் முடிவு, லாபமா, நஷ்டமா முடிஞ்ச பின்னாடிதான் பரிசீலிப்பார். இதை நம்ம ஆளுங்க ஆணவம், அகம்பாவம்னு சொல்வாங்க. உண்மையில் அதற்குப் பெயர் தன்னம்பிக்கை.

மத்த தலைவர்கள் வருவாங்க. போவாங்க. அவங்களுக்கான தனிப்பட்ட அடையாளங்கள் கிடையாது.

அவங்களோட பெரிய புகழுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. அவங்களோட வள்ளல் தன்மை. எம்.ஜி.ஆருக்குப் பிறகு கொடுத்துப் பழகிய முதல்வர் அம்மா தவிர யாராவது இருக்காங்களா?

இன்றைக்கு எத்தனையோ துயரப்பட்ட பெண்கள் முன்னுக்கு வரலாம் என்பதற்கு அம்மாதான் உதாரணம். ரோல்மாடல்.

அம்மா பட்ட கஷ்டத்தை யாரும் பட்டிருந்தால், இந்நேரம் எல்லோரும் புலம்பித் தீர்த்து இருப்பாங்க. அவங்களை முதுகில் குத்தியவர்கள் அதிகம். அதை இன்றைக்கு வரைக்கும் பேட்டியில் சொல்லிக்கிட்டதில்லை. தன்னந்தனியாக மீண்டு வந்து, சிரித்த முகமாக எல்லாத்தையும் மறைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அம்மாவோட மூன்று விஷயங்கள்தான் அவங்களோட வெற்றி. துணிச்சல், தன்னம்பிக்கை, விடாமுயற்சி.

3 responses to “விஜயகாந்த் அரசியல்

 1. amma seitha kurrangalsirithu enral ivar seyya pogum(arasiyaluku vanthaal) evalavu perithaga irukkumo…

  mannikavum enaku eppadi thamizhil thattachu seyya theriavilla athanal ippadi.

  ungalathu valaipathivu meegavum nanraka irukirathu

 2. பிபிசி நேர்காணலையும் மொழிபெயர்க்க சொல்லியிருக்கலாம். அதுவும் உருக வைக்கும் பேட்டிதான். என்னவாக இருந்தாலும் கலைஞர் மாதிரி பேட்டி கொடுப்பதற்கு ஆலயம் மட்டும் சென்றால் போதாது. அறிவாலயம் செல்ல வேண்டும்.

  எனக்கு கூட எம்ஜியார் இறுதி ஊர்வலத்தில் முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்று தீராத ஆவல். நடத்தியிருந்தால் ரியாலிடி டிவியாக மக்கள் மனதில் பதிந்து சதி லீலா செய்திருக்கலாம்.

  ‘மறப்போம் மன்னிப்போம்’ என்பது திராவிட குணம். சிறிய குற்றங்களோ, பெரிய கிரிமினலோ, வீரப்பனோ, ராமதாஸோ – மன்னித்தருள்வார்கள் மக்கள்.

  வருமுன் காப்போனாக இருப்பது பழைய முறை. திட்டம், நிர்வாகம் எல்லாம் அறிவுறுத்தினாலும், அதை மீறுவது ஆளுமை, மேலாண்மையாக சொல்லப்படுகிறது.

  இன்றைய தேதியில் பெண்கள் (ஆண்களும்தான்) முன்னுக்கு வருவது முக்கிய காரணம் நடத்துனர்கள்தான். அவர்கள்தானே ‘முன்னால போ’ என்று விரட்டுகிறார்கள்.

  அம்மா பட்ட கஷ்டத்தை வலைப்பதிவர் யாராவது அனுபவித்திருந்தால், எழுதியே கொன்றிருப்பார்கள் என்பது நூற்றுக்கு நூறு சரியே.

  அரசியல் என்று வந்துவிட்டால் நடிப்புதான் என்று ஆகிப் போனது. விஜயகாந்த் அமர்க்களமான அரசியல் தலைவராகப் போகிறார்.

 3. நல்லதொரு நகைச்சுவைக் கட்டுரை படித்த நிறைவு!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.