பத்துப் பாடல்கள்


நான் அடிக்கடி கேட்ட தத்துவ/சோகப் புலம்பல்களில் இருந்து பத்து பாடல் வரிகள். இவற்றை விட புகழ்பெற்ற பாடல்கள் இருந்தும், போன தடவையே, மக்கள் அனைவரும் ஊதித் தள்ளியதால், 6,7,9 ஆகியவை தனியார் தொலைக்காட்சியின் ஆதிக்கம் ஆரம்பித்தபிறகு வந்த படங்களிலிருந்து வந்திருக்கிறது!

———————————————

1. ஆறு கரையில் அடங்கி நடந்திடில் காடு வளம் பெறலாம்…

…பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை…

2. மரணத்தில் இல்லாத துன்பம் உன் கண்ணீரில் வந்ததம்மா…

…கண்ணே நீ வாடாத நந்தவனம்

கண்ணீரைத் தாங்காது இந்த மனம்

3. நேற்று இவன் ஏணி

இன்று இவன் ஞானி

ஆளைக் கரை சேர்த்து

ஆடும் இந்தத் தோணி

4. முன்னாடி வாழ்க்கை

கல்லு பட்ட கண்ணாடி போல

என் பொண்டாட்டி வாழ்க்கை

முள்ளுமேல பட்டாடை போல…

5. ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக் கூடாதோ…

6. வான்மழையில்தான் நனைந்தால்

பால்நிலவும் கரைந்திடுமா

தீயினிலே நீ இருந்தால்

நிலவொளிதான் சுகம் தருமா

7. உன் கைகள் என் பேனா துடைக்கின்ற கைகுட்டை

நீ தொட்ட அடையாளம் அழிக்காது என் சட்டை

8. புள்ளி வச்சு கோலம்தான் போட்டது அந்த சாமீ

கோலங்கள மீறித்தான் ஆடுது இந்த பூமி

…பூவெல்லாம் சாமிதான்

நாமெல்லாம் நாரு

9. சரணம் 1: உன் பேரை நான் எழுதி

என்னை நான் ரசித்தேன்

சரணம் 2: கூந்தலில் சூடினாய்

வாடுமுன் வீசினாய்

அடீ… காதல் பூவைப் போன்றதுதானா

10. ஒரு ராத்திரி

ஒரு காதலி

விளையாடத்தான் போதுமா?

ஒரு சூரியன்

பல தாமரை

உறவாடினால் பாவமா?

—————————————

9 responses to “பத்துப் பாடல்கள்

 1. இது இந்த பதிவின் சம்பந்தபட்ட பின்னூட்டம் அல்ல

  பாலா, என் பதிவில் நீங்கள் கேட்டிருந்தீர்கள், நான் அன்பே சிவம் திரைப்படத்தின் MPG ல் இருந்து ஒரு frame extract செய்தேன். யாரோ ஒரு நண்பர் வழியாக அந்தப் திரைப்படம் எனக்கு கிடைத்தது. உங்களுக்கு வேண்டும் என்றால் அந்த sequence (2 or 3 minutes, MPG) அதை வெட்டி, யாஹூ ப்ரீஃப்கேஸில் ஷேர் செய்து வைக்கிறேன். சொல்லவும்.

 2. சுலபமான பதில்களை மட்டும் நான் சொல்லிடுறேன். மத்தவங்களுக்கும் கொஞ்சம் சான்ஸ் கொடுக்கனுமில்லையா. 🙂

  3.ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் (படிக்காதவன்)
  5. மணி ஓசை கேட்டு எழுந்து (பயணங்கள் முடிவதில்லை)
  10. வாழ்வே மாயம் (வாழ்வே மாயம்)

  /நவன் பகவதி

 3. முதலுக்கு இப்போது 🙂

  1. “இந்தப்பச்சைக்கிளி(லி :-))க்கொரு செவ்வந்திப்பூவில் தொட்டிலைக் கட்டிவைத்தேன்” – நீதிக்குத் தலைவணங்கு – வரலக்சுமி

  மீதிக்கு எப்போதோ? 😦

  சிறு பரி பெருங்கீரனாகி வரமுன்னாலே ஓட்டமோ ஓட்டம் நான் 😉

 4. -/, மீதிக்கு மொதல்ல போய் ‘பட்டுத் துகிலுடன் அன்னச் சிறகினை மெல்ல’ இடும் 🙂

 5. 6. வான்மழையில்தான் நனைந்தால்
  பால்நிலவும் கரைந்திடுமா
  தீயினிலே நீ இருந்தால்
  நிலவொளிதான் சுகம் தருமா

  அன்பைச் சுமந்து சுமந்து
  அல்லும் பகலும்….

  படம் – பொன்னுமணி

 6. 6. வான்மழையில்தான் நனைந்தால்
  பால்நிலவும் கரைந்திடுமா
  தீயினிலே நீ இருந்தால்
  நிலவொளிதான் சுகம் தருமா

  அன்பைச் சுமந்து சுமந்து
  அல்லும் பகலும்….

