உயிர்மை – ஏப். 2005


Sify Tamil

* ஜெயகாந்தனுக்கு ஞானபீடம்
தமிழ் இலக்கியத்திற்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் பெரும்பாலான சந்தர்ப்பங்கள் கூச்சத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்துவதாகவே இருந்து வந்திருக்கின்றன.

* விவாதத்தைத் தொடரலாம்
தொழில் அக்கறையுடனும், கொஞ்சம் சமூகப் பொறுப்புடனும் எடுக்கப்பட்ட சினிமாக்கள் பலவற்றையும் பார்த்து விடுவதும், பேசிக்கொள்வதும் தமிழ் சினிமாவின் பார்வையாளர் உளவியலாக இருக்கிறது. அந்தப் பொது உளவியலில் எந்தவித மாற்றமுமின்றிக் ‘காதல்’ படமும் பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மீதான கூடுதல் அக்கறை இப்படி விவாதிக்கப்படுவதுதான்; காதல் பார்க்கப்படவும் விவாதிக்கப்படவும் வேண்டிய படம் என்பதில் மாற்றுக்கருத்து எனக்கு இல்லை

* அசோகமித்திரன் படைப்பு மீதான அவதூறு
உயிர்மை இதழில் அசோகமித்திரனுக்கு நடந்த பாரட்டுக்கூட்டம் பற்றிய செய்தியைப் படித்தேன். தமிழிலக்கியத்தின் பெரும்படைப்பாளியாகக் கருதப்படும் ஒருவருக்கு அவரது முதிர்ந்த வயதில், அவரது வாழ்நாளிலேயே முதன்முறையாக நடத்தப்பட்ட அப்பாராட்டுக் கூட்டத்தில் சுந்தரராமசாமி ஆற்றிய உரையில் இருந்த எள்ளல் தொனி குறித்துப் பலரும் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினர்.

* தம்பி
பெயர் எம். சரவணகுமார். எம். ஏ., ஆங்கில இலக்கியம்; ஒரு தனியார் கல்லூரியில் வேலை; கரிய திடமான உடல்; கன்னங்கரிய நறுக்கப்பட்ட மீசை. நான் மேஜை மீது முன்னால் சாய்ந்து அவனை உற்றுப் பார்த்தேன். அப்படிப் பார்க்கும்போது நோயாளிக்கு அது ஒரு ஆய்வுப்பார்வை என்று படக்கூடாது.

* எரியும் வீடு
அது ஒரு தேவடியாகுடி என்று துளிகூட சந்தேகம் வராது. பார்த்தால், கோயில் என்று வர்ணித்துவிட முடியாது என்றாலும், அதை ஒரு விடுதி என்றும் கருதிவிட முடியாது. ஷாம்தான் உறுதியாக, என்னை அங்கே அனுப்பி வைத்தார். ‘உனக்கு ஒரு பிரச்சினையும் வராது.

* பெண்களும் அறிவியலும்
பத்து பெண் அறிவியலாளர்கள் பெயர்களைக் கூறமுடியுமா? என்று கேட்டுப் பாருங்கள் அல்லது உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். பலர் அறிந்த ஒரே பெண் அறிவியலாளர் மேரி க்யுரி. ஆனால் ஐன்ஸ்டின், நியுட்டன், ஜகதிஷ் சந்திர போஸ், சி. வி. ராமன் என்று பலராலும் பட்டியல் தரமுடியும். ஏன் அறிவியலில் பெண்கள் இல்லையா? இல்லை அவர்கள் அதிகம் அறியப்படவில்லையா?

* கலைநயமிக்க மதுக்குவளைகள்
16 ஆம் நூற்றாண்டின்
இறுதி வருடங்களில் ஓர்நாள்
அழகிய மரமஞ்சங்கள் செய்யும் தச்சன் ஒருவனை
கிழக்கிலிருந்து பாயும்
ஒரு நதிக்கரையோர சிறுநகரத்தில்

* கவிதை:மழை உடல் கொண்டவன்
வெயில் ருசித்தவாறு ஐஸ்கிரீம் கடிக்கும்
மழை உடல் கொண்டவன் மீது
சொட்டுச் சொட்டாக உதிர்கிறது
முன்பு பெய்த மழை.

* கடிதங்கள்
யதார்த்தத் தளத்திலிருந்து பாய்ந்து அதிபுனைவைத்தொட்டு மீளும் சிறுகதைகளில் ஒன்றாக ஜெயமோகனின் ‘அறைகள்’ சிறுகதையைக் கூறலாம்

* திரைப்படம் : ப்ளாக்
பாலிவுட் மெய்யாகவே மாறிக்கொண்டிருக்கிறது. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கூட அதன் தயாரிப்புகள் மசாலா என்கிற அடைமொழியால் அழைக்கப்பட்டு பரிகாசத்திற்குள்ளாகின.

