காலச்சுவடு ஏப். 05


Sify.com ::

* கம்யூனிசமும் மலையாளிகளும் :: சக்கரியா
அதிகார நாற்காலிகளுடன் பழகியதோடு கம்யூனிசத்தின் இலட்சியத் தூய்மை காணாமற் போயிற்று. அதை உருவாக்க உதவிய முற்போக்குக் கேரளத்திலேயே அது ஒரு சனாதனப் பிரிவாக மாறியது. கிராமத் தொழிலாளிகளிடமிருந்தும் ஏழை விவசாயிகளிடமிருந்தும் கம்யூனிசத்தின் அக்கறை மாறி, சம்பளக்காரர்களான வெள்ளைக் காலர் ஊழியர்களிடம் மையங்கொண்டது.

* விவாதம்: வகாபியிசமும் சூஃபியிசமும்
சூபிகள் என்று பின்னர் அறியப்பட்ட முஸ்லிம் ஞானவான்கள் இந்தியாவில் இஸ்லாமைப் போதிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் வகாபிகள் என்று அறியப்பட்டவர்கள் ஏகத்துவத்தை அதிகமாக வலியுறுத்துவதாகக் கூறிக்கொண்டு சில பத்தாண்டுகளுக்கு முன் இந்தியாவில் அறிமுகமானார்கள்.

* உரைப் பதிவு: கவிதை என்னும் விந்தை :: சுந்தர ராமசாமி
அனுபவம் எப்படிப் படைப்பாக மாறுகிறது? ஏன் அது சில நேரங்களில் ஆற்றல் பெறுகிறது? பல நேரங்களில் ஏன் ஆற்றல் பெறாமல்போகிறது? சில கவிதைகளைப் படிக்கத் தொடங்கியதுமே அது விருப்பமின்மையையும் அலுப்பையும் ஏற்படுத்துகிறது. வேறு சில கவிதைகளை எத்தனை முறை படித்தாலும் அவை அலுப்பை ஏற்படுத்துவதில்லை.

* தலையங்கம்: ஜனநாயகத்தைத் துறக்காதீர்கள்
அரசியல் சந்தர்ப்பவாதத்தை ஊக்குவிப்பது, அதிகாரத்தைக் கைப்பற்ற எதையும் செய்வது என்பவை உடனடியாகச் சில லாபங்களைப் பெற்றுத் தரலாம். ஆனால் அது உருவாக்கும் அரசியல் பண்பாடு ஜனநாயகத்தின் அடிப்படையை அரித்துவிடும். மதவாதத்திற்கான மாற்று, ஜனநாயகமே தவிர அதிகாரத்துவம் அல்ல. இதை இடதுசாரிகளும் காங்கிரசின் ஏனைய கூட்டாளிகளும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

* அகாடமிகளின் விருதுகள் :: அ ராமசாமி
பிராமண எதிர்ப்பு, நவீனத்துவ எதிர்ப்பு என்னும் இரண்டும் கைவரப்பெற்ற ஒரு குழு இப்பொழுது அதிகாரத்திலிருக்கிறது. எனவே அவர்களின் ஆதரவாளர்களும் அவர்களை ஆதரிப்பவர்களும் குஷி அடைவது நடந்துகொண்டுதான் இருக்கும்.

* தூரிகை மொழி: வண்ணங்களில் ஒளியும் நிலப்பரப்புகள்
அரூப ஓவியங்களில் பொதுவாக நமக்குக் கிடைக்கக் கூடிய அனுபவத்தை ரமேஷின் ஓவியங்கள் தருவதில்லை. அது வேறு விதமான அனுபவம். நமக்குப் பரிச்சயமான ஒரு காட்சியை, அல்லது பல காட்சிகளை, மனத்தில் தோன்ற வைத்து, இந்த ஓவியங்கள் காட்டுவது அவற்றைத்தானோ என்று நம்மை நினைக்கச் செய்யும் தந்திரத்தை ரமேஷ் கையாள்கிறார்.

* பெரியார்: புதிய பார்வைக்கான அவசியம்
சில வாதங்களும் எதிர்வினைகளும் பெரியாரின் சிந்தனைகளை, அவர் வாழ்ந்த காலத்தின் சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் சூழலின் தன்மையோடு பொருத்திப் பார்க்கும் ஆய்வு நோக்கை முற்றிலும் மழுங்கடிக்கக் கூடியவை.

* அறிவுஜீவிகளின் ஆழ்மனத்தில் என்ன இருக்கிறது?
பெரியார் மீதான மறுவாசிப்பைத் தொடர்ந்து ‘மறுப்புகள்’ என்ற பெயரில் வெளிவந்துகொண்டிருக்கும் கட்டுரைகளும் கடிதங்களும் இந்து ஆழ்மனத்தில் என்ன இருக்கிறது என்பதனைத் தெளிவுபடுத்துவதாகவே இருக்கின்றன.