  படம் – பொன்னுமணி

 7. 1. ஆறு கரையில் அடங்கி நடந்திடில் காடு வளம் பெறலாம்…
  …பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை…

  இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவினில் தொட்டிலை கட்டிவைத்தேன் – நீதிக்கு தலை வணங்கு

  3. நேற்று இவன் ஏணி
  இன்று இவன் ஞானி
  ஆளைக் கரை சேர்த்து
  ஆடும் இந்தத் தோணி

  ஊரை தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் – படிக்காதவன்

  4. முன்னாடி வாழ்க்கை
  கல்லு பட்ட கண்ணாடி போல
  என் பொண்டாட்டி வாழ்க்கை
  முள்ளுமேல பட்டாடை போல…

  எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு பொம்பள உண்டு – பாட்டுக்கு ஒரு தலைவன்

  5. ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக் கூடாதோ…

  மணியோசை கேட்டு எழுந்து – பயணங்கள் முடிவதில்லை

  6. வான்மழையில்தான் நனைந்தால்
  பால்நிலவும் கரைந்திடுமா
  தீயினிலே நீ இருந்தால்
  நிலவொளிதான் சுகம் தருமா

  அன்பை சுமந்து சுமந்து – பொன்னுமணி

  9. சரணம் 1: உன் பேரை நான் எழுதி
  என்னை நான் ரசித்தேன்
  சரணம் 2: கூந்தலில் சூடினாய்
  வாடுமுன் வீசினாய்
  அடீ… காதல் பூவைப் போன்றதுதானா

  நீயில்லை நிலவில்லை – பூச்சூடவா

  10. ஒரு ராத்திரி
  ஒரு காதலி
  விளையாடத்தான் போதுமா?
  ஒரு சூரியன்
  பல தாமரை
  உறவாடினால் பாவமா?

  வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் – வாழ்வே மாயம்

 8. சில க்ளூக்கள்:

  2. ‘கண்ணுக்குள்ளே வா வா
  நெஞ்சுக்குள்ளே போ போ’

  4. (கேவியார்):
  இவர் இன்னும் ‘தலைவன்’ ஆகவில்லை. இன்னும் காவல் காத்துக் கொண்டிருக்கிறார். என்று ஒத்த பூ தோட்டமாகுமோ!

  7. அலைபாய்ந்ததால் தடைப்பட்டாலும் பைத்தியமாக்கும் பாடல்கள் இல்லாவிட்டாலும், விமர்சகர்களின் வரம் கேட்ட படம்.

  8. Life is a circle என்கிறார் ஜேசுதாஸ்.

  9. இந்தப் பாட்டை யாராவது கண்டுபிடிப்பார்கள் என்று நான் நினைக்கவேயில்லை! இன்னொரு ஸிம்ரன் ரசிகர் 😛 சூப்பருங்க கொஸப்பேட்டை சார்.

  10.
  >>> வந்தனம் என் வந்தனம்

  பலருக்கும் ‘வாழ்வே மாயம்’ டைட்டில் சாங் நினைவுக்கு வந்திருக்கிறது. க்ளைமாக்ஸில் வரும் அந்தப் பாடலின் வரிகள் அனைத்துமே மனதில் இருக்கிறது. ‘டொய்ங்… டொய்ங்…’ என்ற பிண்ணனியில் ஸ்ரீப்ரியா தீபாரதனைத் தட்டை எடுத்து வர, ஒற்றிக் கொள்ளும் நேரம் அணைந்து போகும். மனதில் நின்ற செண்டிமெண்ட் காட்சி.

  நான் +2 தேர்வின் கடைசித் தேர்வான கம்ப்யூட்டர் சயின்ஸ் எழுதப் போகும்போது எனக்கும் இந்த மாதிரி சம்பவம் நிகழ்ந்தது 🙂

  தினமும் பள்ளிக்கு செல்லும் வழியில், பிள்ளையாரை அரகரா போட்டுக் கொண்டு செல்லுதல் வழக்கம். ஸ்பெஷல் தினங்களில் ஆரத்தி எடுக்கும் வரை காத்திருந்து, விபூதி வாங்கிக் கொள்வோம். கடைசித் தேர்வின் நாளன்று, கொஞ்சம் காற்று அதிகம். நாலு பேர் வரிசையில் நான் கடைசி. அர்ச்சகர் ஆரத்தியை நீட்ட, நான் கையை நீட்ட, கற்பூரம் அணைந்தே போச்சு. நல்ல வேளை ‘வாழ்வே மாயம்’ முடிவு எதுவும் நிகழவில்லை 😉

 9. 2. நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று – பொன்னுமணி

  4. பாடாத தெம்மாங்கு – பூந்தோட்ட காவல்காரன்

  7. பிரிவொன்றை சந்தித்தேன் – பிரியாத வரம் வேண்டும்

  எட்டாவது பாடல் மட்டும் எட்ட மாட்டேங்குது தலைவரே. வந்தனம் பாட்டு முழுசும் தெரிஞ்சும் கொஞ்சம் சொதப்பிட்டேன். நெஞ்சுக்குள்ளேவும் அப்படி தான்.

  சிம்ரன் ரசிகனா?? ஹீஹீஹீ அந்தப் பாட்டுல சிம்ரனை மறந்தால் அப்புறம் இந்தத் தமிழ்சினிமா உலகத்தில் பாவி ஆவேன் :-).

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.