விமர்சனம் எழுத வேண்டிய ஹாலிவுட் படங்கள்


 1. The Accidental Tourist: அமைதியான படம். முடிவு ஏமாற்றமளிக்கிறது, ஆண்,பெண்களின் திருமண உறவின் எதிர்பார்ப்புகளை ஓரளவு நன்கு அலசும் படம்.
 2. Duplex: தயவு செய்து பார்க்காதீர்கள். ஏன் என்று எழுதலாம்.
 3. Adaptation: நான் ஒருவிதமாகப் புரிந்து சிலாகித்தேன். என் மனைவி இன்னொரு விதமாய் புரிந்து கொண்டு ரசித்தாள். உங்கள் ரசனை எப்படி இருந்தாலும் பார்க்க வேண்டிய படம்.
 4. Y tu mama tambien: ஸ்பானிஷ் படங்களுக்குத் தப்பாமல் கொச்சைப்படுத்தபடும் உறவுமுறைகள், அதிர்ச்சியூட்டும் காட்சியமைப்புகள், அடவைஸ் கொடுக்கும் தோரணை என்றிருந்தாலும், முடிவு என்ன என்று பார்த்த பிறகு, மீண்டும் முதலில் இருந்து மறுவாசிப்பைக் கோரும் படம்.
 5. Mulloholland Drive: வித்தியாசமான திரைக்கதை அமைப்பு. ஆய்த எழுத்தை ஆராதித்தால், இந்தப் படத்தையும் இரு முறை பார்க்கலாம்.
 6. Bend it like Bekham: நார்மல் படம். நம்ம ஊரு கதை.
 7. Road to Perdition: டாம் ஹான்க்ஸ் உருப்படியாக நடித்த (அரிதான) படம். அந்தக் கால நடை உடை சமாசாரங்களை இம்மி பிசகாமல் கொண்டு வந்ததற்காகவே கை தட்டலாம் என்றலாம், சிறப்பான திரைக்கதை, முடிவு என்று பலதையும் சொல்ல வேண்டும்.
 8. Inventing the Abbotts: ஜெனிஃபர் கானலி சிந்தனையைத் தூண்டாவிட்டாலும், உளவியல் அலசல்களை சப்-டெக்ஸ்ட்டாக சொல்லுகிறார்கள். உண்மை என்ன என்று தோண்டித் துருவுகிறோம்; தெரிந்து விட்ட அடுத்த விநாடியில் புழுவாய்த் துடிக்கும் சில கதாபாத்திரங்களின் ஆய்வு.
 9. Bruce Almighty: ஒரே ஒரு தபா பார்க்கலாம். அற்புதமாக எடுக்கப் படவேண்டிய கதையை எவ்வாறு கொடுமை படுத்தலாம் என்பதை அறிந்து கொள்ள. நல்ல கரு; மோசமான திரைக்கதை + படத்தொகுப்பு!
 10. Chicago: நொடிக்கொரு பாடல் வந்தாலும், அலுக்காமல், ஒவ்வொன்றிலும் அசத்திய, தியேட்டர் டிராமாவைத் தழுவிய படம். ஒரிஜினலைப் பார்த்து விட்டு படத்திற்கு இண்ட்ரோ கொடுக்க வேண்டும்.

5 responses to “விமர்சனம் எழுத வேண்டிய ஹாலிவுட் படங்கள்

 1. //டாம் ஹான்க்ஸ் உருப்படியாக நடித்த (அரிதான) படம்.
  tom hanks rasigar manRathin saarbaga idhai vanmaiyaga kandikkiren :-). Boba, ungalukku tom hanks pidikkada? (captain miller, chuck noland, forrest gump, paul edgecomb,andrew beckett characters ai vida epdi mike sullivan better aga budiyum?)

  – sodabottle

 2. Castaway – Chuck Noland, ஃபாரஸ்ட் கம்ப்பில் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் கமலின் ஆக்கிரமிப்பு.

  கேப்டன் மில்லர் போன்று எனக்கு அவருடைய (கொஞ்சம் சிவாஜித்தனம்?) நடிப்பு ரசிக்காத படங்கள் சில: Sleepless in Seattle, Apollo 13, Big.

  க்ரீன் மைல் நிறையக் கேள்விப்பட்டேன்; பார்க்க வேண்டும். Philadelphia is class apart (IMHO, his best, apart from Catch Me If You Can & Toy Stories 😉

 3. RTP ‘ok type’-ன்னு கேள்விப்பட்டேனே.
  Green Mile, in hindsight, is more of a spiritual movie. ஆனா, மூணு மணி நேரம் நல்லா போகும்.
  Chicago பார்க்கும் தைரியமே வரவில்லை 🙂

 4. Road to Perdition அருமையான மசாலா படம். ‘சிகாகோ’ பயந்து கொண்டேதான் பார்க்க ஆரம்பித்தேன்; ஆனால், க்வீன் லத்தீஃபாவின் ‘அம்மா’ பாடலுக்காகவேனும் பார்த்துவிடுங்கள்.

 5. Comparing ‘Mulholland drive’ with ‘Ayutha Ezhuthu’… Unbelievable Subra.. or should I say indigestible?

  -dyno

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.