* வெற்றுத் தலைகளின் பெருக்கம் :: களந்தை பீர் முகம்மது
பாகிஸ்தான் ஓர் இஸ்லாமிய நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் வகுத்த நெறிமுறைகளின்படியும் குர்ஆன் வலியுறுத்தும் சமூக ஒழுங்குகளின்படியும் ‘ஒரு முஸ்லிம் நடிகை’ என்கிற சமூக அந்தஸ்து ஒன்று இருக்கவே இருக்காது. ஓர் இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு விரோதமான செயல்களைப் புரிந்தபடியே, தான் வாழ்வதற்கான ஒரு பாதுகாப்பை ஒருவர் கோரிப் பெறவும் வழியில்லை.

* அதிநுண் நுட்பத்தின் சின்னஞ்சிறு உலகம் :: வெங்கட்ரமணன்
நுண் தொழில்நுட்பத்தில் பொருள்கள் அடிப்படை அலகுகளான அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளைக் கொண்டு கட்டியெழுப்பப்படுகின்றன. இந்தச் சின்னஞ்சிறு உலகம் வித்தியாசமானது, தீராத அலைச்சலைக் கொண்டது.

* பத்திரிகைச் சுதந்திரமும் பத்திரிகைத் தர்மமும்
பத்திரிகைச் சுதந்திரமும் பத்திரிகைத் தர்மமும் ஒன்றுக்கொன்று எதிரானதா? அவற்றின் எல்லைகள் என்ன? இரண்டும் சந்தித்துக்கொள்கிற அல்லது மோதிக்கொள்கிற இடம் எது?

* கோணங்கள்: எது அவமானம்? :: கண்ணன்
நரேந்திர மோடி போன்ற ஓர் அரசியல்வாதி தொடர்ந்து பதவியில் இருப்பது நமக்கு அவமானம். இந்த அவமானத்தைப் பல ஆண்டுகளாக சகித்துக்கொண்டிருக்கும் நமது அரசு அமைப்புக்கு அமெரிக்காவின் நடவடிக்கை அவமானமாகத் தெரிவது நகைப்புக்குரியது.

* பத்துக் கவிஞர்களின் பன்னிரண்டு கவிதைகள்

* கலைச்செல்வன்: இன்பமெனச் சில கதைகள், துன்பமெனச் சில கதைகள் :: கண்ணன்
பாரீஸ் ரயில் நிலைய முகப்பில் சந்திப்பதற்கு முன் நான் அவர் குரலைக் கேட்டதில்லை; அவர் கையெழுத்தைக் கண்டதில்லை; முகத்தையும் பார்த்ததில்லை. சில குழப்பங்களுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொண்டோம். நேர்த்தியான உடலமைப்பும் முகவெட்டும் கொண்டவர். நட்புணர்வு மிளிரும் முகம். சந்தித்த சில நிமிடங்களிலேயே மனத்தில் குதூகலம் குமிழியிடத் தொடங்கியது.

* சிறுகதை: நதியின் புன்னகை :: ஜே பி சாணக்யா
மூத்தவளுக்கும் இளையவளுக்கும் ஒரு வயது வித்தியாசமிருந்தது. இளையவள் சென்ற மாதம் பூப்பெய்து இத்தோடு நாற்பது நாள்கள் முடிகின்றன. அவர்களிருவருக்கும் கால்சட்டை போட்டுத் திரியும் அவன்தான் சினேகிதன். மூத்தவளுக்குத்தான் அவனை மிகவும் பிடிக்கும். அவனும் அல்லும் பகலும் அவளோடுதான் இருந்தான்.

* தலையங்கம்: ஜெயகாந்தனுக்கு ஞானபீடப் பரிசு
வெகுஜன இதழ்களின் வாசகர்கள் பலரைத் தீவிர எழுத்தின் பக்கம் திருப்பியதில் இவருக்குக் கணிசமான பங்கு உள்ளது. பலவீனமான அப்பிராணி என்பதாகத் தமிழ்ப் பொதுப் புத்தியில் உறைந்துபோயிருந்த எழுத்தாளன் குறித்த படிமத்தைக் கலைத்து அவனுக்கென்று ஒரு கெüரவத்தை ஏற்படுத்தியதிலும் ஜெயகாந்தனின் பங்கு அளப்பரியது.

* அசோகமித்திரன் – 50: ஒர் உரை, இரு பதிவுகள்
கடந்த பிப்ரவரி 12 அன்று சென்னை, தென்னிந்திய திரைப்பட வர்த்தகச் சபை அரங்கில் அசோகமித்திரன் – 50 என்னும் நிகழ்வு நடைபெற்றது. கிழக்கு பதிப்பகமும் கடவு இலக்கிய அமைப்பும் நடத்திய அக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சுந்தர ராமசாமியின் உரையை இரு வேறு இதழ்கள் பதிவுசெய்த விதம் கவனத்திற்குரியது.

