பெருசுகளின் பெருங்காப்பியங்கள்


கலைஞரின் “தொல்காப்பியப் பூங்கா”, சுஜாதாவின் “புறநானூறு ஓர் எளிய அறிமுகம்” போன்ற புத்தகங்கள் மூலமாவது சங்க இலக்கியங்கள் மேல் இத்தனை வெளிச்சம் விழுவதற்கு நான் நன்றி சொல்கிறேன். எளிய முறையில் இலக்கணத்தின் சூத்திரங்களை விளக்கி தொல்காப்பியம் அப்படி ஒன்றும் கடினமான விஷயமல்ல, இதைப் பார்த்துப் பயப்பட வேண்டாம் எனப் பூங்கா நிரூபிக்கிறது என்கிறார் சுஜாதா. அவ்வாறே சுஜாதாவின் புறநானூற்றுக்கும் நிறைய புகழாரங்கள் சூட்டப்படுகிறது.

ஆனால், வெகுஜனங்களால் விரும்பப்ப்டுபவர்களால் எழுதப்பட்டதாலோ, என்னவோ, இந்த இரண்டு புத்தகங்களுமே அச்சுப்பிழை, பொருட்குற்றம், நிறைவின்மை, உணர்வு முழுமை இல்லாமை என்று விமர்சகர்களின் சக்கரவியூகத்தில் அகப்பட்ட அபிமன்யுவாய் விழிக்கிறது.

தொடர்ந்து பாலகுமாரன், ப.கோ.பி., வாஸந்தி, வாலி போன்றோர் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை என்று நவீன மொழியில் மறுபதிப்பித்தால் அவைகளுக்கும் பெரியோரால் ஆசீர்வதிக்கப்பட்ட, பாடல் பெற்ற தலம் போல், தீட்சையளிக்கப்பட்ட இலக்கிய அந்தஸ்து கிடைக்கலாம்.

பேராசிரியர் தொ. பரமசிவன் ‘இந்தியா டுடே’யில் (ஜல்லை 9, 2003) ஒரு கடுமையான

விமர்சனம் எழுதியிருந்தார்:

கூடல்.காம்

என்னுடைய முந்தைய பதிவு

காலச்சுவடில் வெளியான கட்டுரைகள், தமிழ் சி·பியில் கிடைக்கிறது:

ச. நவநீதகிருஷ்ணன் – காலச்சுவடு/சிஃபி

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் எல்லாப் பிழையும். . . – காலச்சுவடு/சிஃபி

என்னுடைய கேள்விகள்:

1. ஏற்கனவே க்வாலிடியுடன் கூடிய பல உரைகள் இருந்தும், இவர்கள் புதிதாய் ஒன்று எழுதுவது எதற்காக?

அ. எங்க டீமும் ஓலிம்பிக்ஸில் பங்குபெற்றது.

ஆ. போதை மருந்து உட்கொண்டாவது (பிறரை வைத்து எழுதியாவது) பணம் சம்பாதிப்போம்.

இ. நாங்க பெண்டாதலன் வீரர்கள் (கதை, பாடல், இயக்கம், ஒளிப்பதிவு இன்ன பிற செய்த எண்பதுகளின் இயக்குநர்கள் போல).

ஈ. எழுதுவதற்கு வேறு எதுவும் அகப்படவில்லை.

2. முத்தொள்ளாயிரம் போன்றவைகளுக்குக் கூட சிறப்பான உரை இருக்கிறது. புலியூர் தேசிகன் எழுதினாரா, வானதி வெளியீடா என்று தெரியவில்லை. ஆனால், அனைத்துப் பதிப்பகங்களும் ஒரு உரையை, அவர்களின் ஆஸ்தான எழுத்தாளரைக் கொண்டு வெளியிட்டிருக்கும். இணையத்தில் எளிதாக எதுவும் கிடைப்பதில்லை என்பது குறையே. அதற்காக, சொக்கன் புதிதாக மீண்டும் ஏன் எழுதுகிறார்?

3. மீனாக்ஸின் ‘சென்னைத் தமிழில் புறநானூறு’, நடைமுறை வாழக்கையின் பிண்ணனியில் ஜெயமோகன் மனதில் நிறுத்திய ‘சங்கச் சித்திரங்கள்’ போன்றவை வித்தியாசமானதாகவும், வெறும் உரையை மட்டும் விரிக்காமல், வேறு கோணங்களில் விவரித்தது. புதுக்கவிதையில் சுஜாதா எழுதினாலும், அதுவும் உரைதானே? உள்ளத்தைத் தொடும் படைப்பாக இல்லாமல், அர்த்தத்தை மட்டும் போடும் மடித்து எழுதப்பட்ட அருஞ்சொற்பொருள்தானே?

4. முத்தொள்ளாயிரத்தில் 2700 பாடல்கள் இருக்கிறதா? (3 * தொள்ளாயிரம்). பெரிய ப்ராஜெக்ட்டை கையில் எடுத்திருக்கும் சொக்கனுக்கு வாழ்த்துக்கள். ஆனால், பொருள் கொடுப்பதோடு நிற்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களுக்கு, அன்றைய கலாசாரம், சரித்திரப் பிண்ணனி, இன்றைய வாழக்கைக்கு எவ்வாறு பொருந்துகிறது போன்றவற்றையும் கோர்வையாக விவரித்து கொடுத்தால், வித்தியாசமான உரையாக இருக்கலாம்!?

-பாஸ்டன் பாலாஜி

2 responses to “பெருசுகளின் பெருங்காப்பியங்கள்

  1. -/பெயரிலி.

    பாலாஜி,
    கால(ச்)சுவட்டிலே இந்தக்குத்துவெட்டுகளைச் சில மாதங்களின் முன்னே படித்தேன். இதிலே இருவகை அடாவடித்தனம் இருக்கின்றதாகத் தெரிகின்றது. ஒன்று, எதையும் சுஜாதா சொன்னாற் சரிதான் என்ற வாசகர்களின் எதிர்பார்ப்பிலே சுஜாதா ஆழம் தெரியாமல் தொடர்கதை எழுதும் வேகத்தோடு மேலோட்ட விளக்கம் கொடுப்பது. மற்றைய புறம், சுஜாதா மீது விழும் கண்டனங்கள் சில வேளை அவரின் கருத்து வழுக்களின் மீதில்லாமல், “இவனெல்லாம் எப்படி எழுதலாம்” என்றோ, அல்லது அவரின் “எழுத்தாளர் புகழ்”மீதோ குறி பார்த்து வைக்கப்படுவது.

    கிட்டத்தட்ட குமுதம் போன்ற சஞ்சிகைகளுக்கும் காலச்சுவடு போன்ற சஞ்சிகைகளுக்கும் இந்த அடிதடி-குத்துவெட்டு வைப்பதிலும் வளர்ப்பதிலும் எதுவிதமான வித்தியாசமும் இல்லை – எதைப் பற்றிய குத்து வெட்டு என்பதைத் தவிர்த்து. இரு வகைச்சஞ்சிகைகளிலும் விற்பனை சேர்க்க இந்த “இலக்கியசண்டை”கள் உதவுகின்றன.

  2. Pingback: Writer Sujatha « Snap Judgment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.