* காட்சிகளில் மால்கம் எக்ஸ்
ஆப்பிரிக்க அமெரிக்கத் தலைவரான மால்கம் எக்ஸ் பற்றிச் சற்று அறிந்திருந்தாலும், ரவிக்குமார் அவரைத் தமிழில் வழங்கியபோது கூடுதலாக அறிய முடிந்தது.

* பொன்னகரம்
சேலம் நகரத்தில் ‘தாதுபாய் குட்டை’ அல்லது ‘கிச்சிப் பாளையம்’ என்னும் ஸ்தலநாமம் கொண்ட இடத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது நள்ளிரவு தாண்டியிருந்தது. அர்த்த ஜாமத்தில் தங்குவதற்கான இடம்தேடி அலைவதில்லை என்ற முன்தீர்மானத்தின்படி, அங்கிருக்கும் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் அடைக்கலம் புகுந்திருந்தேன்.

* லோர்கா எனும் சிற்பி
‘இக்கேனஷியா சாஞ்சஸ் மெஜஸ்’ என்ற வீரன் 1934ஆம் ஆண்டு, காளைச் சண்டையின் இறுதியில் காளையால் குத்தி வீசி எறியப்பட்டு ரத்தக் காயத்துடன் மைதானத்திலே இறந்துபோய்விடுகிறான். அவனது நண்பனும் கவிஞனுமான பிடெரிகோ கார்சியா லோர்க்காவிற்கு விற்குத் தகவல் சொல்கிறார்கள். லோர்கா அதை நம்ப முடியாமல் எத்தனை மணிக்கு நடந்தது என்று கேட்கிறான்

* கடவுளைக் கொல்பவர்கள்
உலகச் சிந்தனை மரபுகள் அனைத்தையும் இருபெரும் பிரிவுகளுக்குள் அடக்க முடியுமென்றால் அவை இறைநம்பிக்கை, இறைநம்பிக்கை அற்றவை என்ற பகுதிகளாகப் பிளவுபடும். இறை நம்பிக்கை என்பது எவ்வளவு தொன்மையானதோ அதே அளவுக்கு இறைமறுப்பும் தொன்மையானதே.

* கருப்புக் கிறிஸ்துவும் வெள்ளைச் சிங்கங்களும்
‘சிகப்பழகு’ என்னும் புதிய தமிழ்ச்சொல்லொன்று ஒன்று தமிழகத்தில் உலவி வருகின்றது இன்று. வெள்ளைத் தோலுக்கு இப்படியொரு அபத்தமான தமிழ்ப்படுத்தல். சருமத்தை வெளுக்க வைப்பதாகக் கூறப்படும் தைலங்களும், களிம்புகளும் விளம்பரப்படுத்தப்படுகின்றன

* தேவதச்சன் கவிதைகளில் புனைவும் வனப்பும்
புதுக்கவிதையை இன்னமும் புதுக் கவிதை என்று சொல்லத்தான் வேண்டுமா? நவீன கவிதை என்று சொன்னால் என்ன? இப்படிச் சிலர் கேட்கின்றனர். 1978இல் ‘ழ’ கவிதை ஏடு தொடங்கியபோது நானும் ஆத்மநாமும் இதைப் பற்றிப் பேசினோம். கவிதை என்று சொன்னாலே போதும் என்றே இருவரும் கருதினோம்.

* தேசிய நியாயங்கள் : ‘மற்றவரை வெளியேற்றுவோம்’
சென்ற மாதம், நான் குடந்தையிலிருந்தபோது ஒரு நூல் வெளியீட்டு விழா. பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ நாவல் வெளியீட்டைக் கிட்டத்தட்ட ஒரு கட்சி மாநாடு போல நடத்தினார்கள் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியினர்

* ரிச்சர்ட் டி சொய்சா: குதறி எறியப்பட்ட ஆளுமையின் புன்னகை
திடீரென வீட்டு வாசலில் கிறீச்சிட்டு நிற்கும் ஜீப் வண்டி அல்லது ஒரு வாகனம்; அதிலிருந்து வீட்டிற்குள் குதிக்கும் சீருடை அணிந்த, அணியாத அரசினதோ, ஆயுதக் குழுக்களினதோ அடியாட்கள்; அச்சம், இழுத்துச் செல்லப்படுதல், வீட்டிலிருப்பவர்களின் கதறல் இவையெல்லாம் இலங்கையின் யுத்தப் பிரதேசத் தமிழ்ப் பேசும் மனமொன்றிற்குப் பரிச்சயமான ஒரு நிகழ்வு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.