* எதிர்வினை: தலித் எழுத்தாளர்களின் கூட்டறிக்கை
எங்கள் கூட்டறிக்கை மூன்று இதழ்களில்தான் வெளிவந்திருந்தது. ஆனால் கூட்டறிக்கையை வெளியிடாத ஏறக்குறைய 10க்கும் மேற்பட்ட இதழ்கள் அதற்கான மறுப்பறிக்கைகளை மட்டும் வெளியிட்டிருந்தன. இதுவே பார்ப்பனர் அல்லாத ஆதிக்க சாதியினர் பெற்றிருக்கும் மீடியா அதிகாரத்தைக் காட்டுகிறது.

* மதிப்புரை: மாலன் சிறுகதைகள்
இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் சுவாரஸ்யத்தை முன்னிறுத்தி எழுதப்பட்டவை. இதன் தரம் குறித்த நிச்சயமின்மையே இத்தொகுப்பின் இருப்பிற்கான நியாயம் குறித்தும் கேள்விகளை எழுப்புகிறது.

* இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட்: சில பழைய நினைவுகள் :: பி ஏ கிருஷ்ணன்
1978ஆம் ஆண்டு. அணியில் பிரசன்னா, சந்திரசேகர், கவாஸ்கர், அமர்நாத் சகோதரர்கள், விஸ்வநாத், வெங்சர்க்கார், காவ்ரி, செüஹான், கிர்மாணி ஆகியோர் இருந்தனர். கபில் தேவ் என்று அதிகம் கேள்விப்படாத ஒரு இளைஞனும் இருந்தான். புறப்படுவதற்கு முன்பே இது ஒரு நல்லெண்ணப் போட்டி என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.

* மதிப்புரை: ஏ.கே. செட்டியாரின் ‘அண்ணல் அடிச்சுவட்டில்’ :: இமையம்
நாமறியாத, நம்ப முடியாத பல அரிய தகவல்கள் இந்நூலில் உள்ளன. அவை நம் வரலாற்று அறிவை மறுமதிப்பீடு செய்யக் கோருகின்றன.

* அசோகமித்திரன் சிறுகதைகளினூடே ஒரு பயணம் :: அரவிந்தன்
அசோகமித்திரனின் படைப்புகளில் அங்குமிங்குமாகச் சுமார் 100 பக்கங்களையேனும் படிக்கும் ஒரு வாசகருக்கு அவரது படைப்புலகின் சில முக்கியமான தடங்களை இனம்காண முடியும். தமிழின் முக்கியமான கலைஞர் ஒருவரது படைப்புக் களத்தில் தான் நடமாடுவதையும் இதன் மூலம் உணர்ந்துகொள்ள முடியும்.

* இயற்கை வேளாண்மை குறித்த புரிதலை நோக்கி
எஸ்ஆர்ஐ முறை 19 நாடுகளில், பல்லாயிரக்கணக்கான நெல் விவசாயிகளுக்குப் பரவியிருக்கிறது. பல தேசிய, சர்வதேச மாநாடுகளில் வெற்றிக் கதைகளின் பரிமாற்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

One response to “காலச்சுவடு ஏப். 05

  1. // கம்யூனிசமும் மலையாளிகளும் :: சக்கரியா// ஒட்டுமொத்த மலையாள படிப்புலக, அறிவார்ந்த பிம்பத்தினை ஒட்டுமொத்தமாகப் போட்டு உடைந்திருப்பார். திராவிட ஆட்சிகளின் மீது நிறைய விமர்சனங்கள் இருந்தாலும், தமிழில், தமிழ் எழுத்தில், பல்வேறுவிதமான நடைகள், இஸங்கள், எழுத்துச் சூழல்கள் இருந்திருக்கின்றன, இருந்து வருகின்றன. மலையாள எழுத்துலகம் இன்னமும் எனக்கு தெரிந்து பலமாக தான் இருக்கிறது. இங்கே காலச்சுவடு, உயிர்மை போன்ற இடைப்பத்திரிக்கைகள், 10,000 பிரதிகளை விற்க முட்டி மோதிக் கொண்டிருக்கும்போது, மாத்யமம் போன்ற மலையாள பத்திரிக்கைகள் ஒரு இலட்சத்திற்கும் மேல் விற்கின்றன. ஆனாலும், கம்யுனிசமும், இலக்கியமும், கள்ளும், மழையும், பீடியும் இல்லாத ஒரு மலையாள இலக்கியத்தினை நினைக்க முடியவில்லை. ஒரு வேளை இன்னும் சில ஆண்டுகளில் நடக்கலாம்.

    அத விடுங்க. தருண் தெஜ்பாலின் Alchemy of Desire புத்தகத்திற்கான பால் சக்கரியாவின் விமர்சனத்தினை படியுங்கள். தெஹல்கா தளத்திலிருக்கிறது. என்ன நடை, என்ன ஆங்கிலம், சே பொறாமையாக இருக்குப்பா, அந்த மாதிரி ஆங்கிலத்துல எழுதறது 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.